உயிர் பிரியப் பார்த்தேன் - உண்மையில்
உலக அழிவை பார்த்தேன்
மனிதன் தன்னை மனிதன் - கொல்ல
புனிதப் பிள்ளை சாவில்
அழிவாய் மனிதா ஒருநாள் - உனையும்
கழிவாய் விழுங்கும் மண்ணே
தளிரைக் கொன்றாய் தனக்காய் - குழியை
இனிதாய் பறித்தாய் அழிவாய்.
பூமிக்கும் தெரியும் பெருகொடிய - அழிவை
பூமியும் தருகும் ஒருநாள்
ஆழிபோல் பிணத்தை குவித்தாய்- பின்னே
கோழிபோல் எச்சம் கொய்தாய்.
إرسال تعليق