உயிரியல் எப்படி கடவுளாகும்? ம் இருக்கு விசயம் இருக்கு. நானும் வக்கில் வெங்கியும் வெட்டி நாயம் பேசுறது டெய்லி வழக்கம். அப்படி எதர்சையா வந்த என்னோட இந்த தொடர் விசயம்.
முதல்ல இந்த தொடர் ஆரம்பமே மூளை மனம் அப்புறம் உயிர்னு ஒன்னு சொன்னமே உயிர் கடவுளுக்கு நிகரானதுனு சொன்னமே. சரி அதெல்லாம் விட்டுவிடுங்கள்.
முதலில் சொல்லுங்கள் உலகின் முதல் உயிர் எங்கு பிறந்ததுனு?. தண்ணீர்தான். அறிவியலின் பதில் அதுதான். ஆற்றிலோ கடலிலோ. அமீபா எனும் பாசி வகை ஒரு செல் உயிரி தான் முதல் உயிர் என்று சொல்லலாம். சரி சொல்லுங்கள் முதல் உயிர் எப்படி பிறந்தது.? அறிவியல் இங்குதான் அடிபடுகிறது. கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? என்பார்களே அதுபோல் விடை தெரியாத கேள்வியது.
அங்கு தான் இறைவனின் செயல் இருப்பதாக எண்ணுகிறது அறிவியல். ஆன்மீகமோ நீர்விட்டு வெளிவந்து நிலைகொண்ட உயிர் கடவுளின் அவதாரமென்று நம்புகிறது. நான் அப்படி சொன்னால் டார்வினும் டார்வினிச கூட்டமும் விடுவார்களா?..
ஆதாரம் கேட்பார்களே. சரி டார்வின் படி கொஞ்சம் பாருங்களேன். முதல் உயிர் நீரில் பிறந்து நிலத்திற்கு படிப்படியாக வந்து பரிணாம வளர்ச்சியால் பாம்பு பல்லிகளாகவும் குருவிப் பறவைகளாகவும். மிருகக் குரங்குகளாகவும் மாறியது என்பதே டார்வின் விளக்கத்தின் சுருக்கம்.
ஆம் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை இத்தனை மதக்கோட்பாடுகளையும் மீறி நிருவினார் டார்வின். உண்மைதான் சிலநேரம் நம் மனதினை எண்ணிப்பார்க்கையில் குரங்கிலிருந்து வந்தோம் என்பதில் ஆட்சேபனையில்லை..
ஒரு குரங்கு மனிதனாக பட்டபாடிருக்கிறதே. அதனை எய்த எத்தனையோ குரங்குகள் முயன்று தோற்றுதோற்று இறுதியில் ஏதோவொரு மாற்றத்தை தாங்கிக்கொள்ளும் குரங்கு மனிதனுக்கான முதற்கட்ட வளர்ச்சி மாற்றத்தை தாங்கி கொண்டு மாறிட அதன்வழிவழியாக வந்தோம் நாமும் நம் முன்னோர்களும் . என்கிறது டார்வின் படியான பார்வை. ஆன்மீகமோ. அப்படி தாங்கி மாற்ற ஏதுவாக முதல் மனிதனாக கடவுளே அவதரித்து மாற்றினார் என்கிறது.
எப்படி இந்த சிந்தனை ஆன்மீகத்திற்கு வந்தது என்பதில் தான் எனக்கு ஆச்சரியம்.
உயிரியலின் ஆழத்தை அலசினால் ஜீன் டிஎன்ஏ க்ரோமோசோம் என்கிற படிமங்கள் எல்லாம் கிடைக்கின்றன.
தந்தையின் ஜீன் தான் மகனுக்கு ஆதார ஜீன் ஆனால் இருவரது டிஎன்ஏவும் ஜீனும் ஒன்றல்ல.. என்ன விந்தையிது என்று ஆச்சரிய படுகின்ற வேளையில் தான் தாயின் பங்கு புரிகிறது. ஆனால் ஒரு ஜீனில் ஒருவம்சாவழியின் ஆற்றலே இருக்கிறதே எப்படி? அப்படியானால் கடவுளில் இருந்து வந்த நம் ஜீனில் எங்கேயினும் கடவுளின் அடையாளம் இருக்கிறதா?
இன்னும் ஆராய்கையில் நாம் காணும் ஒரு அதிசயம் என்னவென்றால் அத்தனை ஜீனிலும் நான்கே மூலக்கூறுதான் இருக்கிறது. இந்த நான்கு மூலக்கூறுகளே மனிதனின் நிறம் உடல்வாகு ஆரோக்யம் குணம் போன்ற விசயங்களை தீர்மானிக்கிறது. ஒருவேளை இது தான் கடவுளோ.? இதை தான் ஆன்மீகம் ஒவ்வொரு அணுவிலும் வாசம் செய்கிறான் என்றதோ?
நான்கு மூலக்கூறுகளின் மாற்றி மாற்றி அடுக்கிய அமைப்பே வேற்றுமைகளை கொணர்கிறது. இது தான் விதியெனப்படுவதோ? என்ற கேள்வியும் எழுகிறது.
சரி சில விசித்திரமான உயிரினங்களை பற்றி நீங்கள் அறிவீர்களா?. ஆமை தன் ஓட்டுக்குள் ஔிந்து கொள்ளும். மீன்களின் அமைப்பை பாருங்கள் . நெடுங்காலமாக நம்பப்படும் கடற்கன்னிகளின் உடலமைப்பை கவனியுங்கள். இன்னும் சில பாம்புகள் நண்டுகள் போன்றன ஆச்சிரியம் விலைவிக்கின்றன. மச்சாவதாரம் வராகம் போன்ற அவதாரங்கள் எப்படியோ இதை ஒத்துப்போகிறதே..?..
சரி உயிரியலின் மிக அடிப்படை கூறான செல் பற்றி தெரியுமா உங்களுக்கு.? ஒரு செல்லில் மாலிக்குல் என்னும் நுண்ணிய துகள் போன்ற அமைப்பு. சற்றே விசித்திரமானது. வெவ்வேறு வேதிப்பொருளுடன் நான் முன்பே சொன்ன அந்த நான்கு மூலக்கூறுகள் கலந்து உருவானது அது. அதில் நியூக்ளியோடைட் என்னும் கருவானது. தன்னைத்தானே இரண்டாக பிரிக்கிறது. பின் தனது பாதுகாப்பு வளையத்தையும் அவ்வாறே பிரிக்கிறது. பின் இரண்டு கருவும் இரண்டு செல்களாக வளர்கிறது. இப்படித்தானே கடவுளும் உலகை படைத்திருப்பார்.
ஓர் குரங்கு மனிதான விதமும் இப்படித்தானே. பின்னென்ன.. பாரதி சொன்னது போல்..
விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே...
إرسال تعليق