ஒருமுறை மகாவிஷ்ணு உறையும் பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் மந்திரகிரியை மத்தாக்கி வாசுகி எனும் பாம்பை வடமாக்கி கடையோ கடைனு கடைய பாம்பு உராய்வு தாளாமல் விஷத்தை கக்க (பாம்புலருந்து தான் வந்ததா இல்ல கடல்ல இருந்து வந்ததானு கதை எழுதுனவருக்கே தெரியலயாம்) அந்த ஆலகால விஷத்தை சிவன் விழுங்கி பார்வதி கழுத்தை பிடித்து விஷம் அங்கயே (கழுத்திலேயே ) நின்றுவிட நீலகண்டன் என்று அழைக்கபட்டாராம் சிவன்..
அடடே எப்படி ஒரு பேன்டசி கற்பனை .. அதுவிருக்கட்டும் தமிழ்ல கூட இந்த நீலகண்டன் இருக்கே.. நியாயமாக நீலகண்டம் வரனும்னா என்ன நிகழ்ந்திருக்கும்?..
சிவனை பழையோன் வெய்யோன் எனவெலாம் அழைப்பது நாமறிந்ததே.. அப்பழையோன் சொல்லும் தென்னாடுடையான் என்ற சொல்லும் சிவனை குமரி கண்டத்தோடு தொடர்புபடுத்துகின்றன.. மேலும் கார்டன் ஆப் ஈடன் என்று பைபிளும். அதற்கு முன்பிருந்த அறமிக் மொழியும் அங்கேதான் குறிக்கின்றன..
அத்தகு காலத்து மாந்தர்கள் வேளாண்மை அறிந்திலர். அவர்கள் உணவுப்பொருட்களையும் அறிந்திலர்.. நான்தனிப்பட்ட முறையில் அவர்களை மிகுந்து வணங்குகிறேன். நாம் நல்லுணவு உண்ண எத்தனை பேர் விஷச்செடிகளையும். தீங்கனிகளையும் தின்று உயிர்தியாகம் செய்திருப்பர்?.. அத்தகு சூழல் ஒருவன் தானொருவன் தன் உயிரை மாய்க்கும் ப்ரயத்தனம் செய்து காக்க தலைவனாகிறான் . அவனே உணவுகளை தேர்வு செய்கிறான்..
அவனே விஷமுறிவுகளை செய்கிறான் நீலகண்டன் எனவழைக்கபடுகிறான்.. ஆமா நீலகண்டம்ங்கிறது கழுத்தா என்ன?..
நீலகண்டம் - நீலமுடைய அல்லது நீலமான கண்டம்.. அட கடலுக்குள்ள போன கண்டம்.. குமரிக்கண்டம் தானா அது.. தென்னாடு உடைய குமரிக்கண்டம் தானா அது.. என்னே தமிழ்திறம்.. பழங்காலத்தவன் என்பதை பழையோன் என்றது போல் நீலகண்டத்து காரனை. நீலகண்டன் என்றுரைக்கலாமே.. நீலகண்டமே..
சரி குமரிக்கண்டத்து ஆய்வுகள் ஏன் நிகழ்த்த படுகின்றன ஏனென்றால் கடல்தின்ற குமரிஎனும் லெமொரியா ஒன்றே உயிர்கள் பிறக்கும் சாத்தியங்கள் அதிகம் கொண்டவை... விஞ்ஞானிகளின் கூற்று இது..
ஆராய்ந்ததில் ஒன்று நமக்கு விளங்கிற்று. இரண்டாயிர வருடம் மட்டுமே தமிழின் வரலாறு என்றிருந்த நமக்கு இரண்டு லட்சவருடம் வரலாறுண்டு என்பது தெளிவடைந்தது..
ஏழு தெங்கு நாடு - தென்னை வளர்ப்பு நாடு
ஏழு குறும்பனை நாடு - பனை மர நாடு
ஏழு முன்பாலை நாடு - கடலோர மணல்வெளி
ஏழு பின்பாலை நாடு - உள்புற ஆறு சார்ந்த மணல்நாடு
என்று 49 நாடு கொண்ட தமிழ்பிறந்த கண்டம் குமரிக்கண்டம்..
அதுபோல் சங்கரன் என்பதென்ன? மாயனுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்புகள் யாது?
தேடலாம் தெய்வத்தை....
إرسال تعليق