அமாவாசைக் காரணம்

ஆசை பிள்ளைக்கு சோறூட்டும்
அன்னைப் பெண்களே
தோசை சுட்டுக் காத்திருக்கும்
காதல் இணைவினரே

பூசைக் கென்னை எதிர்நோக்கும்
பெருக்கவி காதலரே
மாசை யேற்று மாண்புரு சேவை
புரியும் வீதிப்பெண்டிரே

வாடுகிறீரோ எனையும் காணாது தேடுகிறீரோ
அன்பர் செல்வங்களே

சேதி யிதுவே பெண்பால் மதியவள்
எனக்குமே இன்று
சேரா நாளே தூரத்து தினமிதே
நானும் மலர்ந்தலர

மறுமுறை மலர்ந்திட கூட்டுத் தவநாளே
தாயினை வேண்டிடு

ஆமாவாசை இத்தே...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم