சிரியா சிந்து முன்னுரை

சிரியா உலகத்து அசுர போர்கடவுள்களின் தற்காலிக வாசம்.
சிரியா உணர்வுகள் அற்று போன மனிதர்களின் கூடாரம்.

உலகம் யாவும் உள்ள யுத்த நியதிகளில் கூட பிள்ளைகளை சூறையாடுவது இருக்க வாய்ப்பில்லை

இத்தனை குரூரமான அழிவினை செய்தது பணமா? பணத்திற்காக ஏங்கும் மனமே? மதமா? இனமா? என்று உலகமெல்லாம் பேசிக்கொண்டே இருப்பதுதான் அதன் வாடிக்கை.

பணமோ? மனமோ? என்பதை விட பலியானது கொடுமையன்றோ.?. பெற்றவர்கள் தம் பிள்ளைகளை பதுங்குகுழியில் தாமே பதுக்கிவைக்க வேண்டிய சூழல் . இது நரகத்தின் செயல்பாடுகளிலும் இல்லை.

கண்முன்னே பறிபோன உயிருக்கு கண்ணீர் சிந்துவதா ? இல்லை எஞ்சிய உயிரைக் காக்க எழுந்தோடுவதா? மரணத்தின் பிடியிலிருந்து நூலில் பிழைத்த மனம் எப்படி துடித்திருக்குமோ அப்படி துடிக்கிறது எமக்கும்.

இருநாட்டு தலைவர்கள் சிந்தித்த அர்த்தமற்ற செய்திகளை பறைசாற்றும் செய்தித்துறைக்கு. பாவம் இது கண்ணில் படவில்லை.

சமூக வலைதளங்கள் இன்று தனித்த மகாச்செய்தி தொடர்பாக வளர்ந்திடவே இவர்களின் ஈன அரசியல் வெளிபடுகிறது.

சிரியாவில் நிகழ்ந்தது சரியா என வழக்காட வில்லை நாங்கள். நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கும் தலைவர்களல்ல நாங்கள்

உள்ளே பேசிட வழியில்லா எம் சகமனிதராம் சிரியாவினரின் மனக்குமுறலை. கேள்விகளை. நியாயங்களை. உலகுரைக்கும் சக மனதர்களே நாங்கள்..

சிந்தும் உயிரின் எண்ணங்களை சிந்தினில் சொல்லியிருக்கிறோம். சிந்தும் உதிரம் இனியேனும் நிற்கட்டும். புவியாவும் மலரட்டும். பிஞ்சுகளின் உள்ளத்துணர்வை உரையிட்டு தந்துள்ளோம்...

சிந்தும் சிரியாவின். சிரியா சிந்து.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم