ஓம் - பிரணவத்தின் பொருள்..

ஓம்.. இறை வழிபாட்டின் ஆதி மந்திரம்.. தியானத்தின் மகா உச்சரம்... இன்றும் இறைநெறிகள் பெரிதும் மதிக்கும் எல்லையிலா உயர்ந்த சொல்...
ஒருமுறை பிரம்மனிடம் முருகன் கேட்டு கூறாதமையால் சிறையிலிட சர்சையாகி பின் சிவனிடம் முருகனே குருவாய் அமர்ந்து சொன்னதாக ஒரு வரலாறும் உண்டு.
ஓம் பிரணவம் என்றும் பீஜங்களில் ஒன்று எனவும் அறியபடுகிறது. மேலும் அது பல்வேறு மதங்களில் பல்வேறு கோட்பாடுகளில் வெவ்வேறு வடிவங்களாக அறியபடுகிறது..
தென் ஆப்பிரிக்கா பழங்குடியினர் தேசம் என்று அழைக்கபடும் நாடு.. அங்குள்ள பல்வேறு பழங்குடிகள்.. அங்கு இன்றும் ஓம் என்ற சொல்லை பயன்படுத்தவே பல்வேறு உயரிய சிரத்தைகள் மேற்கொள்ளபடுகிறது..
ஏன் சுவஸ்திக் சின்னம் கூட ஓம் என்கிற சொல்லின் வரிவடிவம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதே போல் சீனாவின் இங்யாங் சின்னமும் ஓம் என்பதின் மற்றொரு குறிவடிவம் எனவும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்...
முதலில் நான் இங்கு பதியும் ஓம் என்பது புரிதலின் வேண்டியே உண்மையில் ௐ இதுவே.
ௐௐௐௐௐௐ.
சரி ஓம் என்பது பிரணவம் என்று ஒப்புக்கொள்ளபட்டது... நாமும் தினமும் அல்லது தினங்களில் பலமுறை ஒலிக்கும் இந்த ஓம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா.? தெரிந்து இன்னும் சிறப்புற வேண்டாமா.?
இப்போது ஓம் எனும் சொல்லுக்கு சொல்லபடும் பண்புகள்....
1) யாவும் இரண்டால் ஆனது.
2) இரண்டும் உண்மையில் ஒன்றே
3) ஒன்றிலிருந்து  மற்றொன்று வந்தது
4) ஓன்றோடு  ஒன்று கலந்தது.
5) யாவும் ஒன்றினுள் அடக்கம்.
6) ஒன்றிலிருந்து ஒன்று தோன்றினாலும் இரண்டிலும் குறைவுறாது.
இவை ஆறும் வெறும் சொற்களே. ஆழ்ந்து சிந்திக்கையில் இந்த சொற்கள் தரும் பொருளே பிரணவத்தின் பொருள்.
இப்போது எடிமாலஜி எனும் சொற்பகுப்பாய்வு முறையில்..
ஓம். - ஒரு உயிர் எழுத்து.. ஒரு மெய் எழுத்து.
பிரணவம் - பிரணன் என்பது உயிர் எனும் ஆத்மா.. வம்.. என்பது எஞ்சிய சவம்..
ஆக உயிரும் மெய்யும் ஒன்றியிருப்பது ௐ..எனப்படுகிறது..
ஓ தனி எழுத்து ம் தனி எழுத்து... ஆக சீனாவின் இங்யாங் தத்துவம் போல ஔியும் இருளும் எனும் இரட்டை சார்பு தான் ௐ எனப்படுகிறது.
அதுபோல். சப்த அலைகளில் சிறந்ததாக ஓம் கருதபடுவதன் காரணம். டோனோகிராபி எனும் சப்தவடிவயியல் முறையில் ஓம் என்னும் சொல்லின் வடிவமும் ஸ்ரீசக்கர வடிவமும் ஒன்றியிருப்பதாக சொல்லபடுகிறது ..
ஓம் என்பது நம் மூச்சின் அதியுர்ந்த ஒலிவடிவம். தியானங்கள் மூச்சு பரிவர்த்தனைகளை ஓம் எனும் வடிவ அமைப்பிலேயே நிறுத்திட விழைகின்றது.
இந்த ஓம் உச்சரிக்கும் போது அதன் அதிர்வுகள் ஆழமாக ஊடுருவுகின்றன.. இதை இஸ்ரேலை சேர்ந்த மெர்கின்ஸ் என்னும் ஆய்வாளர் நிருபித்துள்ளார்..
சரி இதுவரை படித்துவந்த நீங்களே சொல்லுங்கள் நீங்கள் படித்தவரை மற்ற சொற்களுக்கும் ஓம்ற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன அல்லவா..
எப்படி ஒரு காற்று குழலில் நுழைந்து அதிர்வுகளை ஏற்படுத்துதல் போல தான் சொற்களும். அதனை டெசிபல்களாகவும் அளவிடுகின்றனர். இதோ நம் ஓம் நேரிசை அதிர்வுகளை அதிகம் உண்டாக்குதலால் ஈர்க்கிறது..
நண்பர் சக்தி ஒரு சந்தேகத்தை என்னிடம் வைத்தார் சிதம்பரம் நடராசர் சிலை அமைப்பிற்கும் ஓம் என்பதிற்கும் சம்பந்தம் உண்டோ ? என்கிற சந்தேகம் அது.. உண்மைதான். ஒரு ஒற்றுமையும் சம்பந்தமும் உண்டு..
நவீன விளக்கங்கள் சிதம்பர நடராசர் சிலை இதயமாகவும். பூமியின் புவியீர்பின் மையமாகவும் அறியபடுகிறது. ஓம் பிரணவம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஓம் எப்படி அதிர்வுகளை ஏற்படுத்துகிறதோ அதை கடத்தி செல்ல காந்தவிசகள் செயல்பட்டிருக்கலாம்.. ரேடியோ போல. என் நம்பிக்கையின் சாரம் மட்டுமே இது. ஆனால் நடராசர் பிரணவத்தை குறிக்கவில்லை. அவர் அதற்கும் முந்தைய நிலையை தான் சொல்கிறார். தம் கையிலிருக்கும் உடுக்கின் அமைப்பினால் காட்டினார்.. பரநடனம் என்பது பரமன் நடமிடுதல் என்பதாகும்.. பிரணவத்திற்கு முன் பரநடம் அதுவே அந்த  உடுக்கின் சப்த அலைகள்.. உடுக்கின் சப்தத்திற்கேற்ப ஆடுகிறார். அதுபோல் இதயத்தின் துடிப்பின் சப்தமும் பரநடம் தான்.. நாமும் அது படிதான் ஆடுகிறோம்..
ஆக பரநடம் பிரணவம் ஒற்றுமையும். ஈர்ப்பின் கடத்தியாக சம்பந்தமும் உள்ளது நண்பரே..
வேதங்கள் பிரணவமே ஆதி மூலக்கூறு என்று உரைப்பதால்.. நான் மேற்சொன்னவை பிரணவமென்னும் ஓம் உடன் ஒத்துபோகிறதல்லவா?..
ஈசன் உமைக்கு சொன்ன தரிசனம் இதோ உங்களுக்கும்..
இறைவா தங்களை அறிவது எப்படி என்று விளக்குங்கள்.. என்றார் பார்வதி
எழுத்துக்களாக பார் . பின் சப்தங்களாக பார் . அதனிருந்து அதிர்வுகளாக பார். மேலும் சொற்களாக பார். பின் பொருளாக பார். பின் அதைகடந்த மௌனமாக பார். பின் அனைத்தும உணர்ந்த ஞானமாக பார்..


இந்த ஞானமாக பார்க்கும் முயற்சியே இந்த ஓம் பிரணவத்தின் பொருள்..



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم