அறமழித் தோராய் - வையத்தே
அரக்கரினத் ததர்மம்
இரக்கமில் லெதிரியாய் - இங்கே
எதற்கிந்த ஏமம்.
உணர்வேதும் உளதோ - உலகில்
ஒருவர்க்குள் ளொட்டியும்
அணங்குதல் அற்று - அகிலம்
அருள்வதற் காயினும்.
ஈகையில்லையே ஈரமில்லையே - இதயத்தில்
இரக்கமில்லையே என்சொல்ல
உதைத்தனரே உருகிடவே் - உள்ளம்
ஒன்றுமில்லை என்சொல்ல
அழிக்கின்றார் அரணாக - வையத்தில்
ஆலயமில்லை என்சொல்ல
அழுகின்றோம் ஆறுதலாய் - கைதர
ஆளில்லை என்சொல்ல.
விழுந்திடு மெம்மை - ஏற்பதும்
இழுக்கென்றால் என்சொல்ல
இனத்தின் பிணத்து - இடையில்
இருக்கின்றோம் என்சொல்ல.
வனத்தின் மலர்கள் - நைந்து
போயினவே என்சொல்ல
சினத்தின் பிடியினில் - சிதைந்து
விட்டனவே என்சொல்ல..
إرسال تعليق