திருக்கோயில் வலப்பா - நந்தி

மூலனுக்கு தந்தனன் மூலமே  மந்திரமே
காலந்தோறும் லிங்கனை காணுதற் போதுமென்று
காலனை எத்திய காருண்யன் சேவைதனில்
காலம் தனைகழிக்கும் காளை - இவரன்றோ
ஈசனின் வாகனமாய் ஈடிலா நல்லுதவி
நேசத்தின் பால்நமக்கு நேர்பட செய்திடுவார்
பாசத்தி னாலேநாம் பாவம் குறைத்திடுவார்
வாசலில் நின்றவாரு பேரன்பு - பொங்கும்
சிவத்தொண்டு செய்வார் சிவகதி சேர்ப்பார்
அவரடி பற்றியே அத்தனை வேண்டல்
அவரருள் பெற்றார் அகிலத்தில் ஓங்க
தவசிவன் காத்து தயைபுரிவான் - முந்தி
வணங்குவோம் நாளும் வலிமை பெறவே
வணங்குவோம் நாமும் வலியன் அருள
வணங்குவோம் நாமும் வளம்பல சேர
வணங்குவோம் நந்தியை கண்டு

multivigarpa venba


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم