மூல மெட்டு - தேவேந்திர சங்க வகுப்பு - திருப்புகழ்..
மூல ஆசிரியர் - அருணகிரிநாதர்..
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன..
வரியிடை வளமுற கருவினை செருகிடு
நயமுள மொழியுனை
பாடாதவர் நின்னடி நாடாதவர் தம்முள
செருக்கினை உருக்கியுன் அருட்கரம் வழங்கிட
மருட்சியை அழித்திட
வாழ்வாயென நல்லருள் பேறாதவர் தன்னுயிர்
இருப்பினும் இலதினும் பொருட்படுத் திலரினும்
புசிக்கிலர் ருசிக்கிலர்
யாராயினும் நின்னரும் தேனாகிய நற்கவி
இசையசை வசனமும் வியனுள சிறப்புரு
புகழினை நிலையினை
போற்றாதவர் என்பினும் பார்க்காதருள் தந்திடுந்
தமிழுனை வணங்கிட விரும்பிய பலபல
வளந்தனை வழங்கிட
பாடாதுனை என்மனம் வாழாதினி நன்முறை
வரும்வரி தனையொடு புனைந்திடு கவியினை
கனியுள மினிவுற.
ஏற்றாயுனை என்னுயிர் போற்றாதினி
யெவ்விதம்.
உறைவது உணர்வது உலகினில் திரிவது
மொழியென நிறைமறை
மேகாலய மன்னரும் பேறீசன வன்புகழ்.
மொழிந்துயர் வடைந்திட வசைபொழி வருக்கருள்
முருகனை அடைந்தவள்
யானோர்துளி உன்னடி சேராதினி எப்படி..
இணைகரம் பிணைத்தெனை அணைத்தவள் அழுகையில்
துணையென தவித்தவள்
தாயேயென நல்லடி சாராநிலை எப்படி..
இருகழல் தனிலிரு கரமதை பதித்தென
துளமுரு கழுதிட
வாராய்மக வென்றழை ஆராவமு தன்னையே...
إرسال تعليق