தவமுற் றிருந்தநீர் சொல்மொழிக்கு காத்த
தவமில் தவமுற் றெழுவர்தம் முள்ளே
தவவழி தன்னில் மொழிந்தருள் செய்த
தவத்துயர் தட்சிணாமூர்த் திம்என்னை - உந்தன்
எழுவர் குழுவில் ஒருவனாய் ஏற்றென்
எழுபிறப்பு நீக்கும் வகைஞானம் தன்னை
வழுவின்றி நன்றா யுணர்த்தி யருளால்
தழுவிடச் செய்குரு வே
إرسال تعليق