கரு - வாழ்வோம் மீண்டும்
மனிதர்கள் - இருந்தால் நன்று
இடம் - பூமியாகவும் இருக்கலாம்
நேரம் - நீங்க எந்த டைம்லைன்
உயிர் பொருள் - நியூட்ரினோ
உயிரில்லா பொருள் - ஆக்சைட்
தெய்வப் பொருள் - மதச்சண்டை முடிவுக்கு வரட்டும்
உணர்வு - ஹார்மோன் டிஸ்ராபி
கேமரா ஆங்கிள் - ஹேட்ரோ ஆங்கிள் சிசிடிவி 360.
யானும் நீயும் யார் யாரோ - நேற்றில்
நானும் நீயும் ஒன்றானோம் - இன்று
ஜீவக்கடல் போல் வாழ்வில் - நாமும்.
சவமாயும் வாழ்வோம் மீண்டும்.
ஆனந்த கூத்தாடுகையில் - உடனே
ஆழ்ந்த துயர்வருகையில் - கூடவே
ஆறுதல் துணையாய் - இங்கே
ஆட்கள் இருந்தால் நன்று.
தூரப்பொய்கையும் பொய்கைத் தாமரையும் - கொண்டு
நாரைக்கொக்கும் தென்னங்கீற்றும் - தென்றலுடன்
தாரைமழையும் காடுகளும் - கொண்ட
இவ்விடம் பூமியாகவும் இருக்கலாம்.
நேற்றோ நெற்றிச் சந்திரனில் - பின்பு
இன்றோ இதழ் செவ்வாயில் - அட
பூமிக்கு மட்டும் பொது நேரமா என்ன
நீங்க எந்த டைம்லைன்.
ஆற்றலின் ஆதிமூலம் போலவே - உயிர்
போற்றும் அணுக்குவியலில் நீந்திடும் - கதிரியக்க
கார்பனோ புரதமோ அணுவோ - அதனினும்
துகளென நுண்ணிய நீயூட்ரினோ.
ஆசையற்ற காதல் உறவு - நிலையாது
காமமற்ற காதல் முளைத்து - வளராது
ஞாயமற்ற செல்வம் கூட நம்மை
அழிக்கும் தீவிஷ ஆக்சைட்.
பக்கத்து தீவினில் தெய்வத்தை - தேடி
பக்குவமாய் தெய்வம் ஆனவர்கள் - கோடி.
திக்கற்று திரியும் மரமண்டை - மனிதர்களுக்கு
வித்திட்டதொரு மதச்சண்டை.
ஆபத்து காலத்தில் அச்சமுய்தலும் - அஃதோடு
ஆனந்த சூழலில்இன்பமெய்தலும் - அடடே
என்னே விந்தை இதயமே இயக்கமே
உணர்வென்பதே ஹார்மோன் டிஸ்ராபி.
அடடா மனமொரு குரங்கென்றார் - குரங்கா
நிலையா நிலைகண்டு சொன்னார் - அவர்தான்
கனாவிலும் கண்டிலார் யான்காணும் - இக்காட்சி
ஹேட்ரோ ஆங்கிள் சிசிடிவி.360 உடையது. என
நம்பிடத் தகார் ஆவார் அவர்காள்..
إرسال تعليق