புத்தகம் - உலக புத்தக தினம்..

புத்தகம்
இன்னும் கற்பழிக்க படாத குழந்தை ...
ஆம் பல கைகள் அதன் மேல் படுவதில்லை..

தேய்மான சாகரத்தின் ஞானச்சாவி..
ஓய்வுநேர ரகசிய காதலி..

பயணத்தில் டிக்கட் வாங்கா தோழன்..
தனிப் பிரபஞ்சம்  பல
பிரளயம் கண்ட பாரம்பரியம்...

எழுத்தும் கருத்தும் கூடும் மெத்தை..
சுடர் தாங்கும் சுடா விளக்கு...

மூளை தன்னை நிரப்பும் துணுக்கு தீனி..
ஆளை அறிவை மனதை குணத்தை வளர்க்கும் ஆசிரியம்...

பிள்ளை எதிர்க்கும் தோழன்...
ரசிகனுக்கு நாள்தோறும் புணரும் கன்னி...

அறிவுச்சுடர் வளர்க்கும் யாகத்தின் ஆஹூதி..
விமர்சகனின் பலிகிடாய்..

படைப்பாளனின்  வித்தகக் கருக்குழந்தை..
எழுத்தாளனின் ஒரு பக்கசாயல்...

கவிஞனின் கற்பனைக் கடத்தி...
மனதின் மூன்றாம்பால் வாசி..

புரட்சியாளன்.. புகழாளன்.. நீடுவாழ் ஆயுளாளன்..
உளவளன்.. ஞான உழவாளன்... பேத கழிவன் ... மோக கள்வன்...

வரி வடிவ வடிவன் ... அட்டையாடை அணிந்தவன்...
தன்மானம் மிக்கவன்.. தலைகுனிய செய்பவன்..

விளக்கமுள்ளவன்.. விசயமுள்ளவன்.. கருத்துள்ளவன்.. வரலாறுள்ளவன்..

இறைசேர மறையாய்.. பக்தியாற்றுபடை ஏடாய்..
விஞ்ஞான கருத்துக்கு சிந்தனை துணையாளன்...

மனைவிக்கும் மணாளனுக்கும் மூத்த துணைவன்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم