ஆணையிட்ட அன்னைக்காய் ஈசனொடு போரிட்டு
ஆணைமுகங் கொண்ட கணபதி தம்மை
துணையெனக் கொள்ள விரும்பிடின் அன்பில்
அணைத்து பலவகை ஞானம் வழங்கியே
அணையா விளக்கங்கள் தந்து அறிவை
அணையிலா ஓடமாய் வார்த்து அருளி
இணையார் ஒருவர் இலவென வாக்கும்
துணையார் கணபதியை வேண்டி வணங்கின்
துணையெனன் றருள்வார் மகிழ்ந்து (1)
காவியம் செய்திட தந்தம் உடைத்த
ஓவியன் எங்கள் விநாயகன் சங்கடத்தில்
தாவியருள் தந்திடு வேழமுகன் ஞானமவன்
முக்கண்ணன் பிள்ளை முருகனுக்கு முந்தினன்
சக்தியின் செல்லம் முழுமுதற் ஞானம்
முக்தியும் சித்திக்கும் சித்தியும் புக்தியும்
முக்கிய சக்தியும் முற்றும் வழங்குவான்
பக்தியால் நாமும் பணிந்து அன்பெனும்
பற்றால் வணங்கும் பொருட்டு.(2)
#பஃறோடைவெண்பா.
إرسال تعليق