எழுதப்படாத கவிதைகள் - காகிதப்பூவே.

காகிதப்பூவே காகிதப்பூவே
உன் எழில் மேலே ஓரிடம் வேண்டும்
வார்த்தைகள் தன்னை ரசித்ததும் இல்லை
வரிகளுக்குள் நான் வசித்ததும் இல்லை
காகித்பூவே....

பாரதி் கனவில் உதித்ததும் இல்லை
கம்பனின் வரியில் பிறக்கவும் இல்லை
நிதமொரு கண்கள் படித்ததும் இல்லை
நிலவினை கவியாய் வடித்ததும் இல்லை.
மாந்தர்கள் தினம்பேசும் வார்த்தையில் வசிப்பேன்
எனக்கென தனியாக வாசகர் கேட்பேன்
பூமிபாடும் பாடலாக நான் என்று ஒலிப்பேன்.

காகிதப்பூவே ....

தென்றல் போல வரும் காற்றுக்குள் ஒன்றாய் சேர்ந்துவரும் என் சொற்கள்
கொஞ்சம் காதுதரும் நெஞ்சத்துள் தஞ்சம் புகுந்துவிடும் என்பாக்கள்.

கவிதையின் பெயரை  எடுக்கவும் இல்லை
கனிந்தவர் செவியில் ஒலிக்கவுமில்லை
புவியினில் இருந்து பறக்கவும் இல்லை
புல்வெளி பனியாய் இருக்கவுமில்லை

வாழ்க்கையில் சிறப்பான நாட்களும் இல்லை
வாழ்வதும் சிலநேரம் பிடிக்கவுமில்லை
ஏழையெந்தன் சோகம்கீதம் கேட்கப்பவர் இல்லை.

காகிதப்பூவே...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم