கொட்டடித்து போற்றினோம் - எம்மை
சுட்டழித்து போயினரே - கண்ணும் உமக்கு ஏனைய்யா?
கொட்டியே கொடுக்கிறோம் - நீயும்
கொண்ட பலியினை - நன்றாய்
மீட்டு தருவாயோ?
இப்புவியில் உள்ளேரெல்லாம் - உனக்கு
நற்பிள்ளை தானே நாதி - அற்றுப் போனதற்கு பழியேற்றுகொள்வாயோ?
சரணம்:
அத்திப்பூ பூத்ததுபோல் - அன்புப்
பிள்ளை தான் - கதற
எத்திக்கு போனாயோ?
ஏமாற்றி போனாயே?
முத்தைக்கும் முதலென்று - சொல்லி
முத்தன்ன பிள்ளை - தின்ற பழியுமே போகுமோ?
பாவந்தான் தீருமோ?
நித்தை தந்திட்டு - நீயும்
சித்தை புரிந்திங்கு - மீண்டும்
அள்ளி கொண்டாயே?
அல்லல் தந்தாயே?
நின்னை நம்பித்தான் - பெற்றோர்
பிள்ளைக் காப்பதாய் - நீயும்
உற்றோர் பகடிசெய்தாயே ?
புகழிது போதுமோ?
மானும் தானென்றாய் - அதனை
காட்டிடவே நீயும் -மிருகச்
செயலிதைச் செய்தாயே?
பேதம் வேண்டுமோ?
ஆண்டுக்கொரு பலிபோதாது - நீயும்
ஆயிரத்தில் கொன்று - ஆசையிற்
அள்ளித் தின்றாயே?
ஆசை செமித்ததா?
பூவைக் கொன்றாய் - பேசும்
முகிலைக் கொன்றாய் - இதனினும்
பெருமை ஆகுமோ?
நாசம் செய்தாயே?
அமிழ்தைக் கொன்றாய் - ஆசை
தேவியர் உம்மை - ஏற்று
புகழென மெச்சுவாரோ?
நேயத்தின் துரோகியே!..
إرسال تعليق