வான்புகழ்

வான்புகழ் கொண்ட தமிழ்வழி வந்து
வாலியாய் நின்ற தமிழ்மகர் என்று
வள்ளுவன் கற்றுக் கம்பனைக் களிந்த
வல்குண மாந்தர்கள் எம்மை முடித்திட

மறைந்து எய்திட படைநூறு இராமனேனோ
கறைந்து போகிட களிமண் யாமோ
மறைவினால் நம்மை உண்டெனில் ஆட்படுவோம்
குறைவிலா நல்மரணம் கூடவும் ஆட்படுவோம்.

ராமன்தான் எய்தினான் எனினும் இறவேன்
ராமனுடன் சுக்ரீவன் என்றறிந்தே இறந்தேன்
நாமென இருந்தவர் நமக்கிட துரோகம்
நாடாளும் மோகம் நமக்கிட மோசம்.

தெற்க்கில் இராவணன்கள் சூழ்ச்சிக்கு பலியாகிடின்
வடக்கில் அமைதியது வருமாம் அறிவிலிகள்
உள்ளிருப்பது உள்ளம்தானா ஓடுவது உதிரமா?.
அவசரத்தே அமைதிகாத்தல் அகிம்சையாம் அறிவிலிகள்...

யாவர்க்கும் ஒருபெரும் எதிரியுள்ளிருப்பதை கண்டு
யாவர்க்கும் மேழிதாங்கிய வேளன் ஏசுவன்றோ
யாவர்க்குமாய் துயர்படும் மீனவன் புத்தன்றோ..

வதைத்தாய் ராமா ஆராய அதர்மம்
வலிகொண்ட நானே வசைபாட வில்லை
வந்துசொல் உமக்கும் எமக்கும் யாதென்று
வந்துரை இதற்கு மொர்காரணம் இதென்று.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post