சாலச் சிறந்த செயலிது
சாகும் வரையில் சிந்தனை - ஆயினும்
நாளும் சிறக்கும் மனமூளையில்
எனக்கு மட்டுமேன் வஞ்சனை
ஆற்றுப் பெருக்காய் அறிவது பெருகிடின்
ஆளப் போகிறான் பார் என்பார் - இங்கே
ஊற்று கெட்டு போனதோ ஊர்வம்போ
மாற்று தீர்வு தேடுது மனம்
நித்தம் ஓர் அறிவியல் மனதில்
சத்தமிடும் கற்பனை ஊடே நிகழ்வும் - நிதமும்
அசைபோடும் நினைவலை ஓய விடுமோ
திசைதேடும் ஞானச் சிறகுகள் சோருமோ
சிக்கிவிட்டேன் இங்கே சிந்தனை சுழலில்
தொக்கிநிற்கும் மனத்தின் சில்லறை வெளியில்
தொலைந்த காலத்தை எண்ணுங்கால் துணையாய்
தொலைத்த காதலை எண்ணியழுகும் நித்திரையில்
மறைந்தமாந்தரை நினையுங்கால் மரணத்தை திட்டும்
இறையென ஒன்றை புசித்தாலும் ஜீரணிக்காது
நினைவென தேங்கி அகத்தூய்மை கெடும்
மனக்கழிவை நீக்க கழிவறை உண்டோ..
மாற்றார்க்கும் இதுவுண்டோ இல்லேலென் நோயோ?
கேட்கவும் இயலுமோ கேட்பார்க்கு புரியுமோ
மாற்றங்கள் காணுமோ மனதிது பிறழுமோ
எண்ணற்ற சிந்தனை எனக்கிது வஞ்சனை
நல்வழியென்று சிலமுறை நயமுடன் கூறினர்
அவ்வழியதுவே என்துயர் நீக்கிடும் என்றெண்ணிட
நால்வர் உறைத்தார் போலிங்கு நற்றுணையிதுவே
நற்காலை எழுந்து நிம்மதியாய் தியானிப்பது..
ஆகா அதுவே சிறந்தது எனவே
ஆரம்பத்தில் நினைந்து நான் அமர்ந்தேன்
என்வீட்டு தேனீர் வாசனை இணையாய்
எதிர்வீட்டுக் கோலத்தின் மண்வாசனை துணையாய்
தந்தையின் செய்தித்தாள் புரட்டும் சத்தம்
வெளிமரத்தின் காற்றுரசல் சலசல சத்தம்
உடனே சிலசில கற்பனை சிந்தனை
அதிலே பற்பல கவிதை கட்டுரை
படித்தவர் பாடு பெரும்பாடு என்பர்
பிடித்தவர் பாடு அரும்பாடு என்பதாய்
பிடித்து படித்தவை சிந்தயை விலகுவதில்லை
பார்த்தவை வேறுயிடை வந்து இம்சை
அடச்சே மனசா இது கருமம்...
إرسال تعليق