கடவுளின் சரித்திரம் - முதற்பார்வை

காற்றில் தூற்றப்படும் நெல்போல் என்னது அற்றவை போகி நல்லென்னவை எமதாய் அமைதாய்கிட அருளி அருகிருந்து எப்படி உமதுள் யான் உறைதற்போல் எமதுள் தாமும் இருந்து ஆளுமாறு அவாவுரைத்தேன்..

இப்படி நான் வணங்கவேண்டிய அத்தனை குருமார்களுக்கும் முன்னேராய் வழிவகுத்த முன்னோர்க்கும் எந்நாளும் பல்லாயிர அறிஞர்கள் தந்தும் என்னையும் கைப்பிடிக்குள் பேணி நிற்கும் தமிழிற்கும் . இறைவர்க்கும் எனது வணக்கங்கள் அவர்தம் தாழ்சேரும் நாளும்..

யாதொன்றை ஒருவன் கற்கலாயினும் தாய்மொழியே நற்றுணை என்பது உலக திண்ண அனுபவம்..

இதோ உங்களுக்கு ஒன்று உரைத்தேன் . இதுவரை தாமும் நம் சமூகமும் நிஜமென நம்பியவை எல்லாம். உண்மையின் ஒரு பரிமாணமோ . திரிபு வரைவோ. சாத்தியத்தின் அநுமானமோ அல்லது சாத்தியங்களில் ஒன்று என்று உணருங்கள் அவை உண்மை அல்ல. உண்மையாக்க பட்டன அவ்வளவே...

உதாரணம் சொல்லலாம்... எப்படியும் தாங்கள் யாவரும் பள்ளி பயின்றவர்கள் என்று நம்பி இதோ நம் பள்ளி சொல்வது. சூரியன் நகர்வதில்லை பூமி தான் சூரியனை சுழல்கிறது. என்று  "ஹீலியோ சென்ட்ரிக்" ( சூரிய மைய கொள்கை ) கற்றிருப்பீர்.. ஆனால்.. சமீபத்து நாசா ஆய்வு ஒன்றை உரைக்கிறது சூரியனும் ஒரு திசை நோக்கி  அனைத்து கிரகங்களையும் ஈர்த்துக்கொண்டு நகர்கிறது என்பது அதை "ஹெட்ரோ சென்ட்ரிக்" என்று கூகுளில் நீங்கள் பார்க்கலாம்.. இதோ உண்மை. இதுவரை உண்மையின் ஒரு முகத்தை அறிந்திருந்த நமக்கு முழுவுண்மை முகங்காட்ட தொடங்கிற்று..

இதில் வேடிக்கை ஒன்று சொல்லவா? இதை புறநானூறு அன்றே சொல்லிற்று.. அதனை "சூரியனுக்கு சென்று ஆராய்ந்த தமிழர்கள் " என்று யூட்யூப்ல பார்த்து அறியலாம்.. சரி விளையாட்டு போதும் இனி எல்லாம் விசயம் தான்..

உலகமே தம் வரலாற்றை அறிய தமிழுக்கு தேடி வரவேண்டும் என்கிறார் தேவநேய பாவலர்.. ஆம் அவ்வகையில் நாம் தேடுவது சர்வமுமான "சிவனை" இத்தொடர் இந்த ஓட்டத்திலேயே செல்கிறது. தேடுவோர் வாரும் இப்படகு தங்கள் தேடலின் பதிலுக்கு கொண்டு செல்லும்..

முன்னம் ஒன்று.. முதலென்று ... இருந்தது... இருக்கிறது ... இருக்கும்.. இருந்தால்... அறிவதே மனித உயரம்.. அறிந்து அடைவதே பயன்..

எந்தமிழ் தான் கொண்ட கர்வமே.. சிவன் எங்களவன் என்பதே.. வடநாட்டிலிருந்து தலைவர்கள் வரலாம் கடவுள் எப்படி வர இயலும். விண்ணிருந்து வந்தவன் எப்படி வடநாட்டுக்கு சொந்தம்.?. உள்ளிருப்பவனுக்கு வடக்கென்ன தெற்கென்ன?.. தென்னாடு உடைய சிவனே போற்றி .. அது என்ன தென்னாடு?.. கேளுங்கள் மறுபார்வை வரும்வரை..

தேடலை செலுத்துவோம் பயணிகள் பங்கேற்றதும்

வணக்கம்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم