இரவுராணி இன்றேனோ இறங்கற்பா எழுதுகிறாள்.. அவள்வேண்டும்
இறப்பிற்கு இன்னும் இனியநாள் இருக்கிறதே.
வகையொரு தினம் நிதமொரு மனம் - வந்தவள்
வனப்பினை சுகித்து வளந்தனை பொழிந்தும்.
ஏனோ எழுதுகிறாள் எழவுபாட்டு என்னாச்சி - அவளுக்கு
மாதசுழற்சியோ மார்க்கெட் போனதோ இல்லையே.
நேற்றினன் நேயம் நோவுதின் நேயம் - அடப்போ
கண்ணுக்குள்ள நிக்கும் நெஞ்சுகுள்ள விக்கும்
காதுகூட விரும்பா கடுஞ்செய்தி என்கிறாள்- என்னவாம்
காசுகுடுக்கலையோ வந்தவன் என்கிறாள் இன்னொராணி
வாழ்க்கையென்ன இரவின் செயல் மட்டுமோ - என்றவள்
வரிவரியாய் எழுதுகிறாள் விழிவழிநீர் சிந்திட
நாளொரு தினம் தவறாத சபலக்காரி - இன்றேனடி
இந்தகரும காரியம்எல்லாம் என்றமற்றோர் ராணி
காலம்முழுக்க கட்டில்தானாடி கன்னடக் கிளியே - நானின்று
காலைச்சூரியன் பார்த்தேன் வாழ்வின் இன்பமது.
நெஞ்சுவிம்மும் இறங்கறபா எழுதுபவள் இன்பஞ்சொல்ல - என்னாடியிது
என்றவள் கைபிடி காகிதம் பிடிங்கயே.
ஏன்டி இப்படி எழவெடுக்குற எழுதுனாலும் - நாலுநச்சினு
ஏன்டி அலையிற அடுத்தாளு வரதுக்குள்ள.
எதுக்குடி நமக்கு கவிதை கருமம் - வேணுமடி
மற்றொரு காமம் துய்க்குமுன் மனமாற
அப்படி என்ன சோகம்டி எழுவுபாட்டுக்காரி - எதிர்வீடு
குழந்தை டெங்கு வந்து செத்துப்போச்சடி.
அறை மவுனம் தான் நிதர்சனம்..
إرسال تعليق