அம்பொன்றை எய்திருந்தால் - நின்
அக்கினி சொல்லால் எரித்திடுவாய் - என்றே
அறிவிலா காளி நின் அன்பை பெற- அவளும்
ஆற்றங்கரை நாவல்பழச்சுவையோடு குரங்கிதயம் கேட்ட முதலை போல்- ஆனாள்.
நல்லதோர் வீணையென நீர் கேட்ட - வரங்கள்
நல்கிட இயலாது வாழ்வனைத்தும் துன்புறுத்தினாள் - சிவசக்தி
குசேலனுக்கு அவல்தின்று செல்வமளித்த - கண்ணனனோ
குருங்கண்ணாலும் நினை பார்க்காமலே போய்விட்டான்.
இன்று உன் கவித்திறனை கொண்டாடுபவர் பலர் - ஆனால்
அன்று அரைவயிற்று சோற்றுக்கு யாருமில்லை - மண்ணும்
இமயமும் எங்கள் மலையென்றாயே- கடந்த
இந்திய விடுதலை நாளில் உனைப்பற்றி பேசக்கூட யாருமிலை.
நின்று சிரித்து நிகண்டு படைத்த குள்ளசாமி - சொன்ன
நித்திய சூத்திரங்களை உலகுறைத்தாயே - பின்பு
நீர்தான் ஏன் போதைக்கு அடிமையானாய்.
அன்பிற்குறிய காளியோ யானையனுப்பி தாக்கினாள் - அண்ணலே
அந்ததுயரத்திலேயே நோயுற்று மடிந்தாய். - ஆயினும்
அக்கினி குஞ்சும் புதுமைப்பெண்ணும் இன்றும் - நின்புகழ்
ஆகாயமாய் விரிய காக்கின்றனர்.
மீண்டும் ஒருநாள் கர்த்தரை போல் - நீயும்
மீண்டு வருவாய் என நம்பியே. - தாய்தமிழ்
மீளாத்துயரை மறைக்கிறது - அல்லேல்
மீச்சிறு அக்கினி குஞ்சாய் நானும் உளேன்.
إرسال تعليق