உளியாய் இருப்பாய் இனி நீ உழைத்தால் உலகம் சிலையாய் ஔிரும்
துளியாய் இருப்பாய் இனி உன் திறத்தால் உலகம் கடலாய் மிளிரும்..
வழிகள் திறக்கும் திறங்கள் திறந்தால் புவியும் புதிதாய் முளைக்கும்.
ஔியாய் ஔியாய் இருக்கும் விழிகள் விழித்தால் உலகம் விடியும்
சில நியாயங்கள் மீறுதடா
அநியாயங்கள் ஏறுதடா
ருசியாய் பல கொலைகள் செய்வது
என்பது சகஜமானதடா
இனி நாள் வரும் என்பதும் தோள் வரும் என்பதும் கனவாகி போனதடா
அட சட்டங்களே இங்கு தீர்வில்லை என்பது சத்தியமானதடா.
உளியாய் இருப்பாய் இனி நீ உழைத்தால் உலகம் சிலையாய் ஔிரும்
துளியாய் இருப்பாய் இனி உன் திறத்தால் உலகம் கடலாய் மிளிரும்..
வழிகள் திறக்கும் திறங்கள் திறந்தால் புவியும் புதிதாய் முளைக்கும்.
ஔியாய் ஔியாய் இருக்கும் விழிகள் விழித்தால் உலகம் விடியும்
இனி நியதிகள் தேவையில்லை
யுகச் சூழ்ச்சிகள் தீர்வதில்லை
பல தீரத்தினால் எழும் புரட்சியினால்
இனி துயரங்கள் தீர்ந்துவிடும்
சில ஆயிரம் ஆயிரம் வீண்மீன் கீற்றுகள்
இன்பத்தை வாரித்தரும்
அட வேதனை வாட்டிய சாதனை கூட்டங்கள் சரித்திரம் கொண்டுவரும்.
உளியாய் இருப்பாய் இனி நீ உதைத்தால் உலகம் சிலையாய் ஔிரும்
துளியாய் இருப்பாய் இனி உன் திறத்தால் உலகம் கடலாய் மிளிரும்..
வழிகள் திறக்கும் திறங்கள் திறந்தால் புவியும் புதிதாய் முளைக்கும்.
ஔியாய் ஔியாய் இருக்கும் விழிகள் விழித்தால் உலகம் விடியும்
விதையாய் முளைப்பாய் உனக்கும் ஒருநாள் மழையாய் உலகம் பொழியும்..
إرسال تعليق