ஞானத்தை நல்கியே ஞாலம் வளத்தாரே
வானத்தை நுய்மை படுத்தி புகுத்தும்
குருவே அருளே வடிவாய் அமர்ந்த
திருவே அடியார் அறிந்திட வொண்ணா
உருவே தவத்தில் உறைந்து செழித்த
குருவிற் கரியர் அகிலத்தே இல்லை
அறமொடு வீரம் வரமாய் வழங்கி
திறமுடை மாந்தர் வளர்த்தார்தாள் போற்றி
நலமதை நாடிவந் தார்க்கு நலமும்
தலமதை நாடிவந் தார்க்கு அறிவும்
உளமாற தந்துதட் சண்யம் பெறாதவர்
கல்லா லமரத் தடியமர்ந்து எம்போன்ற
கல்லா தவர்க்கு மறிவழித்த ஈசனே
நில்லா மனிதவாழ்வு நின்றா னவரிவர்
எல்லா மகத்துவமும் கொண்ட குருவான
தட்சிணா மூர்த்தியை போற்று..
#கலிவெண்பா #தட்சிணாமூர்த்தி
إرسال تعليق