எழுதபடாத கவிதைகள் - என்னோடுவா.

என்னோடு வா
நாம் வானத்தில் நீ்ந்தலாம்
காலத்தை தாண்டலாம்
கோள்களை தீண்டலாம் வா.

என்னோடு வா
நாம் வானவில் சுகிக்கலாம்
கானகம் செய்யலாம்
காட்டுக்குள் வாழலாம் வா

மாசுபாட்டால் இங்கு தொல்லை
மாசென்பதே அங்கு இல்லை..

மாசென்பது தீரும் தொல்லை
காற்றென்பதே அங்கில்லை

பெருவெளி எல்லாம் நமதாகுமே
பெருநகர் கூட உனக்கில்லையே..

பெருவெளி உனதாகும் நீரில்லையே
பெருநகர் நமதாகும் குறையில்லையே

நிலவின் நிழலில் நிதமும் அமர்வோம்வா
நதியின் பிரதியில் நிலவை அளப்போம் வா.

என்னோடு வா..

என்னோடு வா...
விண்மீன் பெரிதா சூரியன் பெரிதா
பார்ப்போம் வா

விண்மீன் எத்தனை மரக்கிளை இருந்து எண்ணலாம் வா.

புயலும் கடலும் தினமும் வாட்டும் எதற்கு?
புதிதாய் மேகம் பிறக்கனும் அதற்கு?.

வாவா நாம் விண்வெளி போகலாம்
அட வா நாம்  மண்வழி வாழலாம்...

வாவா புதுயுகம் செய்யலாம் வா
வாவா புரட்சியே செய்யலாம் வா..

என்னோடு வா
என்னோடுவா.


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم