திருக்கோயில் வலப்பா - மூர்த்த கணபதி


காணாற் தலைவனே பூதத் திறைவா

அருகம் விரும்பு மெளியர் கடவுளே

ஞானக் கடலே முழுமுதலே நாயகா

சங்கடம் தீர்க்கும் கணநாதா கல்வியும்

செல்வம் அருளும் முதலே புவியில்

அடியேனும் மோதகமாய் தேடிட காகமாய்

வந்தே கமண்டல ஞானம் திறந்தாயே

மஞ்சள் பிடியில் மகிழ்வாய் அமர்திடும்

மங்கள் கணபதியே அம்மையப்பர் தம்மை

உலகாய் வலம்புரியும் தேவனே கற்பகமே

சித்திபுத்தி தன்னை அருள்கிற ஏகதந்தா

நின்னை அடைந்தேன் பணிந்து..




பலவிகற்ப பஃறோடை வெண்பா
மகாகணபதி - மூர்த்த கணபதி..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم