எழுதப்படாத கவிதைகள் - இரண்டாம் இரவு.

அமாவாசையே உன் பௌர்ணமிக்கான
ஆயத்தம் இன்று.

விடுமுறை சாலையே உன்
விருவிரு நெரிசலுக்கான ஆரம்பம் இன்று..

கோடைக்கால வற்றிய குளமே உன்
கோலாகல காலத்தின் ஆதி இன்று..

மனமுள மனிதா உன் ஞானத்தின்
மற்றொர் பிரதியின் தொடக்கம் இன்று..

பல்வேறு உயிரினமே உன்
எதிரிகள் நண்பர்கள் உருவாகும் காலமிது..

ஏ கவிஞனே உன் கவிதை
கருவெல்லாம் மாறப்போகும் நேரமிது...

ஓ ஆன்மீகவாதியே உன் தலைவன்
உயிர்த்தெழும் நேரமிது..

ஆம் கவிஞனெனும் இறைவன் என்
கற்பனைகள் நிகழும் நேரமிது

ஆம் இதுவென் இரண்டாம் அறைகூவல்

ஆம் இதுவெங்கள் இரண்டாம் இரவு..

முதலிரவில் தயங்கிட அஞ்சிட பிறந்தவை சரியில்லை ..

இந்த இரவில் அதற்கு சாத்தியம் இல்லை.. பழகிக்கொண்டோம்..என்றபின்

இறைவன் இன்புற இணையை  புணர்ந்தான்

இந்த வெற்றிடத்தில்.. லட்சோப லட்ச பிரபஞ்சம் பிறந்தது ...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم