சின்னஞ்சிறு மலர்களெம்மை
சில்லுசில்லாய் துளைத்தாரே
இன்னும்பெரும் பாவமெது செய்யதானே யெம்மையும் வதைத்தாரே புதைத்தாரே கள்ளஞ்செய்ய பறித்தாரே கொன்றாரேதாம் சொல்லும்நீதி உரபை்பீரே?
என்னநீதி சொல்லுவீரோ நீருமெம்மைக் கொல்லுவீரோ பாருமிங்கே பாவமடி பாதையேதோ போனதடி என்றுநீரும் பாடுவீரோ அல்லேல்தாம் ஆதரவு யெனகூறி அடுத்ததை தேடுவீரோ ?
இன்னகதை தோய்வுயென மற்றதொரு -பக்கத்தினில் ஆய்வீர்களோ ஓய்வீர்களோ - துக்கத்தினில்
ஆள்வீர்களோ செய்தியெனச் - சலிப்பினில்
வெறுப்பீரோ உரைப்பீரே களையெனச்
சாய்ந்தோமே களைந்துயாம் - இறப்பினில்
மின்னலிடிக் கஞ்சினமே குண்டுமழைக் கொட்டினாரே
மிஞ்சினவ ரெம்மையே - வெட்டினாரே
துஞ்சுகையில் பிஞ்சிநெஞ்சில் - துளைத்தாரே
விதியென்று போகத்தானே விளையாட்டு எனநீரும் விட்டுவிட்டு
போவீர்களோ வினவினேனே..
إرسال تعليق