வக்கில் சார் கொஞ்சம் அவசரம் உடனே போகனும். சொல்லும் நான் நான்தான்.(பெயர் தெரியுமில்ல)
இம் ரெஸ்ட்ரூம் ப்ரீயாதான் இருக்கு போ. என்பது வக்கில் வெங்கி.
இது காமடிடைம் இல்ல. ஐம் வெரி சீரியஸ். நுழைந்தான் கார்த்தி. டேய் கார்த்தி வண்டியெடு டைம் இல்ல. ஏன்ணா மறுபடியும் சாமியார் கேஸா. அடடா அண்ணா வண்டி மெக்கானிக் கிட்ட விட்டுருக்கேன். இட் டேக்ஸ் சம் டேஸ்.
சரிவா.. என் வண்டியாவது எடுத்துட்டு போகலாம். எது அந்த வண்டியா முதல்ல ஸ்டார்ட் ஆகுமா? நிறுத்தி எத்தன வருசமாகும் தெரியுமா?. ம். பட் லெட்வீ ட்ரை.
என் பழைய இண்டிகா காரினை நிறுத்தி சுமார் ஓராண்டு 9 மாதங்களாகும். சாவியுடன் திறந்து மெல்ல ஹீட்டரை ஏற்றி. ஸ்டார்ட் செய்ய ஸ்டார்ட் ஆனது.
வாவ் வாட்ட மெடிக்கல் மிராக்கல். ஹாலிவுட் படங்கள்ள ஔிச்சு வெச்ச வண்டி மாதிரி டக்குனு ஸ்டார்ட் ஆகுது.
டேய் கார்த்தி இது எப்படி மெடிக்கல் மிராக்கள் ஆகும் இது மெக்கானிக்கல் தான. என்பது வெங்கி.
உடனே ஏறுங்க சீக்கிரம் சீக்கிரம். விருட்டென கிளம்பி பங்கில் 300 ரூபாய் டீசல். அடித்து. டயருக்குள் காற்றை நிரப்பி.வேகமாய். செல்கிறாேம். 2.0 மணி.
இது சாத்தியமல்ல ஆனால் செய்திடலாம் எப்படியாவது. காரணம் நெடுநாட்கள் ஆகிவிட்டது. அரசாங்கம் 30-40 என அறிவித்த வேக சாலையில் 80க்கு மேல் சீறிச்செல்கிறது கார். ஒரு பஸ் ஒருகார் அகலத்துக்கு மட்டுமே போதுமான சாலை. சரக்குலாரிகள் அதிகம் பயணிக்கும் சாலை. தருமபுரி டூ சென்னை செல்லும் சாலையும் கூட.ஏகபட்ட வண்டிகள் செல்லும் இடைஞ்சல் . மூன்று நான்கு முறை பெரும்விபத்திற்கான சாத்தியங்களக்குள் நுழைந்து நூற்பிழையில் தப்பித்துள்ளேன். 15 கீமீகள் தாண்டிட 2:15 .
டேய் டயர் எல்லாம் மொழுமொழுனு இருக்குடா. இஞ்சின் ஆயில் ரேடியேட்டர் கூலண்ட் னு எதுவுமே இருக்காது இந்த ஸ்பீட் வேண்டாம். . இல்ல வெங்கி டைம் இல்ல 2:30க்கெல்லாம் புலியூர் போயாகனும். .
எனக்கென்னமோ புலியூர் செல்லும் சாலையில் கார்விபத்தில் மூன்று வாலிபர்கள் பலி ன்னு பேப்பர் நியூஸ் வரமாதிரி தெரியுது. அதெல்லாம் ஒன்னும் ஆகாது கார்த்தி என்ன ப்ரேக் மட்டும் தான் வேலசெய்யல.
அய்யயோ. ப்ரேக் இல்லாம எப்படி?. அத உங்க வக்கீல் பாஸ்கிட்ட கேளு. அவர் தான் மெக்கானிக்கல் இஞ்சினீயர் ஆச்சே. .
இக்கும் அவருக்கு மெக்கானிக் வரலனுதான் வக்கீல் ஆனதே. டேய் ப்ரேக் இல்லனாலும். கியர் ல ஸ்பீட் குறைக்க முடியும். டாப்ல போகும் போது 4வது கியர் போட்டு க்ளச்விட்டா ஸ்லோ ஆகும் ஜாம்மிங் னால. அப்படிதான் நிறுத்தனும். சினிமா பாத்துபாத்து இது யாருக்கும் தெரியல.
சினிமானவுடனே எனக்கு ஒன்னு ஞாபகம் வருது வக்கீல் சார். டாட்டா பிர்லா படத்துல பார்த்திபனும். கவுண்டமணியும் ப்ரேக் இல்லாத கார்ல டெட்பாடியோட ஒரு காமடி வருமே . அது மாதிரி.
அதெல்லாம் இருக்கட்டும் ஏன் இவ்வளவு அவசரம். என்ன பிராப்ளம்?. சொல்றேன் சார் முதல்ல அங்க போகலாம்.
2:45 புலியூர்க்கு இன்னும் 3 கிமீ தான். எப்படியும் புடிச்சர்லாம். சாத்தியம் தான் சாத்தியம் தான்.
புலியூர் சென்றவுடன். ஒரு ஸ்கூல் காம்பவுண்ட்க்குள் நுழைய. வக்கீல் எதாவது சீரியஸான விசயமோ என கேட்டான். ம்.
உள்நுழைந்து பஸ்களின் அருகில் சென்று. சார் பஸ்க்கு கண்ணாடி ரப்பர் மாத்தணும்னு சொன்னாங்க.
போனடித்தது . ஆ சொல்லுங்கப்பா. எங்க இருக்க? இங்க புலியூர்க்கு வந்தேன். உன்ன யாரு அங்க போக சொன்னா? நீங்கதான போய்ட்டு வான்னு சொன்னீங்க.?. நான் அப்பிடி சொல்லவேயில்ல. இங்க கடைக்கு வா . ஒரு டாடா ஏசி கண்ணாடி மாட்டனும்னு சொன்னாங்க. முதல்ல அத பாரு. கடயவுட்டுட்டு எங்காயாச்சும் போயிறது. ஆமா எனக்கு ஆச பாருங்க இங்க வந்து கண்ணாடி மாட்டணும்னு. நான் பாட்டுக்கு கடையில உட்காந்து கதைபுக்கு படிச்சிட்டு இருந்தேன். அது ஒன்னும் இப்ப அவசரமில்ல. முதல்ல இந்த டாடா ஏசி பாரு.
சார் நான் நாளைக்கு வரேன்னு சொல்லிடுங்க. இப்ப கொஞ்சம் அர்ஜெண்ட் கடைல கொஞ்சம் வேல.
பாருங்க மக்களே. மை டேஸ் மூவ்ஸ் லைக் திஸ்..
إرسال تعليق