திருக்குறள் கவிதைகள் - 231ம் குறள்.

உணவின்றி வாழாதுடல் தனக்குணவே சேமநிதி
உழவின்றி வாழாதுலகு தனக்கேர் சேமநிதி.
நீரின்றி வாழாதுமரம் தனக்குமழை சேமநிதி
ஊரின்றி வாழாதுயிர் தனக்கெது சேமநிதி

ஐயமே வினவினேன் ஐயனே பதிற்சொல்லும்
மையமே உயிரன்றோ மகிழ்தருங் நிதியெதுவோ?
செயலிற் கரியதேவை உடலுறை உயிரே
அயலிற் அதற்கோர் பயனுறு நிதியம்?

உள்ளதோ உவன்மிகு உயரிய ஊதியம்?
தெள்ளமுதுக் கிணையாய் தெவிட்டாத சம்பளம்
உள்ளமட்டில் உளமின்று உரைப்பீர் உலகநாயகரே.
உள்ளதை உள்ளபடி உரைப்பீரே உயர்பாவலரே.

ஐயன் வாக்கு..

துள்ளு முயிர்தனக்கு உள்ளதோர் நற்கூலி
உள்ள முவக்கும் புகழே வளநிதி.
கள்ள மிலாதன்பால் நல்லறம் தன்னையும்
எள்ள மிலாநல்லீ கை.

#திருக்குறள்_கவிதை #231

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

#புகழ்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم