வணக்கம்..
கள்ளிச்செடியின் காமத்துப்பால்.. தலைப்புலயே அண்ணா நின்னுட்டார்.. வள்ளுவருக்கே ஒரு சந்தேகம் இருந்திருக்கலாம்.. காமம்னு சொன்னா படிப்பாங்களானு. ஆனா ஜேக் அண்ணா அந்த சங்கடத்தை உடைத்தார்.. பார்ட் பார்ட்டா படிச்சிருக்கேன்.. அலுக்குரு (அல்குல்) வரைக்கும் ஆராய்ந்து எழுதிருக்கார்..
தமிழுலகு பாடல்களால் கவிதைகளால் நிரம்பியது.. எந்தவொரு நிகழ்வையும் நமக்கு முன்ன ஒரு கவிதை பதிவுசெய்திருக்கும். உணவுக்கு அறுசுவை. உணர்வுக்கு நவரசம். வாழ்வுக்கு இன்பம் துயர் அனுபவம் அறம். இதோடு காமம். அப்படி கவிதைகள் நிரப்பாத இடங்கள் கண்டுபிடிப்பது சிரமம்.
மற்ற ரகங்களை விட இந்த ரகம் காமத்துப்பால் அவசியம் அதிகம்.. ஒரு தாயோ தந்தையோ தோழனோ ஆசானோ அறம் பொருள் அனுபவம் உரைக்கலாம்.. காமம் சொல்வது இருபுறச் சங்கடம். செக்ஸ் எடுகேஷன் எல்லாம் பேசுறாங்க.. மூன்றாம் பால் திருக்குறள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சொல்லும் ஆசிரியர்கள் நிலமை தெரியுமா?.. சிலவற்றை படித்து அறிவதே சாலம்.
கிராமங்களில் இயல்பாய் வந்துவிடும் சில கருத்துக்களில் காமம் பெரிதுபடும்.. ஜேக் அண்ணா தேர்ந்தெடுத்த விதமே கிராமத்து நடைதான்.. அங்கதான் நிறைய உவமைப்பொருள் சொல்லமுடியும்.. அவரைக்கொடி கூந்தலழகி என்பது நகரத்துக்கு ஒவ்வாது.
இதில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாம் எள்ளல் வகைபடும்.. நடுஇரவில் அடர்ந்த இருளில் பயந்து வந்தவன் அனுபவம் உரைத்தல் போல் அமைவது.. அறைகுறையாய் கண்டு அதற்கு உவமைக்கு மொழிதல்.. குருடர் யானைக்கதை போல..
ஆதலிலும் இதன் நீட்சி என்பதே இதில் மறைந்திருக்கும் ஊடல் விளையாட்டுத்தான்.. அது அண்ணாவின் ஆழ்ந்த கனவுகளோ கற்பனைகளோ அனுபவமோ அடியேன் அறியேன்.. அவர் சிந்தையின் அந்தரங்கமோ.. அந்தப்புர அனுபவமோ. ஆகட்டும். அவர்நிலை அவரது அமைந்தது நமக்கும் ஓர் அருங்கவிதை..
மேலும் சொல்ல விசயம் உண்டு ஒவ்வொரு வரிக்கும் பரிமேல் அழகர் உரைப்போல் உரைக்கூட சொல்லுவேன். ஆனால். கவிதையின் அழகே பொருளை அவரவர் அறிவுக்கு விட்டுவிடுவது என நம்புகிறேன்..
ஒன்றின்றி ஒன்றில்லை.. காற்று உரசாமல் மழையில்லை. காமம் கடக்காமல் துறவும் இல்லை.. கேட்டு மகிழ்வோம் . புரிந்தால் சிரிப்போம். இல்லேல் கற்போம்.. நன்றி..
Post a Comment