நற்றமிழர் தம்திறன் தாங்கியே நின்றிடும்
உற்றதோர் சின்னமாம் வேளாண்மை மேலென
கற்பித்து தன்மேல் விதைகாத்து நின்றிடும்
மற்றொரு ஈடிலா நற்புகழ் - கொண்டுநம்
சிற்றறி விற்கெட்டா பேரறம் சொல்லிடும்
கற்பனைக் கெல்லாம் கவின்மிகு சாட்சியாய்
சொற்பனைக் கீடாய் நிமிர்ந்து இருக்கின்ற
சிற்பத்தின் காட்சியென நற்றெழில் - பீடுடை
பொற்கிணையாய் நாளும் வரலாறை தாங்கியும்
அற்புதங்மாய் ஆயிர மாயகதை கூறிடும்
கற்றவர் தாமனுதி னம்போற்றும் பேரெழிற்
பெற்றதெம் கோபுரத்தை காண்.
#கோபுரம் #ஒருவிகற்ப_பஃறொடைவெண்பா.
إرسال تعليق