நானும்சில மரங்கள் நடணும்...

வளைந்த ஏர் ஊன்றி  உழ
உழவற் கைபிடி விதைதாம் விழ
விழுந்த நல்விதை பின்னர் எழ
எழுந்த கதிரால் பார்பசி தீர
தீரத்தீர மேலும்தரும் பூமிக்கும் விதை
விதைத்த விவசாயிக்கும் விரும்பி  வணக்கம்


அண்டமெங்கு முள்கிரகம் அலைய சுழல
சுழலும் பூமி பிறந்து வளர
வளரும் பூமி மனிதம் படைக்க
படைக்கும் மனிதன் மொழி பிடிக்க
பிடித்து படைத்த எங்கள் தமிழ்
தமிழே எனது அடையாளம் என
எனதின்னுயிர்  உளவரை உலகிற்கு உரைப்பேன்..


சங்கம்நடந்த அன்னைகண்டம் இல்லை
இல்லையில்லை கடல்தின்று விட்டது
விட்டது எம்மை ஏதோசில எச்சங்களுடன்
எச்சங்களின் மிச்சங்களாய் காடுகள்
காடுகளும் கறைகிறது எம்வயிற்றில் காடுடை
காடுத்தீ எரிகிறது என்செய்ய இயலும்
இயலும் நானும்சில மரங்கள் நடணும்...




إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم