கட்டில் என்ன கவியரங்கமா
கட்டியணைக்க கவிதைவருமா
மெத்தை விழுந்தேன் வித்தை குழந்தை.
மொத்தம் அறிந்தும் மொழிகள் ஏனடா.
காரணக் கதையளக்க நேரமிதுதானா
கண்கள் கலந்திட கவிதை தேவைதானா
இதழ் என்றொன்றை இறைவன் எதற்கு படைத்தான்
ஈரிதழ் ஈருடன் இணைந்து மலராகதான்.
வீண்வாதம் வைக்காதே வந்து சரணடை
கொடியிடை பிடித்தே இமயம் ஏறி
இதழில் முத்தம் பதிப்பகம் போல் பதித்திடு.
கண்ணா நான் குமுதமல்லவே வாரம்வரை காக்க.
மன்னா நீ தீண்டும் ஆனந்த விகடனை - கொஞ்சம்.
முன்னால் தள்ளிவிட்டு என்னை பாரடா.
நடுநிசியில் நாடகத்தமிழேனடா
நாயகி நான் தினமலரே.
நாடியெனை மனமுணர்ந்து குங்குமப்பூவாய் ருசியடா.
நாடியெங்கும் புதுரத்தம் சுனாமியாக பொங்கிட
நாடுமெனை ஊடலென வதைக்காதே.
தீண்டாமை ஒழிந்தது சில ஆண்டுகளானது தேசத்தில்.
தீண்டாமை தண்டனைக்குரியது தேகத்தில்.
வேண்டாமை இருப்பின் செல்வேன் மீண்டும் - தனியறை.
தூங்காமை நம்மை நிச்சயம் வாட்டும்.
அல்நேரத்தில் அணைக்காது ஆவல் அவளை
அல்லல் ஆக்குதல் அன்பிற்கு அழகோ.
அணையாவிளக்காய் அடியேன் அழுகவே
அன்பின் அறத்தை அழகாய் ஆற்று.
தீ தீண்டும் பிள்ளை போல் - தினமும்
நீ தீண்டும் தொல்லை தருவாய்.
பூ மாலை பூஞ்சையாகுதற் போல் - நானும்
ஏங்கி கிடப்பதாய் தூது போ
பரணோடும் நல்லதொரு எலியே..
إرسال تعليق