தாயே புகழுள் தமிழ்நீ எனக்கொரு
சேயாய் பிறந்து செழுமிளமை பெற்றாய்
நகைவாரின் உள்ளே நெகிழ்வாய் மனதின்
குகைவாயில் கண்ட ஔி.
ஔியுடை ஞானியர் ஒன்றிப் பணிய
வெளியதை கண்டு வெறுமை புரிய
தகையதைக் கொண்டு உயர்மன மெனும்
குகைவாயில் கண்ட ஔி.
ஔிர்ந் துளமிளிர ஒன்பதுளை ஓய
களிமிகுந் தென்னுள் கருத்துரை யாட
வகையை மொழிந்தாய் எனதுள் மனமாம்
குகைவாயில் கண்ட ஔி.
ஔியாய் சுடரிணை ஒன்றிலாப் பெருமை
துளியாய் நினைத்தாய் துயில்தரு பாவை
அளித்தா யமுதாய் அகமாம் மனதின்
குகைவாயில் கண்ட ஔி.
ஔியென வுள்ளொரு ஒற்றைச் சுடராய்
மிளிரிடு முன்னை மிக்க வுயிராய்
பகையிடங் காக்கும் தன்மை மனத்தின்
குகைவாயில் கண்ட ஔி.
ஔியாய் ஔியாய் ஔிபோல் ஒன்றாய்
ஔிர்வாய் ஔிர்வாய் ஔியென ஒன்றாய்
குகைவாய் உறையும் குமரன் அவனின்
குகைவாயில் கண்ட ஔி.
ஔியாம் ஔியாம் ஔியின் ஔியாம்
ஔியார்க் கொளியாய் ஔிரும் ஔியாம்
புகையாய் புவியை புறத்தே விடுத்தோர்
குகைவாயில் கண்ட ஔி.
ஔிரும் கதிராம் ஔிக்கொர் இறையாய்
ஔிரும் நிலவும் ஔிக்கொர் உவமை
வகையாய் புலகை வகுத்தார் தம்மின்
குகைவாயில் கண்ட ஔி..
ஔிவுடை இறைக்கு ஒன்றிய மொழியாய்
ஔிவுடை தமிழும் ஒன்றிடப் பன்மை
பகைவார் முயன்றும் பணியாத் தம்மின்
குகைவாயில் கண்ட ஔி..
ஔியும் வெளியும் வளியும் களியும்
பிளியப் பிளியப் பிறக்கும் மொழியாம்
சிகையாய் உலக சிலமொழிக் குமே
குகைவாயில் கண்ட ஔி..
إرسال تعليق