மையல்கொண்ட என்மன மதனத்தின் வதனமே
தையலென்று என்மண மேடை அமர்ந்து
வையம்புகழ நல்வாழ்வை எய்திட செய்திடும்
நேயத்துணை நின்றன் நல்மனம் வாழி.
- கலிவிருத்தம்.
கயல்விழிக்கு மீனிரண்டு களவானதோ வேலென்பதோ
அயல்வெளிக்கு சென்றுவர ஆனவை செய்திடும்
முயல்மார்பிடம் மந்திரமோ முன்னை தந்திரமோ
செயல்படா தென்றிடப் பெண்ணியம் வாழி.
-கலிவிருத்தம்
தழல்வீழ் உமியென தனிமைநீங்கி சரண்புக
கழலதை காட்சிசெய் கன்னியே நின்றன்
குழல்விரி காடதில் குன்றிகுழைத் தென்னைவிட்டு
மழலையாய் மாறினேன் மங்களமே வாழி
-கலிவிருத்தம்.
إرسال تعليق