சிவபர பதிகம்

வெண்பா..

இறைத்துணை வேண்டல்.. :

.. :

எந்தையும் யாமும் செழிவுற வாழும்நல்
விந்தைசெய் தேவனின் சேவடி பாடிட
சிந்தையில் நின்றுதவு என்றன் தமிழ்மொழியே
சிந்தையில் நின்றருள் என்றன் சிவபரனே
எந்தனுள் நின்று உதவு.

1)
அன்பினார்க்கு அன்புசெய் சோதியுரு வானவனே
அன்பினால் அண்டமதை உண்டுரு வாக்கிய
தென்பொதி கையன் தமிழதன் தந்தையே
தன்னாடல் காட்டி அருள்

2) அருளை அடியார்க்கு அள்ளிதரும் ஐயன்
     பொருளுடை நாதனே சிந்தையிற் ஊறி
     திருவென் றுயிரென நின்றெமை ஆண்ட
     பெருமான் திருவடி  சேர்

3) சேர்உள் உருகிட ஊனதை சிற்சிலவாய்
     கூர்ந்து நிறைந்து புரையெங்கும் உள்ளவன்
     சீர்கழல் தன்னை அடைந்திட நம்மையும்
     ஈர்த்த நடமதை போற்று

4) போற்றுவார் போற்றிட ஏத்துவார் தம்முள்ளே
     ஊற்றென பொங்கும்நல் இன்பக் கடலென
      காற்றென வான்நிலம் யாவுமாய் ஆயினன்
      மாற்றில் மரணம் இலான்.

5) இலான்போல் இருந்தும் இருப்பநம் சோதி
     அலானிருள் தானாய் திருவுரு கொண்ட
     பரம்பொருள் என்றே சிரமதில் கங்கைப்
     பரமனே என்னையாள் தேசே.

6) தேசே சுடரெனும் சொக்கப் பனையோனே
     மாசே இலாத இறையே மலைமகள்
      நேசா மலையென நின்றிடுமண் ணாமலை
      வாசா இறையென்  றருள்

7) அருளுள் சுடரே அடியேன் உயிரே
     கருவென மண்ணில் சுமந்து வளர்த்து
      உருசெய் தவமாழும் தந்தையே தாயாய்
      திருவருள் தந்தெனை சூழ்.

8) சூழுல கம்யாவும் நின்றனின் பேரெழில்
     ஊழ்வினை கொன்றிடும் தேவனின் தன்னெழில்
      தாழ்விலா நின்பெரும் ஞானமதை தந்தெனன்
     வாழ்வை சிறப்புற செய்.

9) செய்யா பிழையினை யான்செய்கின் என்றனுள்
      மெய்யாய் விளங்கும் இறைவனே தாமுமே
      பொய்யா தெனைதடுத்து ஆட்கொண்டு
       வெய்யாத சோதி இணை.

10) இணையாய் உமையாள் தனைகொள் சிவனே
       துணையாய் எமக்கே இருந்தாய் பரனே
       திணைதேன் இணையாய் இனிக்கும் அரனே
        கணைபோல் செருகிடு மன்பு.
    

    
    
    
 

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم