ஆறுபடை வீடுமுடை தேவர்தம் சேனையோன்
ஆறுமுகம் வீருகுணம் தீரமுடை - வீரனாம்
கூறுதமிழ் கூற்றினுக்கு கூடுமிள கந்தனவன்
ஊறுவரு முன்னே உவந்தருள் தந்தவன்
அன்பன்னை வேல்தந்து ஆணையிட - குன்றத்தோன்
தன்கண்ணை போல்காப்பான் தன்னை வணங்குவோர்க்கு
நன்மைகள் நாள்தோறும் நல்குவான் - வேலவன்
இன்பம் வழங்கி இறங்குவான் வேண்டினால்
துன்பம் தனையும் துடைப்பவன் - வைதாலும்
நன்மையே செய்வான் வணங்கு... (1)
நெற்றிச் சுடரொளி வீசிட வந்தவன்தாள்
பற்றிப் பலவருள் பெற்றிடு வோமேநாம்
உற்றத் துணையென உள்ளன்பு தந்திட
கற்றுத் தெளிந்த குருவாய் அமைவானே
நற்றெழில் மாறா நயனவன் தானுமே
அச்சம் அறுக்கும் அறுமுகன் தாழினை
நித்தம் புகழ்ந்திட்டு நாம்கதி சேர்வமே
சித்தம் வழங்கும் சிவனவன் பிள்ளையை
நித்தம் வணங்கு மகிழ்ந்து...(2)
#பலவிகற்பபஃறோடை வெண்பா.
إرسال تعليق