மாலைமா.

தேடாதே தேயாதே மாயமா குருகு
கடுக விரவி கனக சிரசி
உலவு தந்த உருவு தந்த
திகதி யறிய தித்தி மேகமே

குருகு - சிறு நதி
கடுக - சட்டென
விரவி - வேகமாய் வந்து
கனக - கனகப்பூ
சிரசி - தலையுடையவள்
திகதி - தேதி
தித்தி - இனிப்பு
உலவு - சுத்திவருதல்.
உருவு - உருவம் தந்த

தேடாதே தேடித் தேயாதே இது மாயாமான சிறுநதி. சட்டென வேகமாய் வந்து கனகப்பூக்களால் நிறைந்த சோலையை தலையாய் கொண்ட நிலமகள் மீது சுற்றித்திரிந்து மீண்டும் அதனுருவை (மழை) தந்திடும் தேதி அறிந்திட தித்திப்பை தரும் மேகமே..

மேகக்காதல் பாட்டு.. பேலிண்ட்ரோம்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم