بلا عنوان

பயின்றிடச் சென்றோம் பள்ளிக்கு - அங்கே
பழிக்கெம்மை கொண்டீர் பலியாய்
அழிந்திடச் செய்தீர் ஆயிரம் - குண்டும்
அழித்திட யாமும் செய்ததென்ன
சொல்வீர் எமையோர் புழுவாய் மிதித்தீர்
கொய்தீர் எமையும் மலராய் கொய்தீரே

பதுங்கு குழியிட்டு பயந்திருக்க - நீரோ
பிதுக்கி பழிதீர்ப்பீரோ  பாவிகளே
ஒதுங்கி ஏழையாமும் நடுங்கிட - நீரோ
ஒடுக்கி ஆசைதீர அழித்தீரோ
வெம்பிடும் நெஞ்சும் வெதும்பிடும் பிள்ளையின்
அஞ்சிடும் அழுதிடும் கண்ணீரைக் கண்டே.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم