பரம பத்து

எந்தை சிவமே ஏகப் பரமே
நின்னை பணிந்தேன் நேயத் திறையே
சிந்தைச் சரமே சிற்றம் பலமே
அத்தன் அயனே அன்பிற்ப் பொருளே.

கற்றை சடையவா  கற்கி னரியனே
ஒற்றை பரமமே ஒப்பிலா தேவனே
கொற்றக் கிழவனே கொன்றை யணியனே
சிற்றம் பலத்தவா சிந்தையிற் கருளே

அம்பலமே ஆதியே அன்பினுக் காண்டவா
ஐம்பூதமே ஆசியே ஆனந்தத் தாண்டவா
அம்மானே அண்ணலே  அந்தத் தாண்டவா
எம்பரா ஏகனே எமையாள் உமைபாகா.

திருவருள் சொரியும் தாயுமான தேவனே
உருவிலாப் பேரொளியே உள்ளொளி வாசனே
இருளிடத் துள்ளோனே இம்மையே யிறையே
அருளிடுந் தெய்வமே அம்மையே அறமே.

இன்பமே ஈசே எழிலே செழிவே
துன்பமே தீண்டா நிமலனே நித்திலமே
வன்புலித் தோலுடுத்த தந்தையே சித்தனே
என்புருக் கினதோ ரன்பனே அப்பனே

செல்வமே கூத்தனே செம்புல நாதனே
அல்லிடை நட்டனே ஆனதோர் அம்பலனே
புல்லிடைப் பூச்சுறை புண்ணியனே பேரருளே
எல்லனே எம்பிராத் தில்லையின் நாதனே.

ஈசனே அண்டத் தியக்கமே தேசனே
ஈகையிற் பயனே புரந்தனே இரப்பனே
ஈசலிற் கிறையாய் இருந்திடும் நேசனே
ஈடிலாப் பெருமையே ஈட்டிடாப் பொருளே.

ஐயனே ஆசானே ஆதியே அந்தமே
மாயனே சாலனே சோமனே அக்னியே
வியனே கண்டனே விதமாய் நின்றனே
வேயனே வேடனே மானுடை மாசிலே

தூசிலும் நுண்ணியமே மாசிலா நற்பயனே
வாசியே நீரனே வானமே வெய்யமே
வாசிக் கமுதே வாழ்விற் கரணே
நேசிக் காடலே நேர்வின் கருவே

சங்கத்து நாதனே சங்கரனே காடனே
அங்கம் பொடியுடை அந்த நாதனே
மங்கையொரு பாகனே அர்த்தநாரி தெய்வமே
கங்கைத் தலையோனே கங்கா தரனே


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم