என்ன மனோ எதாவது பேயிங் இருக்கா?..
இத எதுக்கு எங்கிட்ட குடுத்த?. மொத்தமும் டீ காப்பி கணக்கு கரண்ட் பில் கணக்குதான் இருக்கு. ஏன் இப்போ டிடெக்டீவ் பொழப்பும் போச்சா.. ?
என்ன பண்றது மனோ. இந்த ஜிபிஎஸ் .வந்ததுல இருந்து பாலோயிங் கேஸ் இல்லாம போச்சு அதுமில்லாம ஆதார்கார்டு வந்ததுக்குபின்ன ஆபீஸே காத்தாடுது.. ஏதோ அப்பா கடையவச்சி பொழச்சிக்க வேண்டியது தான்.. வேற ஏதாவது வேலை கிடைச்சா பரவாயில்ல தான்...
அதான் கதை எழுதுனீயே அந்த புக்கெல்லாம் வித்தாலாவது..?
இல்லமனோ ப்ரீயா படிக்கவே ஆளில்ல காசுக்குடுத்து யாரு படிப்பா..?.. அதுமில்லாம நான் விக்கிற எண்ணத்துலயும் இல்ல..
எப்படியோ இந்த டெர்ம் உனக்கு ஜீரோ டேக்ஸ் ..
சரி மனோ நான் கிளம்புறேன் அப்பாட்ட ஒரு வேலை இருக்கு..
மாடியிலிருந்த அலுவகத்தின் வெளியே வந்தேன் ஆறடுக்கில் மனோ இரண்டாம் தளம் சற்று விசாலமான அறை முன் பக்க பார்டிக் அடுத்த அறையின் தொடர்பு பாலம். பால்ஸ் சீலிங் . மீடியம் சென்டரலைஸ்டு ஏசி என ஒரு நவீன அறைக்கான தோற்றம். மனோ குடுத்து வைத்தவன் எப்படியோ ஆடிட்டர் ஆகி சில பிரதான பிரபலங்களை க்ளையிண்டாக கொண்டவன்.. அவற்றுள் நான் தான் சில்லறை வர்த்தகம் ஏதோ சொந்தகாரனா போய்ட்டானேனு ஸ்டில் ஹி டூயிங் திஸ் பார் மீ..
மனோ பைக் இருக்கா? இருக்கே ஏன்டா? ..நீ பிஸியா? இல்லையே 6:30க்கு க்ளைண்ட் மீடிங் அதுவரைக்கும் ப்ரீதான்.. அப்போது தான் மணி பார்க்கிறேன் கடந்த சில வாரங்களாக மணிப்பார்க்கும் பழக்கமேயில்லாது போனது . 5:30 தான வா ஒரு காபி சாப்பிடலாம்.. போலாமே.. மையிலாப்பூரின் பிரதான வீதிகளில் ஒன்று அது. இத்தனைக்கும் குளத்தருகில் செல்லும் சாலை என்றாலும் இன்று வாகன நெரிசலில்லை. அய்யரே ரெண்டு காபி. சரி மனோ செட்டில் ஆகிட்ட எப்ப கல்யாணம்?..
பாக்கலாம்டா. முதல்ல காபி . ஆறு நிமிட தயாரிப்பில் உருவான காபியது. விலைவாசியின் காலத்தில் இன்றும் பாரம்பரியம் மாறாது பித்தளை டபரா செட் தான்.. கடை தான் பெரிசானதே தவிர பாரம்பரியம் மாறவில்லை நன்று..
பேச்சிடையில் குறுக்கே வந்த வயதுமிகுந்த வாலிபர் என்னை விசாரித்துபின் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்..
வணக்கம் சொல்லுங்க என்ன விசயம்?.அதாவது நான் உங்க பேன் இப்போ ரீசென்டா ஸ்டார் சேனல்ல ஒரு சீரியல் ப்ரொடியூஸ் பன்றேன் . நியாயபடி அது உங்களுக்கு சேர வேண்டிய க்ரெடிட் தான் .. உங்களோட நாவல் ஒன்ன தான் அந்த சீரியலா எடுக்குறோம் அதுபத்தி உங்ககிட்ட சொல்லிடனும்னு ரொம்ப நாளா தேடினோம் கிடைக்கல இன்னிக்கி அமைஞ்சிருக்கு...
ஓ அதான் விசயமா அதுகென்ன எடுத்துக்கோங்க... ஒன்னும் பிரச்சனையில்ல நான் கேஸ் எல்லாம் போடமாட்டேன்.
அதுமட்டுமில்ல சார் நாங்க இன்னொரு சீரியல் தயாரிக்க சொல்லி சேனல்ல ஒரு ஆபர் வந்துருக்கு. அதுக்கு நீங்க எதாவது.?
எதாவது தைரியமா கேளுங்க இதுல என்ன இருக்கு? அதுல கொஞ்சம் ப்ரஷா இருக்கனும்னு சேனல் ரெக்குவஸ்ட் அதனால நீங்க புதுசா ஒரு கதை எழுதி அத நீங்களே டைரக்ட் பண்ணணும்னு கேக்கலாம்னு தான் வந்தேன்..
சார் எனக்கு இதெல்லாம் தெரியாது . அதுமில்லாம என் லைன் வேற.
புரியுது சார் பட் ட்ரை பண்ணுங்க எங்க டெக் டீம் சப்போர்ட் பண்ணுவாங்க. நல்லா யோசிச்சு பொறுமையா சொல்லுங்க.. இது என் கார்ட் முடிவு பண்ணிட்டு கால் பண்ணுங்க நான் வரேன்..
மனோ டைம்ஆச்சு வா போலாம்
... சொன்ன மாதிரி ட்ரை பண்ணுடா ..மீடியா சான்ஸ் கிடைக்கிறது கஷ்டம்டா தானா வருதே ஏன் வேணாங்குற ?.
பாக்கலாம் மனோ அதுக்கு முதல்ல ஒரு கதை வேணுமே. லெட்ஸ் ஸீ..
.
மனோவை விட்டுவிட்டு நான் எனது சொந்த ஊருக்கே வந்துவிட்டேன்.. வக்கீல் வெங்கிக்கு போன் செய்தேன்…
வக்கீல் சார்.உன்கிட்ட கொஞ்சம் பேசனுமே.. சொல்லுடா என்ன விசயம் ….இல்ல நேர்ல பேசிக்கலாம் பஸ்டாண்ட் வா. …. அங்கதான்டா இருக்கேன். …..சரி இரு மதிகோண்பாளயம் - பஸ்ல வந்துட்டு இருக்கேன்...
ஸ்கார்பியோ நகர்ந்து கொண்டிருக்கையில் கேட்டான்.வெங்கி... சொல்லுங்க ஆபிசர் என்ன விசயம். இல்ல சென்னை போனேன் அங்க மனோஜ் பாத்து பேசிட்டு இருந்தேன்.அப்ப ஒருத்தர் என்ன சீரியல் டைரக்ட் பண்ண சொன்னார்.. இப்ப இருக்குற சூழ்நிலையில செய்லாம் நினைக்கிறேன் கொஞ்சம் வருமானமாவது இருக்கும்...
செய்டா தப்பில்ல ஒரு புது அனுபவம் தான . ஏற்கனவே. ரெண்டு மூணு சார்ட் பிலிம்ல உன் கதைய எடுத்துருக்காங்க. எனக்கு இது சரியா இருக்கும்னு தோணுது.
ஆமாடா எனக்கும் அப்படிதான் படுது. அவர் கூட என் நாவலதான் சீரியல் எடுக்குறதா சொன்னார்
அப்படியா அப்ப கேஸ் போட்டு ராயல்டி வாங்கிறலாம் வா..
வேணாம்டா அவருக்கே எனக்கு ஒரு க்ரெடிட் குடுக்கனும் தோணிருக்கு அதனாலதான் இத குடுக்க முயற்சி பண்றார்.. லெட்ஸ் ஸீ...
ஹலோ . மிஸ்டர் சிவராம்?. நான் பவித்ரன் . நீங்க கார்ட் குடுத்தீங்களே!
ஆமாம் சா் எங்க மீட் பண்ணலாம் நான் எங்க வரட்டும்.
பட் நான் தருமபுரியில இருக்கேன் . நான் டைரக்ட்டுக்கு ரெடினு சொல்ல தான் இந்தபோன்கால் அண்ட் கதை இன்னும் தயாராகல..
இருக்கட்டும் சர் டேக் யுவர் ஓன் டைம்.வேணும்னா எங்க டெக் டீம் அங்க அனுப்புறேன் டிஸ்கஸ் பண்ணி கதை ரெடி பண்ணுங்களேன்..
சொன்னபடி டெக் டீம் வந்து தங்கிட்டாங்க எல்லாம் சிவராம் செலவுதான். இப்ப டிஸ்கஷன் தொடங்க..
வந்தா போக வேண்டியது தானே ... என்றவள் வலியுறுத்தி சொல்கிறாள்.. சந்திரனி பேருக்கு ஏற்றவள்.. ஔியுடை முகம்.. பிறையுடைஅகம்.. கறை மட்டும் தானில்லை..
. என்ன தான் சொல்கிறாள்.. அப்படி வந்தது என்ன?
என்ன நீ அவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட .. போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?..
.. வராம இருக்கவன் எத்தனை பேரு தெரியுமா?..என்றாள்.. நீ தான் டாக்டராச்சே எத்தனை சொல்லு? என்ற வாய்தனில் விரல் பதித்து உஷ்ஷ் என்றபடி... நான் சொல்றேன்ல போ.. என்றாள்..
நீயும் வாயேன் ?
டேய் இது உன் தேவை நீதான் போகனும்.. அதுமில்லாம எனக்கு பர்மிஷன் இல்ல.. உனக்கு வந்துருக்கு போயேன்.. என்றாள்.
அப்படி என்ன தான் வந்தது?..
அட அதெல்லாமா சொல்லுவாங்க..?.. ஸ்பெயின்ல வேலைக்கு அப்பாயிண்ட்மண்ட் வந்துருக்கு.. போகலாமா வேணாமானு தான் கேட்டுட்டு ...
சரி அத குடேன் நான் வேற கிளம்புறேனே... எத? ... அட ஒத்த முத்தத்துக்கே ஒரு சைன்ய போரே நடத்தனும் போலயே... டேய் ஹரிஷ் அங்க போனதும் என்ன மறந்துற மாட்டியே..
எத மறந்தாலும் உன்னையும் மாம்ஸயும் மறக்கமாட்டேன்.. என்றவுடன் இச்சிய முத்தம் எத்தனை கலோரி என்று தெரியுமா?.. என்றான் ஹரிஷ்
வெளியே வரும் ஹரிஷை மீண்டும் உள்ளே அழைத்து சென்று பேசுகிறேன்.. பேசி போராடி அவனது தயக்கத்தை உடைத்ததும்.
நல்ல கதைதான் மாம்ஸ் நல்ல நடிகர்கள பயன்படுத்தலாம்ல...
இல்லடா நடிகர்கள்னா கதை தள்ளி போகும் புதுமுகங்கள் கதையோட கதாபாத்திரமா சிங்க் ஆகும்டா.. இப்ப வில்லா படத்த விஜய் நடிச்சிருந்தா நல்லாருக்காது.. அதேபோல இந்த கதையும் சயின்ஸ்பிக்ஷன் தான...
சந்திரனி சார்ட்டா நிலா..
நிலா நீ என்ன சொல்ற? ஹரிஷ் எதையோ சொல்லாதே என்று செய்கை செய்வதை பார்க்காமலில்லை..என்னடா ஸ்பெயின் அப்பாயிண்மெண்ட் வந்துருச்சா?
எப்படி மாம்ஸ்?
டேய் நான் டிடெக்டிவா இருந்தேன்டா. ரெண்டு மூஞ்சியும் பாத்த மூஞ்சி தான முகத்த பாத்தே சொல்லிட மாட்டேனா .. சரி கேம்ஸ் அப்பார்ட் நீ ஸ்பெயின் போடா. நான் வேற யாராவது பாத்துக்குறேன்..
இல்ல.மாம்ஸ் நான் போகலை. இங்க எதும் வேலையில்லைனு தான் போக முடிவு பண்ணேன். உன்னயும் சந்திரனியையும் விட்டு போக மனசில்ல... அதான் இப்ப டிவில வேலை கிடைச்சிருச்சே .. என்று அப்பாயிண்மண்ட்டை கிழித்து போட்டான்..
சரி ஹீரோயின் தான் அடுத்து தேடனும். என்றேன்.. ஏன் என் ஹீரோயினுக்கு என்ன கொற..
டேய் நிலாக்கு ஏன்டா சீரியல் எல்லாம் அவதான் டாக்டராச்சே..
ஆமா பேஸண்ட் க்யூ குறையாம நிக்கிது பாரு. அதுமில்லாம சீரியல்லயாவது ரெண்டு மூணு ரொமான்ஸ் இருக்குமில்ல..
டேய் எழுதுறது நானு ..
சுத்தம் போ. நீயே சாமியாராச்சே..
இந்த சாமியாராலதான் இன்னிக்கி உன் ஸ்பெயின் வேல போச்சு.. இந்த சாமியாரால தான் இந்த நிலா..
******************************
ஹலோ சாமி? நான் பவி பேசுறேன்.
சொல்லுடா என்ன விசயம் .
நேர்ல பேசலாமே காலைல மயிலாப்பூர் காபியோட.
சரிடா..
அதே மயிலாப்பூர் காபி தினமும் துளியும் மாறா சுவை. லூம்லேண்ட் காபிக்கு அடுத்து இதுதான் என் பேவரைட் . என்ன சொல்றீங்க சாமி? .
.உன் பேவரைட்ல நான் என்னடா சொல்லட்டும் .
அதில்ல நான் கேட்டதுக்கு என்ன சொல்றீங்க.
டேய் சீரியஸா சொல்றீயா எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல.
செய்லாம் சாமி உங்களுக்குதான் இந்த கேரக்டர் சரியா இருக்கும்.
பாக்கலாம்டா ஏதோ நீ சொல்ற. ஆனா உனக்கு ஏன்டா இந்த நிலமை எப்படி இருந்தவன்டா நீ.
யார்கண்டா சாமி எதிர்காலம் இதவிட மோசமா கூட இருக்கலாம்.. ஆமா சாமி பாஸ் எங்கயிருக்காரு?.
டேய் அவன் உன்மேல ரொம்ப கோவமா இருக்கான்டா.
ஏன் சாமி என்மேல அவருக்கென்ன கோவம் வா போய் கேட்கலாம்.
இல்லடா அவன் ரூம்விட்டு வெளிய வந்தே 3 மாசம் ஆகுதுடா. ரொம்ப டம்ப் ஆகிட்டான்..
ஏன் சாமி இத என்கிட்ட சொல்லாம. எப்பேர்பட்ட மனுசன ஜெயில் மாதிரியா வெச்சிருக்கீங்க..? இப்பவே வாங்க போலாம்.
இல்லடா ஒருநாள் வரும் போகலாம் முதல்ல நான் பேசி சரி பன்றேன்.
ஏன் சாமி அவ்வளவு கோபமாவா இருக்கார்?
உன்ன பத்தி பேசினாலே எரிஞ்சி விழுறான்..
கடைவிழி விளிம்பில் கண்ணீர் ததும்பி காற்றில் பறந்தது. நான் எப்படிபட்டவரை இழந்திட முயல்கிறேன்.. தன்னை அழித்துக்கொண்டு என்னை போன்ற சிறுவனை வளர்த்து அழகுபார்த்தவரை.. துரோகம் செய்துவிட்டேன்.. மதன் என் டிடெக்டிவ் கேரியரின் நதிமூலம். சாமி அவர் உற்ற நண்பன் முன்னாள் பத்திரிக்கையாளர் இனி சீரியல் நடிகர்..சாமி கிளம்பிட சிவராமன் வந்தார்.
வாங்க பவித்ரன் . டெக் டீம் பசங்க சொன்னாங்க கதையும் ஸ்க்ரிப்டும் நல்லா வந்துருக்குனு .
தெரியலைங்க சார். எனக்கு இதில் அனுபவம் இல்ல.
நாங்க இருக்கோம் பவித்ரன் தைரியமா செய்ங்க. அப்ப எப்ப சூட் போகலாம்?
அடுத்த மாசம் போகலாம் சார். எல்லாம் என்கதைக்கு ஏத்த என் பழைய கதைகளின் கதாபாத்திரங்களை நடிக்க சொல்லிருக்கேன். எல்லாம் புதுமுகம் அதான் கொஞ்சம் டைம் எடுக்கலாம்னு ..
பாருங்க ட்ரையின் ஆயிட்டீங்க அவ்வளவு தான் . சரி அப்படியே ஆகட்டும் .. சூட் போது கூப்பிடுங்க இப்போ கிளம்புறேன்…
***************************************
நல்ல குளிர்.. கார்ல் அந்த ஹீட்டர ஆன் பண்ணு. என்று கண்ணாடிய தொட்டு பார்த்து சொன்னான் மெக்லின். காலடி சப்தம் கேட்டு திரும்பிய மெக்லின். அட 56 கிலோ பனிசிற்பமே. என்று இதழினை தின்றுகொண்டிருக்க.. வந்த கார்ல் அப்ப ஹீட்டர் தேவயில்ல போலது என்றதும். பிரிந்தனர் ..
ஸ்டெல்லா உங்க தேகாரண்ய காண்டத்த அப்புறமா வெச்சிக்குறீங்களா கொஞ்சம் வேலயிருக்கு..
அதென்ன கார்ல் தேகாரண்ய காண்டம்.. ?
கேக்காத ஸ்டெல்லா ஏதாதவது விசமமா சொல்லுவான் என்றான் மெக்லின்.
அதுவா ஸ்டெல்லா.. தேகம் னா உடம்பு ஆரண்ய காண்டம் னா தேடல் காலம்.. உடம்பின் தேடல..
போதும் போதும்.. ரொம்ப தீவிர தமிழா இருக்கு பட் ஐ டோண்ட் நோ தமிழ் தட் மச்..
எனக்கு மட்டும் தெரியுமா என்ன.. எழுதுறவன் எப்படியும் தமிழ்ல தான் எழுதபோறான் . எதுக்கு சிக்கல் . மேஜர் சுந்தர்ராஜ நடை எல்லாம் அதான் தமிழ்லயே பேசிறலாம்..
சரி.. எல்லாம் சரியா இருக்கா பாரு. சிக்னல். .
சிக்னல் செக் பண்ணனும்னா ரேடார் சோனார் எல்ராம் எல்லாம் க்ராஷ் பண்ணனும் இல்லனா நம்மள காட்டி கொடுத்துறும். மெக்லின்..
யோசித்த ஸ்டெல்லா.. கார்ல் என்ன பண்ண போற.. சிம்பிள் ஸ்டெல்லா மூணு முறை ஹெவி வைப் பாஸ் பண்ண போறோம். .. இதுல எந்த பிரச்சனையும் இல்ல...
சரி.. டூயிட்.. ஸ்டெல்லா.. சீ தேர்.. ஏதோ புயல் நெருங்குது..
ஐ எஸ்பெக்டட் இட்..
3... 2...1.... வருக வருக அற்புத பனிப் புயலே...
************************
சற்று விசாலமான மங்கலான அறை அதனுள் ஏசி குளிரும் அலுவல் நடைகளும் மேசை சேர் டெலிபோன். வால்டிவி போன்ற உபகரணங்களின் கேளிக்கையாளாய் அமர்ந்திருந்தார் ஜீவானந்தம் . சுருக்கில் ஜீவா . ஒரிசா பாலு வின் குழுமத்தில் ஒன்றாக பணியாற்றி பின் சில மனசங்கடங்களாய் பிரிந்து தனிபட்ட முறையில் கடலும் கடல்சார் நிகழ்வும் கலாச்சாரம் போன்றவற்றை ஆராய்கிறார் .. டாக்டரேட்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.. பத்மபூஷனயும் எதிர்நோக்கி உழைக்கிறார்..
ஆனால் விசயம் அதுவல்ல அந்த அறை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரின் பார்வையாளர் அறை காலை 11ல் வந்தவர் இதோ இதோவென்று 5:10 ஆகிறது.. லிமா அந்த அறையின் ரிசப்சனிஸ்ட் .. லிமா. உள்ளிருந்து வந்தது அதிகாரக்குரல்.
சார். யெஸ் சார்..
யோவ் மாடசாமி. கட்சி பதவினு இருந்தா நாலு பிக்கல் பிடுங்கல் இருக்காம எப்படி ? (போனில்)
லிமா டெலிப்பின் வகைகள பத்தி நாளைக்கு பேசனும். சார் டெலிப்பின்?.. அதாம்மா கடல்ல எகிரிகுதிச்சு போகுமே... டால்பின் சர்.. அத பத்தி ஒரு ட்ராப் அடிச்சு தரயா?.. ம் சார் உங்கள பாக்க ஜீவானந்தம்னு ஒருத்தர் வந்துருக்கார் ஏதேதோ பேப்பர். பழுப்பா போட்டோக்கள். தெளிவா புரியல...
சரி நீ ட்ராப்ட் ரெடி பண்ணு. அப்புறம் அந்தாள வரசொல்லு...
வணக்கம் சர். வணக்கம் வணக்கம் என்ன விசயம்.
சார் ஒரு முக்கியமான விசயம். என்று ஆரம்பித்து பேப்பர் படங்கள காட்டி அரைமணி நேரம் பாடமே நடத்தினார் ஜீவா.
சர் டீ. என்று வந்த ப்யூன் ஆப் சிப்ஸ் ட்ரான்ஸ்போர்ட் மினிஸ்டிரி. ஆள். பஜ்ஜியும் தந்து போனார்..
உட்காருங்க பஜ்ஜி சாப்பிடுங்க. என்றார் அமைச்சர். ___யன் (மன்னிக்கனும் டீகப் பெயர் பலகையை மறைத்துவிட்டது ) தயக்கத்தோடு ஒன்றை எடுத்து கடித்தார் ஜீவா. அதற்குள் 3-4 தின்ற அமைச்சர் எண்ணையை துடைக்க ஜீவா கொண்டுவந்த பேப்பரைக் கிழித்து துடைத்தார்..
கவனித்த ஜீவா. சர் நீங்க இத சீரியஸா எடுத்துக்கலனு தெரியுது. ஆனா தயவு செஞ்சி நான் சொன்னத மட்டும் செய்ங்க எனக்கு அது போதும். என்று கிளம்பினார்..
************************************
நறுங்கதிர் கடலின் திவளைப் போர்வையை விலக்க விலக்க மெல்ல மெல்ல வான்வெளி வெளிச்சம் பெறுகிறது.. சங்க கால சிற்றிலக்கிய கற்பனை ஒன்று இது போன்ற காலை வேளையில் என் சிந்தையில் உருகுவது உண்டு... அதிகாலை வானம் இன்னும் நீங்கா இருள். அழகு பெண் ஒருத்தி வாசல் தெளித்து கோலமிட புள்ளி வைத்து நிமிர்கிறாள்.. விபூதியைதண்ணீரில் கரைத்து தெளித்தவுடன் வெளுக்குமே அதுபோல் வெளுத்தது காலை வானம்.. பாடலோ புலவனோ தொகுப்போ அறியாவிடினும் இந்த கற்பனை என் மனதிருந்து நீங்கவே இல்லை..
ஏலே .. காரமுத்து . சூசையப்பா. வாங்கடே . கடலுக்கு என்னமோ ஆச்சுலே என்று கூப்பாடு போட்டு குமுறுகிறாள். செவத்தாள். எனும் 50 வயது பெண். (பேரிளம் பெண் என வைத்துகொள்வோர் வைத்துக்கொள்ளலாம் )
சலசல வென அலையோசைக்கு மத்தியில் கூட்டங் கூடி ஓலமிடுகிறது குப்பம். இரவெல்லாம் தீயில் எரிந்து கருகிய கடல்போல் கருத்து திரிகின்றன அலைகள் . பிணங்களான டால்பின்கள் கெண்டை கெளுத்தி கொடுவா என்னும் ஏக ஆயிர மீன்கள்... காகம்போல கருப்பாகிப் போன வாத்துகள் நாரைகள். பீனிக்ஸ் என்னும் பூநாரைகள்.. சகிதம். கருமேனிக் கோலம்.
கூட்டத்தின் சிந்தனையாளர்கள் சிலர். கூவத்த கலந்துட்டான்ப்பா அதான் இப்புடி. இல்லல்ல கடலுக்கடியில ஏதாச்சும் எரிமலை வெடிச்ச கழிவுகளா இருக்கும்.. சாயப்பட்டரைக்காரனா இருக்கும் .. போன்ற சிந்தனைகள்.. இன்னும் செய்தித்துறைக்கும் அரசுக்கும் விடியல் வரவில்லை..சோம்பல் முறிக்கும் சூரியன். சுடர்மணி மார்பின் சுருள்முடி கருக்கினால் தான் விடியலை உணர்வர்.
மெல்ல மெல்ல தேய்ந்த சக்கரத்தின் எண்ணையில்லா கிறுச்சுகள் போல் அரச அலுவல் திட்டங்கள் தூய்மை பணிகள்.. மிக அவசரமாக நடக்க வேண்டிய தருணமிது.. ஆனால் அரசுக்கு இருப்பிலே சந்தேகம்.. ஊடகத்துக்கு காரணத்தில் சந்தேகம்.. கச்சா எண்ணை என்கிறது ஆய்வுகள்...
கச்சா எண்ணை தரும் பழயபாறைகள் வங்ககடலில் இருப்பதாக வந்த ஆய்வு தகவலினை கொண்டு திட்டம் தயாரிப்பதர்க்குள்... பட்டென முடிக்கவேண்டிய காரியத்திற்கு பக்கெட்டுகளை தந்தது அரசு.. ( அந்த வாதங்கள் பின்னே தொடரலாம் )..
சமூக ஆர்வலர்கள் மாணவ இயக்கங்கள். குப்பத்து மீனவர்கள். இதர மனிதர்கள் துப்புரவில் ஈடுபட. தூரத்தில் ஒற்றை பூநூல் கவிஞன். வங்க கடலின் மேல் சகஸ்சர வர்ண கவிதை படைக்கிறான்...
***************************************
அதேநாள் ஜீவானந்தம் அமைச்சரின் பார்வையாளர் அறையில் காத்திருக்கிறார்.. கண்களில் கோபம் தெறிக்கிறது.. பெண்ணாய் இருந்திருந்தால் கம்பனின் சிறுகண் தீயூக வரியை வைத்திருக்கலாம்.. இவர் கண் சற்று அகன்றவை. லிமா தயங்கி வினவ.. அமைச்சர் டெல்பின் உரைக்கு சென்ற விவரம் கிட்டியது பாக்கியம்.. ஜீவா இன்னும் கொதிக்கிறார்.. எத்தனை பெரிய காரியம் நிகழ்ந்துள்ளது.. அலட்சியமாய் டால்பின் உரையா...
உள்நுழைந்த அமைச்சரின் கழுத்தை பற்ற . காவல்துறை லாவகமாக சிக்கியது கேஸ் என்று லபக்கினர்..
***** நாயே . படிச்சி படிச்சி சொன்னனே. பஜ்ஜி தின்கிறதுல விட்டுட்டுயே. **** பிறந்தவனே.. கடல்வளத்தையே அழிச்சிட்டீங்களேடா.. என்று துள்ளினார். ஜீவா.. விழைவாய் விசாரணைக் கைதி...
***************************************
வாங்க சிவராம்.. நாளைமறுநாள் . ..
சொன்னாங்க பவி. நல்லபடியா செய்ங்க எனக்கும் வேற சூட்டிங் இருக்கு.. கவலபடாதீங்க தைரியமா செய்ங்க. நான் நடுவில ஒருநாள் வரேன்... என்று மடக்கென காப்பி அருந்தி. ஆல்த பெஸ்ட் என்று சென்றார்..
சாமி வாங்க.. மதன் பாஸ் போய் பாக்கலாம். அவர்கிட்ட சொல்லனும்.. டேய் வேண்டாம்டா. இன்னொருநாள்..
இல்ல சாமி . பாருங்க சிவராம் வருலன்னுட்டார். யாராவது பெரியவங்க இருந்தா நல்லாயிருக்கும்ல. ஏன்டா என்ன பாத்தா பெரியவனா தெரியலயா?.
அப்படியில்ல சாமி . என்ன அதிகாரம் பன்ற ஆளிருக்கனும்.. வாங்க.. ஆட்டோ. சாமி எங்க போகனும் சொல்லுங்க.? லஸ்கார்னர். ஆட்டோ இந்திய வரலாற்றில் முதன்முறையாக லஸ்கார்னருக்கு டக்கென வந்தது. சாமி.... வா போகலாம். சிறிய சிறிய சந்தடி சந்தைக்குள் சென்று நுழைய ஒரு மீடியம் காபிக்கடை. உள்ளே நுழைந்த எனக்கு உயிர் மட்டும்தானில்லை..
எச்சில் டம்பளர்களை எடுத்துச்சென்று கழுவும் வேலை. மதன் அவர்களுக்கு..
டீ மாஸ்டர் யோவ் ******* என்ன புதுப் பொண்டாட்டிய தடவுற மாதிரி தடவிகிட்டு என்று எச்சில் டீயை மதன் மேலே ஊத்தினான்.
பாவம். துரோகம். மதனை மிகவும் நொடி்திருக்கிறது.. அய்யயோ பைலர் என்றார் கடை முதலாளி.. கீழே விழுந்த பைலரின் சூட்டினை முத்தமிட்டு குளிர்விக்கிறான் டீ மாஸ்டர்..
டேய் பவி விடுறா..விடுறா.. என்றார் மதன்.. அந்த இரண்டு நிமிடத்தில். கடையே தவிடு போடியானது.. டீ மாஸ்டர் எழுவதற்கே நான்கு பேர் வேண்டும். எச்சில் டீயை ஊத்தின பாவம். முட்டியில் கூரிய கம்பியால் குத்தி. நல்ல டீயை ஊத்தி வைத்தேன்.. ஆயுளுக்கும் வலிக்கும்.
சொன்னேன் இல்லடா சொன்னல்ல.. வந்துட்டான் பாரு.. ஒருநாள் வருவான்னு சொன்னேனில்ல. வந்தா வருத்த படுவன்னு சொன்னல்ல.. அவன் என் சிஸ்யன்டா.. என்றார் மதன்.. (நல்ல பஞ்ச் தான்.. அவருக்கு ஹீரோயிசம் பிடிக்காது)
மதனை அழைத்து வந்தேன். வழக்கமான மயிலாப்பூர் காபி . கண்களில் இன்னும் இன்னும் கண்ணீர் ... டேய் அழாதடா.. நடந்தது நடந்தாச்சு விடு.. என்றார் மதன்.. அழுது அழுது காபில உப்புகரிக்க போகுது என்றார் சாமி.. சாமி நீங்க மட்டும் நடுவுல மாட்டிருந்தீங்க.. உங்கள அந்த அடுப்புலயே உட்கார வெச்சிருப்பேன்.. அட நான் அங்கதான் இருந்தேன் பாக்கலயா நீ..
சரி பாஸ் ஏன் இப்படி ஆகிட்டீங்க.. எப்படி இருந்தீங்க.. அந்த டீக்கடைக் காரனோட அண்ணன் ஒருத்தன் ஒரு மர்டர் கேஸ்ல உள்ள இருக்கான் நான் இன்ஸ்பெக்ட் பண்ண கேஸ்தான்.. அதான் பழிவாங்குறதா..
ஒரு நிமிசம் என்று டேபிளின் கீழே தேடினார்.. பாஸ் என்ன தேடுறீங்க?. ஒன்னுமில்ல ஒரு சின்ன இன்ஸ்டிங்க்ஷன். கொஞ்ச நாளா இல்லாததால தப்பு கணக்காகிருச்சு மறுபடியும் மொதல்ல இருந்து படிக்கனும்.. பாஸ் கீழ மைக்க தான தேடுனீங்க. இதோ அழுவும் போதே எடுத்துட்டேன். என் பாஸ் இன்டிக்ஷன் தப்பாகாது.. ஆள பாத்தியா. முன்னயே பாத்துட்டேன். ராபின். அசோக்கோட ப்ரண்ட் டிடெக்டிவ். ம்.. பரவாயில்ல பையன் ட்ரையின் ஆயிட்டான்டா... என்றார் சாமியிடம்..
பவி அந்த ராபின பிடிக்கனுமே.. வேண்டாம் பாஸ் இன்னும் கொஞ்சம் போகட்டும். அவனுக்கு பக்கமே ஆள்வெச்சிருக்கேன். அந்த பையனுக்கு முதற்கேஸ். ஹாஹா உனக்கும் அப்படிதான ஆரம்பிச்சது.. ஆமா பாஸ். அந்த நல்ல தம்பி. கேஸே மறந்துட்டேன் ஆனா அந்த எம் எல் எம் காபி மட்டும்.. இன்னொரு நாள் போகனும்.. நாமெல்லாம்.. பழய படி சாமிய அங்க எங்கயாவது கழட்டி விட்டு அலைய விடனும்..
***************************************
நிரஞ்சன் கொண்டு வா.. பாஸ் உங்க இன்வெஸ்ட் ரொம்ப நாளாச்சு.. ஓ. இது ராபின் தான. எஸ் பாஸ்.
இன்வெஸ்டிகேசன் முடிந்தது.. அதிர்ச்சியில் நாங்கள்..
உங்கள சேரவிடாம வைக்கனும்னு எனக்கு கேஸ். உங்கள வேவு பாக்க அசோக் என்ன அப்பாயின்ட் பன்னார்.. உங்க டிடெக்டிவ் லைசன்ஸ் போனதுக்கு ஏதோ காரணம் இருக்குனு என்ன ஸ்பெஷல்லா விசாரிக்க சொன்னாரு..
விசாரிச்சியா?..
ம். சென்ட்ரல் கவர்மண்ட் ப்ரஷர். ஏதோ பாரின் இன்ட்ர்பூஷன். அதுக்கு நீங்க இருக்குறது புடிக்கல.. சீக்கிரமே உங்கள கொன்னுடலாம். ஜாக்கிரதை நான் வரேன். ராபின்..நான் அசோக்க பாக்கனும்னு சொன்னேன்னு சொல்லு...
**************//**---------------\_________*
ஹரிஷ். ஜான். நிலா எல்லாம் ரெடியாகுங்க.. நாளைக்கு சூட்.. சாமி நீங்களும்..
ஜான். சந்தோஷ் ரெண்டு பேரும் ப்ரிப்பேர் பண்ணுங்க . ரத்னா சிவராம்சர்க்கு சொல்லிடுங்க..
அர்ஜித் நீங்க சீன் பேப்பர்ஸ் செக் பண்ணிடுங்க.. நான் போய் ஒருத்தர இன்வைட் பண்ணிட்டு வரேன்...
என்றபடி மதனை சந்திக்க சென்றேன்...
பாஸ் நாளைக்கு முதல் நாள் சூட். நீங்கதான் ஆரம்பிச்சு வெக்கனும்.. சரிடா எல்லாருக்கும் ஒரு கேரக்டர் குடுத்தியே எனக்கு எதுவும் இல்லயா.. நான் நடிக்க லாயக்கில்லனு முடிவு பண்ணிட்டியா?.
இல்ல பாஸ் இத பத்தி உங்ககிட்ட கொஞ்ச நாள் கழிச்சு பேசலாம்னு இருந்தேன். தனியா ஒரு கேரக்டர் இருக்கு பாதியில ஜாயின் ஆகும்.. எனக்குனு வெச்சிருந்தேன்..உங்கள எப்பகூட்டி வந்தனோ அப்பவே அந்த கேரக்டர் உங்களுக்குனு முடிவு பண்ணிட்டேன்..
சரி நாளைக்கு எப்ப? பத்து மணி பாஸ். பவி ஒரு காபி போடுறியா ரொம்ப நாளாச்சு.. சரி பாஸ். காபி கோப்பையுடன் வந்து.. சொல்லுங்க பாஸ் என்ன சொல்ல போறீங்க..?.. இல்லடா லைப் இப்படி தானா? டாப் டிடெக்டீவ் நானு . நிறைய பேரு புகழ்னு இருந்தேன்.. நீ என்னயும் தாண்டி பெரியாளா வந்த.. இப்ப ரெண்டு பேரும் இப்படி டிவி சீரியல்க்கு.. இல்ல பாஸ் நீங்க என்ன சொல்ல வரீங்கனு புரியுது. விசயம் இதுதான்.. நம்ம லைசன்ஸ் கேன்சல் ஆச்சு கவர்மண்ட்ல ப்ளாக் மார்க் வெச்சாங்க.. பர்சனலா கார்னர் பண்ணாங்க. நாம போராடல ஒதுங்கிட்டோம்.. கவலபடாதீங்க நாம மறுபடியும் ஒரு ரவுண்ட் வருவோம்.. பட்சி சொல்லுது.
என்னமோடா எல்லாம் நல்லதுக்கு தான்.
***************************************
அண்ணா , சந்திரனி பேசுறேன் . சொல்லு நிலா எதாவது இன்சக்சன் வாங்கிவரனுமா? இல்லனா ஹரிஷ போலீஸ் பிடிச்சுட்டு போய்ட்டாங்க.. நீங்க சீக்கிரம் வாங்க.. மைகாட் எப்ப என்ன ரீசன்?. சரி இரு உடனே கிளம்புறேன்..
ஹலோ கார்த்தி.. சொல்லுங்கண்ணா. டேய் ஹரிஷ போலீஸ் அரஸட் பண்ணிருக்காங்க நான் வர வரைக்கும் .. சரிங்கண்ணா நான் பாத்துக்குறேன்.. வெங்கி எங்கடா ? வீட்ல அண்ணா சரி அவனையும் கூட்டிபோ..
மறுகாலை. எஸ்பி ஆபி.ஸ் . எஸ்பி யாரோ வடநாட்டு வெளுப்பு . டிஎஸ்பி நம்ம வள்ளிராஜன் தான் என்றான் கார்த்தி.. சரி நான் பேசிக்குறேன் கார்த்தி நீ வீட்டுக்குபோ நைட் பூராம் இருந்துக்க நிவேதா எப்படி இருக்கா? அவ ஜாலினா ஈவினிங் கூட்டி வரேன்..
என்ன வள்ளிராஜன் டிஎஸ்பி ப்ரமோசன்க்கு ட்ரீட் எல்லாம் இல்லயா? அட வாங்க பவி என்ன இந்தபக்கம் ? வரவேண்டாம்னா எங்க உங்க டிப்பார்ட்மெண்ட் விடறாங்க.. நம்ம பையன் ஹரிஷ பிடிச்சிருக்காங்க என்ன ரீசனும் இல்ல. ஹீ இஸ் ப்யூர் நான் ஸூரிட்டி.. பாருங்க எதாவது மாத்தி அரஸட்டா இருக்க போது.. கூல் பவி இப்ப விசாரிச்சரலாம்..
**************************************
அந்த அறைக்குள் நுழைய முயன்ற கார்ல் . எதிர்புற நிழலினை ஆராய்ந்தான். சில ஈருடல் ஓருயிர் அசைவுகள். நிழலின் கருமைபிம்பம். சிக்கலான நேரங்களில் இவர்களுக்கு கலவி வேண்டியுள்ளது விவஸ்தையற்றவர்கள்..
ட்ரிங் ட்ரிங். காலிங் மெக்லின் ஸ்டெல்லா. என்றது ரோபாடிக் கரகரகுரல்.அறையாடையும் நுரையாடையும் இல்லாத இவர்கள். அவசரத்தில் கிடைத்தனை மானக்காவல் என்னு கிடைத்ததை உடுத்தி வெளிவந்தனர்.
என்னாச்சு கார்ல்.? என்றவள். கார்ல் திரும்பாம சொல்லு என்றும் சொன்னாள்.. மெக்லின்க்கு அந்த பிரச்சனையில்லை..
ஒரு இஸ்ஸீ ஸ்டெல்லா. ஆறாம் புயத்தில் அக்கி வந்த வடிவேலர் போல சின்ன பிரச்சனை பெரிய இம்சை ..
புரியல கார்ல்.. சென்னைப் பக்கம் கடல்ல ஆயில் கொட்டிருக்கு சுமார் 3.4 கிமீ. க்கு.. சோ வாட்?..
சோ வாட்டா ஸ்டெல்லா எல்லா ஜியாகிரபிக்கல் ஆக்டிவிட்டியும் நீ ஹெட் ஆபிஸ்க்கு சொல்லனும் இல்ல.. எங்க நீ ஜியாகரபி விட்டுட்டு ஜீவாலஜில காம்பூசன் ரிப்போர்ட் குடுப்ப போலது..
இன்னும் திரும்பல ஸ்டெல்லா .. நான் ஓக்கே ஆனா உடனே ட்ரஸ் பண்ணிக்கோ.. ஹெட் ஆபிஸ்ல இருந்து வீடியோ கால் வரும்..
***************************************
பவி இது கொஞ்ச சிக்கலான கேஸ். மினிஸ்டரே டைரக்ட்டா தலையிடுறார்.. என்ன வள்ளிராஜன் அப்படி என்ன பிரச்சன அவன் அவ்ளோ வொர்த் இல்ல.. புரியுது. பட் இன்வெஸ்டிகேசன் முடியுற வரைக்கும் எனக்கே அலோட் இல்ல..
எஸ்பி க்கிட்ட பேசலாமா?.. ம்..
ஹலோ சார். ஐம் பவித்ரன்..
சோ வாட்?
(ஓ கூஜா சீனா )
சர் ஐம் டிடெக்டீவ் பவித்ரன் கலைச்செல்வன். வான்னா டாக் டூ யுவர் மினிஸ்டர்..
வாட் மினிஸ்டர் .. யாரு நீ?..
ஓ.. ஹலோ சர் பவித்ரன்.
சொல்லுங்க பவித்ரன் என்னவிசயம். ஜட்ஜ் கிட்ட பேசனும்..
சர் . பவித்ரன்..
சொல்லு பவி. என்ன திடீர்னு..
சார் அந்த மும்பை டபுள் மர்டர் கேஸ் பத்தி..
ஜி பவித்ரன் என்ன விசயம் சொல்லுங்க என்று பம்பியது எஸ்பி..
சார் அப்புறம் கூப்பிடட்டா.. சரி பவி..
நான் மினிஸ்டர் கிட்ட பேசனும்...
சரி சரி. நான் ஏற்பாடு பன்றேன்..
***************************************
அந்த விலாசமான அறையில் கண்ணாடி போர்வைக்குள் ஔிக்கற்றைகள்.. தீனமாய் கூடி வீடியோ கால் தொடங்க. ஸ்டெல்லா வாட்ஸ் ஹப்பனிங் தேர்.. ?. நத்திங் சீரியஸ் சர். ஜஸ்டிஸ் ஆர் நாட் பார் அஸ். .. மெக்லின் கார்ல் ஹியர் ஸ்டார்ட்ஸ் யுவர் கவுண்டவுன். இன்னும் 56 நிமிசத்துல உங்க ஜாப் ஆரம்பிக்கும்.. என்ஜாய் அன்டில் தட்.. பை ஐம் என் .டி.
பை சர்.. ஸ்டெல்லா லெட்ஸ் கோ.. என்றது மெக்லின்.
பட் ஸ்டெல்லா பீ ஆன் டைம் . யூடூ மெக்லின் என்றான் கார்ல்...
சரி கார்ல் நீ என்ன பண்ணுவ.?.
நத்திங் ஸ்டெல்லா அகநானூறு . கலித்தொகை படிப்பேன்.. வாயில் திளைத்த அமுதெங்கோ . மாமலை விளைத்த மணியெங்கோ. முல்லை மொகுளம் சுருள்கத்தி. கொள்ளை நிறைந்த உடலிதுவோ.. பிகாஸ் ஐம் சிங்கிள்..
பட் ஐ லவ் யுவர் இன்னஸன்ஸ் என்றாள் பிறையக பெண்டி..
***************************************
இன்வெஸ்டிங் ஹால் ...
சொல்லுங்க ஹரிஷ் நீங்க எந்த கேங். ஆல்கய்தா . தைபான். ம்..?
நானென்ன பண்ணேன்னு இப்ப விசாரிக்கிரீங்க..
சடப்.. சொல்லு எந்த கேங்?.
மௌனம்.
சொல்லு ....
யூ செட் மீ டூ ஸட்டப். ..
என்ன திமிரா சர்ஜிகல் அட்டாக் காட்டடுமா..
சொல்லு எதுக்கு டிப்பார்ட்மெண்ட் சைட்ட ஹேக் பண்ண...?.
ஓ அதுவா அது சும்மா வௌாட்டுக்கு பன்னேன்..
வௌாடுறதுக்கு இதென்ன சேப்பாக்கமா?..
போன வாரம் ஐபி பேங்கொட நெட் பேங்க்கிங் க்ராஸ் பண்ணிருக்க... இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?..
பேங்க்ல வேல கிடைச்சது சர்வர் அட்மின்.. வேலைக்கு 5 லட்சம் கேட்டான் அவன பழிவாங்க பண்ணேன்..
சரி இந்த கேஸெல்லாம் விட்டுறோம். நீ இன்னொரு வேல செய்யனும்..
என்னனு சொல்லுங்க முடிஞ்சா....
**************************************-
உடைக்களைந்தே உடலணிந்தார் போல.. அட. ஸ்டெல்லா டைம் அப்..
எங்கெங்கு போனதோ என்னவன் இதழுமே. அங்கங்கு உயிருண்டெனக் கண்டயர்ந்தேன். களிப்பெய்தினேன்..
ஹலோ ஸ்டெல்லா டைம் அப் .. டைம் அப்.. இன்னுமா தூங்குற..
மை வைத்தெனை மையல் கொளச்செய்தாய்.. கை வைத்து சில கள்ளம் செய்தாய்...
ஸ்டெல்லா . காலிங் ஸ்டெல்லா..
திடுக்கிட்டு எழுந்தாள். திரும்பி நின்ற கார்ல். பயப்படாத ஸ்டெல்லா நான் தான் அப்படி பேசினேன்.. ப்ளீஸ் கவர் யுவர்செல்ப்.. ரொம்ப நேரம் திரும்பி நிக்க மாட்டேன். ரெடியாகி வா.. டைம் ஆச்சு..
3.....2......1...♥ மை பாய்ஸ் இட் டைம் பார் அஸ்.. லெட்ஸ் ஸ்டார்ட் இட்..என்றது கவுண்டவுன் என்ட் மெசேஜ்.
மெக்லின் மொத்த சர்வர்ஸீம் இன்டர் கனெக்ட் பண்ணு..கார்ல் மாஸ்க் பார்ம் பண்ணு .... ஐபி மார்ப். நான் கன்ஜாயின் பன்றேன்.. என்றாள் ஸ்டெல்லா..
ஜாலி ஜாலி.. ஆகாய கங்கையை அங்கையில் அள்ளி...
என்ன உளர்ற கார்ல்.. கம்பராமாயணம்..
வேலை முதல்ல.. முதல்ல இந்தராமாயணம் அப்புறம் இம்பராமாயணம்... சாரி கம்பராமாயணம்...
ம். இட்ஸ் ரெடி.. என்றான் மெக்லின்.
என்னதும் ரெடி.. என்றான் கார்ல்
யா தென் கம் லெட்ஸ் லாஞ்ச்..
ஹைபர்போலிக் இன்டக்ரேட்டட் சிஸ்டம் ஆப் பக்கிங். ஆன் SQL ..
பேரு என்ன வெக்கலாம் கார்ல்..? ரான்சம்.. என்றான் கார்ல்....
ஹலோ பாஸ் வீ டன் இட். நேம்ட் ரான்சம். .
ஹியரிங் நைஸ்.. கன்டினு பார்வர்ட்..
***************************************
ஹரிஷ் ஒரு சர்வர கண்டுபிடிக்கனும் அத ஹேக் பண்ணனும்..
எனக்கு அவ்வளவு எல்லாம் தெரியாது... வேணும்னா மாம்ஸ் கிட்ட கேளுங்க..
யாரு மாம்ஸ்.. ?.
பவித்ரன் கலைச்செல்வன்..
ஓ சிம்பிள் . அவரு மினிஸ்டர பாக்க போயிருக்கார்...
***************************************
ஹலோ பவி . என்னாச்சு நாளைக்கு சூட் கேன்சல் பண்ணிட்டீங்கலாம்..
சாரி சிவராம். ஹீரோ ரோல் பன்ற ஹரிஷ போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க அதான் ப்ராப்ளம்..
ஓ சரி சரி இதெல்லாம் சகஜம் பாருங்க. சால்வ் பண்ணிட்டு மெதுவா ஆரம்பிக்கலாம்... அப்புறம் ஜான் சொன்னான் கதையில வரதெல்லாம் நிஜமா நடக்குதுனு .. பாத்து ஜாக்கிரதை..
ஆமாம் சர் அது ஏதோ கோஇன்சிடன்ட்.
***************************************
ஓர் பரந்த அறை அதை அநாவசியமாக ஆக்கிரமித்த உயர்ரக டேபிள் சேர் சோபா . ஏசி டிஸ்ப்ளே டிவி. என சகித ஆடம்பரங்கள்.. இறைக்க பட்ட விசால அறை...
சின்ன குழந்தைகள் ஓடி விளையாடி கொண்டிருக்க . காத்திருக்கிறேன் நான்.
ஹலோ. பவித்ரன் என்ன இந்த பக்கம் ...
கொஞ்சம் தனியா பேசனும்.. ம்..
சொல்லு என்ன விசயம்..
ஹரிஷ அரஸ்ட் பண்ண சொன்னீங்களாம்.. ஹி இஸ் இன்னசன்ட்..
ஓ ஹரிஷ். அந்த பையனா..?.. வேறவொண்ணும் இல்ல பவி. ஏதோ போலீஸ் சைட்ட ஹேக் பண்ணதா சொன்னாங்க.. கொஞ்சம் பர்சனல் வேலைக்கு வழிக்கு கொண்டுவர பாத்தேன்.. நம்ம பையனா?..
ஆமாம்.. கொஞ்சம் சொல்லி விட்டுட்டா..
சரி பவி ஆனா அவனால ஒரு வேலையிருக்கு . நீ செய்ய முடியுமா?..
சர். என்ன டிடெக்டிவ்ல இருந்து எடுத்து 2 வருசமாகுது.. நான் மதன் சீனர் டிடெக்டிவ்ஸ் யாருமே அதாரட்டில இல்ல..
ஓ.. சரி அதாரட்டி தர வெக்கிறேன்.. வேலைக்கு ஏத்த மாதிரி ஆள செலக்ட் பண்ணிட்டு சொல்லு..
என்ன வேலை.. ?..
மூணு நாளா எல்லா பேங்க் சர்வர்ல இருந்தும் பணம்திருடு போவுது.. உனக்கே தெரியும். டிபார்ட்மண்ட் டெக்னிசியன் பீல்ட் காத்தாடுது. கேஸ சீக்கரட்டா பாத்துக்கோ. ஆதாவது உங்க சர்க்கிள் குள்ள . ப்ரஸ்க்கு தெரியாம இருக்கனும்... அதுமில்லாம என் பாங்க் பேலன்ஸ்லயே பெருசா கை வச்சிருக்கான்.. எவ்வளவு வேணுமோ கேளு. என்பணம் திரும்ப வரணும்..
ம்.. சரிங்க நான் காலைல லிஸ்ட்டோட.. அந்த ஹரிஷ..
சொல்லிடுறேன். நீ போய் லிஸ்ட் ரெடி பண்ணு...
***************************************
ஹலோ. என்டி. பாஸ்.. இங்க கொஞ்சம் ப்ராப்ளம்.
என்னாச்சி . கார்ல்.
புயல் வந்துருச்சு பாஸ்.. சிக்னல் ப்ராப்ளம்..
சரி வேற எதும் இல்லல்ல.. ரெஸ்ட் விட்டுருங்க.. புயல் முடிஞ்சதும் பாத்துக்கலாம்.... ஹெட்ரா ல இருந்து கால்வந்ததா.?
இல்ல பாஸ். டேக் ரெஸ்ட்.. பாஸ்..
*************************************
மாம்ஸ் ஹரிஷ்.. என்ன விட்டுட்டாங்க... கார்த்தி வீட்டுக்கு போயிரவா?.
சரி போ நான் வரேன். நிவே வ கால்பண்ண சொல்லு...
சரி மாம்ஸ். ...
மதன்.. பாஸ் எங்கயிருக்கீங்க..? இதோ வரேன்..
பாஸ் ரொம்ப நாள் கழிச்சு ஒரு குட் நியூஸ் நாம மறுபடியும் டிடெக்டீவ் ஆகிட்டோம்.. ஒரு கேஸ் வந்துருக்கு..
ஆகா.. என்ன கேஸ்..
பணத்திருட்டு சர்வர்ல.. பாஸ்.
டீம் ரெடி பண்ணனும். அதாரடி வாங்கணும்..
டீடைல்..
சொல்றேன் பாஸ் நாளைக்கு...
ஹரிஷ். கார்த்தி. வெங்கி.. சாமி. மதன். வள்ளிராஐன். வஜ்ரவேல். மோகன்.. லிஸ்ட் ரெடி..
***************************************
மறுகாலை..
சரிதானே பவி. இனி உன்னோட கைல. கொஞ்சம் சீக்கிரம் முடி பிரச்சன பெருசாகாம..
ஓக்கே.. ரிலாக்ஸ் ... நான் பாத்துக்குறேன் ....
ஹலோ வள்ளிராஜன்.. இன்னும் ஒரு 3 மணிநேரத்துல. அசம்பிள் பண்ணிடுங்க.. வஜ்ரவேல் மோகன் எல்லாம்..
ஹரிஷ். நீ கார்த்தி வெங்கி மூணு பேரும் வாங்க. எஸ்பி ஆபிஸ்.
சாமி நீங்களும் பாஸூம் வந்துருங்க..
மீடிங்.ஹால் ....
கேஸ். இதுதான். ப்ரண்டஸ்.. நம்ம யூஸ் பன்ற பேங்க் எல்லாம் இன்னிக்கு இன்டர்நெட் பேங்கிங் வசதி தருது.. அதுக்கு எலக்ட்ரானிக் டேட்டா. எலக்ட்ரானிக் பண்ட்னு எல்லாம் எல்லாருக்கும்.தெரியும்....
இப்ப அந்த ப்ராசஸ் எல்லாம் ப்ரோகிராம் மூலமா நடக்குதுனு தெரியுமில்ல.. அந்த ப்ரோகிராம் எல்லாம் இன்டர்நெட்ல பயங்கர செக்கியூரிட்டி சொன்னதெல்லாம் பொய்.. க்ரிப்டோ தான் அவங்க கான்செப்ட்..
இனி. நம்ம கேஸ் என்னனா.. இந்த பேங்க் சர்வர்கள இன்டர்நெட் மூலமா ஹேக் பண்ணி தனியொரு அக்கௌண்ட்ல நூறுங்கிற மாதிரி திருடுது.. அந்த கும்பல பிடிக்கனும்.. இந்த திருட்ட தடுக்கனும்....
சாமி எனக்கு இத பத்தின டீட்டைல்ஸ் வேணும் இன்டர்நேஷனலா.. ஹரிஸ் ப்ரோகிராமிங் டெக்னிக்ஸ்.. வெங்கி இந்த மாதிரி ஏதாவது கேஸ் இதுக்கு முன்ன...
கார்த்தி. நீ இந்த மாதிரி டெக்னிக்கல் ஏரியாவ விசாரி....
வள்ளிராஜன் நீங்க பேங்க்ல விசாரிங்க ஏதாவது சர்வீஸ் சார்ஜ் மாதிரி போங்கா எதாவது செய்ய வாய்ப்பிருக்கானு... வஜ்ரவேல் நீங்க. கார்ட் ல ஏதாவது காரணமிருக்கானு விசாரிங்க.. முக்கியமா இந்த கேஸ் படு சீக்கிரட். நீ விசாரிக்குற ஆளே கல்ப்ரிட்டா கூட இருக்கலாம்.. பீ க்ளவர்..
பாஸ் வேற எதாவது...?..
இருக்குடா.. ஒன் மினிட்.. ம்.. என் இன்ஸ்டிங்க்ஷன் தான்.. சர்வர் ஏரியாங்கிறதால பேங்க் ஆளுங்க இருக்க வாய்ப்பில்ல.. அதுவுமில்லாம இது இன்னும் பேங்க்குக்கே தெரிஞ்சிருக்காது. ஐமீன் பல ப்ரான்ச் ஆப் பேங்க்...
பேச்சிடையில் வஜ்ரவேலுக்கு போன் வர.. வரேன் சொல்லுங்க. என்றார்.
என்ன விசயம் வஜ்ரவேல்.. ? ஒன்னுமில்ல பவி. மினிஸ்டர தாக்க வந்த ஒரு ஆள தடுத்து அரஸ்ட்ல வெச்சிருக்கோம்.. லாக்கப்ல கலாட்டா பன்றாராம்..
மினிஸ்டர தாக்க வந்தாரா. எந்த மினிஸ்டர் எதுக்கு..? என்றார் மதன்..
கப்பல் துறை மினிஸ்டர.. ஜீவானந்தம்னு ஒரு ஆளு...
ஓ . வஜ்ரவேல் அவர இங்க கொண்டுவர சொல்லுங்க.. என்றேன்..
சில மணித்துளிக்குபின்.. கொண்டுவரப்பட்டார் ஜீவானந்தம் பொட்டலம் போல... அடிச்சிங்களா. இல்ல பவி. மூணு நாளா சாப்பிட மாட்டேன்னு அடம்...
ஜீவா சர் என்ன ஞாபகம் இருக்கா.? அந்த டையானா கேஸ்ல நாம.. ஓ எஸ் எஸ்.. பவித்ரன் தான.. ஆமாம். வஜ்ரவேல் அவருக்கு சாப்பாடு.. ஆமாம் சாப்பாடு பவி.. இவங்க பிரியாணியா வாங்கிவராங்க.. நான் வெஜிட்டேரியன்..
சாப்பிட்டு களைப்பாறிய பின்.. ஜீவா சார் என் இப்படி பண்ணீங்க உங்க மரியாதைக்கு.. பவி நடந்தவிசயம் தெரியுமா? கடல்ல ஆயில்..
ஆமாம் சார். அதுதான நியூஸ் சேனலுக்கு தீனி. இப்போதைக்கு..
அந்த... (காது கொள்ளா வசைகள் ).. அமைச்சர்ட்ட அப்பவே சொன்னேன் கேட்டானா. பாரு இப்ப எவ்வளவு உயிர் போச்சு...
சர் ஏதோ சீரியஸா சொல்லிருக்கீங்கனு தெரியுது... அத விளக்கமா சொன்னா எங்களுக்கும் புரியும்..
நான் கடல் காதலன் உனக்கு தெரியுமில்ல.. போன வாரம். வெள்ளிகிழமை.. கடற்கரைக்கு போயிருந்தேன்.. (பையில் இருந்த போட்டோவ எடுத்து ) இதோ இந்த நண்டு இருக்கே.. இது சரியா இன்னைக்கு தான். நம்ம கடற்கரைக்கு வரணும்.. ஆனா இது போன வெள்ளிக்கிழமை வந்துருக்கு.. எனக்கு சந்தேகம்.. மொத்தம் வந்த நண்டுகள் ஆயிரக்கணக்குல இருந்தது.. வழக்கமா வரது 100-300 தான்.. இந்த முறை மிக அதிகம் அப்ப தேடினேன். அந்த நண்டுகள் எப்படி வந்ததுனு.. பாண்டியர் காலத்துலயே இந்த நண்டுகள் வந்து போக இருந்திருக்கு சோழர்கள் இந்த நண்டுடைய பயணத்தை கண்டறிஞ்சி. ஆளில்லா கப்பலே விட்டுருக்காங்க... குறிப்பிட்ட மாசம் மட்டுமே வரும் இந்த நண்டுகள் இங்க இனப்பெருக்கம் பண்ணிட்டு குட்டிகளோட திரும்பும்.. இது ஜப்பானுல மட்டுமே இருக்குற ஒரு வகை நண்டு.... நீ சொல்லு ஒரு கப்பல் ஜப்பான்ல இருந்து இந்தியா வர எத்தனை நாளாகும்.. ?..
12-20 நாள் சார்..
அப்ப இந்த நண்டுங்க எப்ப வரும்னுநைினைக்கிற..
நீந்தி வந்திருந்தா 3 மாசம்..
ரைட்.. ஆனா இந்த நண்டுங்க வந்தது 9 மணி நேரத்துல.. வெறும் 9 மணியில..
வாட். என்று ஆச்சிரிய பட்டார் .வள்ளிராஜன்.. இருங்க வள்ளி ராஜன் கடல் தனி பிரபஞ்சம்.. எத்தனையோ நடக்கும்.. என்றேன்
சர் இது எப்படி.. என்றது ஹரிஷ்..
முன்னமே சொன்னனே.. சோழர்கள் ஆளில்லா கப்பல் விட்டதா?. அதுதான் காரணம்.. குறிப்பிட்ட காலத்துல கடல்ல நீரோட்டம் உருவாகும். அந்த நீரோட்டத்த பயன்படுத்தி இந்த நண்டுங்க நீந்தாம 3.5 நாள்ல வந்துடும்.. இத தெரிஞ்சு தான் கப்பல கணக்கிட்டு அனுப்புனாங்க.. சோழர்கள்..
வாவ் அவர் ஹிஸ்டரி வாஸ் க்ரேட் என்றார் சாமி...
இப்ப சிக்கல் 3.5 நாள்ல வரவேண்டிய பயணத்த 9 மணி நேரத்துல எப்படி சாத்தியம்னு யோசிச்சேன்.. ஒரு காரணம். இருக்கு.. சிம்பிளா சொன்னா. நீரோட்டத்தோட வேகம் அதிகரிச்சிருக்கும். அத கணக்கிட்டு பாத்ததுல . குறுக்க வர கப்பல்கள் கட்டுப்பாட்ட இழந்து மூழ்க கூடிய வாய்ப்பு அதிகம்.. அதனால எச்சரிச்சிட்டு வந்தா எதுவும் கண்டுகாம.. இத்தன உசுர கொன்னுட்டாங்க...
சரிங்க சார்.. நீங்க போகலாம்.. இங்க நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். என்றார் வள்ளிராஜன்..
ஒரு நிமிசம் வள்ளிராஜன்... ஜீவா சர். இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க. வருசம் வருசம் நடக்குற இந்த நிகழ்வுல.. இதுவரைக்கும் எந்த விபத்தும் நடந்ததில்லையே...?.. அப்புறம் இப்ப மட்டும்?..
ஆமா பவி என்கிட்ட அதுக்கு பதிலில்ல இது என்னோட இன்ஸ்டிங்க்ட் மட்டும் தான்..
சம்திங் இன்ட்ரஸ்டிங்.. நீட் அ ஆப்ட்புல் ரீசன்.. என்றார் மதன்..
கடல் அது தனி பிரபஞ்சம் சார் அங்க நம்ம விதிகள் எல்லாம் கிடையாது...என்றார் ஜீவா...
*************************----------********
பாஸ் கொஞ்சம் பேசனும்.. சொல்லு ஆனா காபி.. ம். சரி போகலாம் பாஸ்.. மயிகாப்பூர். மயில் காப்பூர். மயிலை எனவழைக்கபடும் மயிலாப்பூரின் சிறப்புடைய மற்றொரு காபிஸ்டால்.. ஏசி அறையில் நான் மதன் சாமி. ஹரிஷ்..
பாஸ் நீங்க ஆர்டர் பண்ணுங்க. நான் டெம்பிள் போய்ட்டு வரேன் இன்று வியாழன்.
ஓம் பிரணவம் அதன் பொருளறிந்து சொல்வதே தனி பக்திநிலை.. மந்திரங்கள் மிக சாதாரணமான சொற்கள் .. அதன் சப்த அலைகளே ஆற்றல் தருகின்றன.. ஈசன் பரமம் என்னும் உருவிலா உருவாக அமர்ந்த இக்கோயில் தமிழகத்து ஸ்பெசல்.. இறையனார் மாணிக்க வாசகர். ஞானசம்பந்தர் என பாடிப்பாடி மெருகேற்றிய தலம்.. யக்னம் .. யாகம்.. ஆற்றம்... சிரார்த்தம்.. போன்ற சக்திகளை அடக்கி கோயில் பிராகரங்கள் .. சுற்றிவர விக்னம் போகும் மாயமம்..
தரிசன டிக்கட் தான் வருத்தம். மற்றபடி சித்தம் சிவசிரார்த்தம்.
சரி பாஸ்.. ஒரு பிக்ஷன் மாதிரி தோணுது.. சரி வருமானு சந்தேகம்..
சொல்லு பாக்கலாம்... என்றார் சாமி..
நேத்து ஜீவா சொன்னத வச்சி யோசிச்சா அந்த இன்சிடென்ட்டுக்கும் நம்ம கேஸீக்கும் ஏதோ லிங்க் இருக்குறாப்ல ஒரு சிரஞ்ச் செருகல்..
எப்படி சொல்ல வர? என்றார் மதன்..
நியூஸ் பாருங்க ரெண்டு கப்பல்கள் மோதி ஏற்பட்டது தான் எண்ணை கசிவுனு சொல்றாங்க. கப்பல பொருத்தவரை ராடார் சோனார் பயன்படுத்தி தான் போகும்.. ரூட் சிக்னல் அது மூலமாதான் கிடைக்கும்.. இந்த கான்செப்ட்ல. சிக்னல் கெடைக்கல அப்படினா .. கப்பல நிறுத்த முயற்சி பண்ணுவாங்க.. ஆனா.. அதுல ஏதாவது குழப்பம் ஆகிட்டா.. அடுத்ததா. கசாமுசானு போய் காணாம போயிரும்...
ம்.. அதுவும் சரிதான்.. ஆனா நம்ம கேஸூக்கு எப்படி மேட்ச் ஆகும்ங்கிற...
இருக்கு பாஸ் அத கன்பார்ம் பண்ணதான் நிரஞ்சன அனுப்பிருக்கேன் இதோ வந்துடுவான்...
ம்ம்.......
***************************************
ஹே கார்ல். நீ பண்ண வேலையால என்ன ஆச்சு பாத்தியா? இதோட விளைவு என்னனு உனக்கு தெரியுமா?.. என்டி . யின் கோபத்தனல் வீடியோகாலின் மூலமாக கார்ல்க்கு சுட்டது...
என்ன மன்னிச்சுருங்க பாஸ்.. இப்படி நடக்கும் னு எதிர்ப்பார்க்கல...
ஹேட் ஆபிஸ்க்கு நியூஸ் போச்சுனா என்ன நடக்கும் தெரியுமா.? நம்ம எல்லாரோட உயிரும் போயிரும்..
மன்னிப்பு பாஸ்...
சரி ஜாக்கிரதை விசயம். மெக்லின்கு போகக்கூடாது அவன் ஹெட் ஆபிஸ்க்கு சீக்ரட் ஸ்பை...
சரி பாஸ் அப்ப ஸ்டெல்லாகிட்டயும் சொல்லக்கூடாது...
ஏன்? என்றார் என்டி..
பின்ன அவங்கதான் உடலிரண்டு பற்றிய ஓருயிர் மாதிரி இருக்காங்களே!.
என்ன? என்ன சொல்ற நீ? கொதிக்கிறார் என்டி...
உங்களுக்கு தெரியாதா பாஸ் அவங்க இங்க பன்ற வேலையில எனக்கு நிறைய நீலப்படங்கள் நிஐப்படங்களா கிடைக்குது...
யூ ப்ளடி.. பா*****... கூப்பிடு ஸ்டெல்லாவ... என்ன வேலைக்கு அனுப்புனா? என்ன வேலை செய்யறா?...
லீவ் ட் பாஸ் தே லைக் தட்.. ஆஸ் ஐ லைக் பொயட்ரி...
***************************************
கேட் அவுட்... என்கிற என் பார்க்காத சொல்லில் திடுக்கிட்டாலும்... தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வந்தவர் பெயர். ராம்சந்த் கோபிநாத்..
வில்யூ ப்ளீஸ்....
சாரி நீங்க கேட்கணும் ஒரு முக்கியமான கேஸ் என்னது...
பட் ஐம் பிஸி... இன்னொரு கேஸ்ல இருக்கேன்.. நிரஞ்சா.. நீங்க கிளம்பலாம்.
தெரியும் சார் பட் எனக்கு இந்த கேஸ்ல உங்கள தவிர வேற யாரும் செய்ய மாட்டாங்கனு தோணுது...
சொல்லுங்கண்ணா என்று நிரஞ்சன் வர.. ரெண்டு காபி.. ம் சரி என்று போனவனுக்கு புரிந்திருக்கும்..
காபி என் மேசை மேல் வைக்க பட்டது... எதிரிலே அவர் என் பதிலுக்கு காத்திருக்க... காபி எடுத்துக்கங்க... என்றதும் புரிந்து கொண்டு ஒரு மடக்கினை உள்ளிழுத்தார்...
நிரஞ்சா என்னப் பிரச்சனை? ஏன்ணா. ?.. காபி முன்ன மாதிரி இல்லயே ஏதாவது சிக்கலா?.. இல்லணா பால் லைட்டா பழசாச்சு... சரிவிடு சொல்லமாட்ட...
நீங்க சொல்லுங்க கோபிநாத்.. என் பைல்ஸ் சிலது காணோம்... ஓ என்ன பைல்ஸ் எனி ப்ராபர்டி சம்பந்தம்னா நீங்க போகலாம்.. ஏதாவது அடகுல இருக்கும்... இல்ல இது சாப்ட் காபி பைல்ஸ்... என்ன சார் என்னபாத்தா எப்படி தெரியிது உங்களுக்கு..?.
முழுசா கேளுங்க ப்ளீஸ்... சொல்லுங்க...
நானொரு ரிசர்சர். நான் பாக்ஸ் ட்ரைவ்ல சில ரிசர்ச் பேப்பர்ஸ ஒரு பைல் folder ஆ வெச்சிருந்தேன். அது என் வசதிக்காக வெச்சிருந்தேன்.. பட் நேத்து மதியம் முதலா அந்த பைல் போல்டர காணோம்... நான் ப்ரைவேட் பாக்ஸ் ட்ரைவ்ல வெச்சிருந்தேன்.. என்ன தவிர யாரும் நுழையவோ பயன்படுத்தவோ முடியாது.. ஆனா காணோம்....
உங்கள தவிர யாரும்னு நீங்க நினைக்குறீங்க ஆனா ட்ரைவ் தர கம்பனியின் சர்வர் அட்மின் , கம்பனி ஹெட்ல இருக்குற எல்லாரும் பாக்கலாம் எடுக்கலாம்... என்றான் நிரஞ்சன். பரவாயில்ல இவனுக்கும் டெக்னாலஜி தெரிஞ்சிருக்கு. ...
ஆனா நான் பாக்ஸ் ட்ரைவோட கஸ்டமர் கேர்ல கேட்டனே. அவங்க யாரும் அப்படி யூஸ் பண்ண முடியாதுனு சொன்னாங்களே...
சரி.. விசயத்துக்கு வாங்க.. இத ஹேக் பண்ணிருக்காங்க. ஜஸ்ட் ஒரு காப்பி எடுத்துகிட்டு விட்டுருந்தா உங்களுக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்ல.. ஆனா எதுக்கு ஒரிஜினல இல்லாம பண்ணனும்... அப்படி அந்த பைல்ல என்ன இருந்தது... அப்படி என்ன ரிசர்ச் அது...?... எனக்கேட்டேன்..
சற்று நேரம் மௌனம்... சார் சொல்லுங்க அத மறச்சா இந்த கேஸ் எடுக்குறதே அவசியமற்றதா போயிரும் . ...
சிந்திக்கும் மௌனம்... Smashing of sonar and radar signals by using signal vibe technology.. ...
ஓ சரி உங்ககிட்ட வேற ஏதும் பேக்அப் இருக்கா.?.. இருக்கு அப்படி இல்லனாலும் புதுசா உருவாக்க முடியும்.. அப்புறம் ஏனிந்த கேஸ்?. அந்த ரிசர்ச் பைல் சாதாரணமானதல்ல பவி தப்பானவங்க கையில போனா விசயம் பெரிய விபரீதமாகும்..
சரி அப்ப நாங்க கண்டபிடிச்சி சொல்றோம் நீங்க...
இருங்க அதவிட இன்னொரு விசயம் இருக்கு.. இது ஆரம்பிச்ச நாள்ல இருந்து 4 மாசமா என்ன இவன் பாலோ பன்றான் பேசவோ.. பார்த்தாலோ தப்பிச்சு ஓடுறான்.. இதோ போட்டோ எனக்கு என்ன ரீசன்னு தெரியனும்... அதயும் கண்டுபிடிங்க நான் வரேன்.. என்று கிளம்பி போனார்.
போட்டோவை எடுத்து பார்த்தேன் அதிர்ச்சி.. என்ன அண்ணா பாக்குறீங்க.. போட்டோவை நிரஞ்சனிடம் கொடுத்தேன்.. அட அசோக் அவர்தானே அண்ணா.. ம்.. அவன் ஏன் இவர பாலோ பண்ணனும் இவர பாலோ பண்ணசொல்லி யாரு சொல்லிருப்பா?...
நிரஞ்சன் நான் அசோக்க பாக்கனும்... அப்படியே சிலசில வேலைகளோடு ஒரு வாரம் ஓடி .. இன்று வியாழக்கிழமை.. காலையில் கோயில் சென்று திரும்புகையில்.. செல்லது ரிங்கிட .. பாஸ் அசோக்க கொண்டு வந்துட்டேன்.. இங்க ரூம்ல இருக்கேன்..வந்துறேன் நிரஞ்சா.. ஒரு அரமணிநேரம்..
மோனப் பாக்யா பிரகிதஹ்
பரப் பிரம்ம தத்யாமி :
அமைதி காத்திரு பாக்யமிருந்தால் பிரவாகமாக யாவும் நிகழும் பரப்பிரம்மமே தருவான்... (மந்திரத்துக்கும் இதுக்கும் சம்மந்தமில்ல சும்மா சொல்லிபாத்தேன்.. இப்படியும் எடுத்துக்கலாம்)...
பவித்ரன் என்ன இதெல்லாம் ஏற்கனவே நான் உன்மேல பயங்கர கோவத்துல இருக்கேன்.. இதுல நீ ரொம்ப கேவலபடுத்துற நான் உன்னவிட சீனியர்.. இப்படி கட்டி போட்டு வெக்கிறது என்ன மரியாதை?..
நீதான் என்மேல கோவமா இருக்கியே ஒரு பாதுகாப்புதான்.. அசோக்.. என் இன்வெஸ்டிங் பத்தி உனக்கு தெரியும்.. நீயா சொல்லிடலாம் வாய்ப்புதரேன் வலிகள் மிச்சமாகும்..
என்ன சொல்லனும் எனக்கு எதையும் மறச்சு பழக்கமில்ல...
நிரஞ்சா எதுவும் கேட்கலயா?... அந்த போட்டோவ அவன்ட்ட காட்டு... இந்தாள நீ நாலுமாசமா பாலோ பண்ணிருக்க.. இந்தாளோட பைல்ஸ் களவுபோயிருக்கு... சொல்லு எதுக்கு பாலோ பண்ண? யாரு இந்த வேலய குடுத்தா?...
சற்றே நீண்ட அமைதி.... நிரஞ்சன் தாக்கவா எனக் சைகை செய்ய .. இரு நிரஞ்சா சொல்லுவான்.. அசோக் உடல்பலம் இல்லாதவன்.. உண்மையான அப்பாவி.. தன்ன தானே பெரியாளா நெனச்சிக்கிட்டு இந்த மாதிரி அறகுற வேலசெஞ்சு மாட்டிப்பான்.. இரு... அவனும் யோசிக்க வேண்டாம்.. தொழில் தர்மமா .. பகைவனுக்கு உதவியானு ...
கட்டவிழ்த்து விடு எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும்.. இன்னக்கு என்ன சமையல்... சிக்கனா சாம்பாரா.. என்ற கேள்விகள் நிரஞ்சனுக்கு எரிச்சல் தரவல்லன.. நிரஞ்சா அவிழ்த்திடு.. தண்ணி கொடு.. சாப்டுறியா அசோக்.. இன்னக்கு ஹோட்டல் தான்.. உனக்கு என்ன வேணும்...
மெல்ல நடந்து அறையை அளந்தான்.. என் புத்தகங்களை அலசினான்..
ஒரு டிடக்டீவ் சம்பந்த புக்ஸ் கூட இல்ல ... ப்ரன்சிக்ஸ், லாடிப்ஸ் லேப்ஹிக்ஸ் எதுவுமே இல்லயே?.
அதெல்லாம் நான் படிக்கிறதில்லடா.. நிரஞ்சா முதல்ல காபி.. அசோக் நீ காபி சாப் வெச்சிருக்கல்ல.. இவன் காபி குடிச்சிட்டு கத்துக்கோ ...
டேய் என்ன கிண்டலா.. நானும் நல்லாதான் காபி போடுவேன்... டேய் நிரஞ்சா எங்க கொண்டா காபி...
நடக்கும் பேச்சுகள் நிரஞ்சனுக்கு விநோதமாக இருக்கலாம்.ஒரு தப்புச் செஞ்சவன இவ்ளோ கஸ்டபட்டு கொண்டுவந்து கட்டிவெச்சா என்னமோ க்ளாஸ் மெட் மாதிரி பேசுறாங்கனு ...
நிரஞ்சா ரெண்டு பிரியாணி வாங்கிக்க எனக்கு ஒரு சாம்பார் சாதம்.. என்றேன்.. எனக்கும் சாம்பார் சாதமே போதும் நிரஞ்சன்.. இவன் வாங்கி குடுத்து பிரியாணி திங்கனுமா நானு... என்றான் அசோக்.. நிரஞ்சா முடிஞ்சா ஒரு கூல்டிரிங்க்ஸ்...
இப்ப எதுக்கு ரெண்டு பேரும் தேவயில்லாம பேசுரீங்க என்றான் நிரஞ்சன்... பவி சொல்லிடு... நிரஞ்சா அவன் பர்சனலா பேசனும்னு பாக்குறான்.. என்கூட இருந்தவன எனக்கு தெரியாதா?... உங்க கூட இருந்தாரா. எப்ப அது பெரிய கத சொல்றேன் சாப்பாடு வாங்கிட்டுவா.. அப்படியே எனக்கும் என்று வந்தார் மதன்...
பாஸ் என்றான் அசோக்.. விசயம் நிரஞ்சனுக்கு கொஞ்சம் புரிஞ்சிருக்கலாம்.. பாஸ் எனக்கு புதுக்கேஸ் அதுல இவன்மேல கம்ப்ளைண்ட்.. சரி பாத்துக்கலாம் பவி.. கேளு..
டேய் அந்த ஆள ஏன் பாலோ பன்ற.. யாரு உனக்கு இந்த கேஸ குடுத்தது ... அப்படி என்ன காரணத்துக்காக அவர பாலோ பண்ண..
எனக்கு கேஸ் டாஸ்டாம் னு ஒருத்தர் குடுத்தது.. அவருக்கும் இந்தாளுக்கும் போட்டி.. இந்தாளோட ரிசர்ச் ப்ராசஸ் பத்தி ரிப்போர்ட் குடுக்கனும் என்வேல.. அததான் செஞ்சேன்..
அப்ப அவர் ரிசர்ச் பைல்ஸ் காணாம போனது? எங்க வேலையில்ல.. எங்கவேல அவர் ரிசர்ச் ஆபத்தானதுனு நிருபிக்கனும்.. அப்படி சொல்லிருப்பாங்க... இல்ல ஐ ட்ரஸ்ட் ஹிம்.. நீ டீக்கடை தீபாவக்கூட தான் ட்ர்ஸ்ட் னுவ..
சரி அந்த ரிசர்ச் எந்த மாதிரி ஆபத்தானது... அத நீ டாஸ்டாம்ட்ட தான் கேக்கணும்.. நீ ஏதும் பர்சனலா ஸ்டடி பண்ணலயா? எனக்கது தேவப்படல..உன் முட்டாள் தனம் எப்பவுமே அப்படி தான் இருக்குமா?..யூ க்ராஸிங் த லிமிட்..
ரெண்டு பேரும் நிறுத்துங்க.. சாயங்காலம் நாம டாஸ்டாம் பாக்கனும்.. அப்புறம் மீதி பாத்துக்கலாம் என்றார் மதன்..
சாப்பாடு வந்தது நிரஞ்சனுக்கு முழுக்கதையும் சொல்லப்பட்டது.. (உங்களுக்கு தனிக்கதையா வரும்).
***************************************
மாலை சற்றே இருண்ட உள் விளையாட்டு மைதானம் எட்டு லைட் கொண்ட சீலிங்.. மொழுமொழுப்பான சுவர்கள் என பளிச்சிடும் பாஸ்கட் பால் அரங்கம்.. தாஸ்தாம் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்...
என் செய்கையின் விநோதம் நிரஞ்சனுக்கு குறிப்புணர்த்தும்...
சரியாக பந்து பாஸ்கட்டில் விழ திரும்பி வாங்க என்று வரவேற்றார் தாஸ்தாம்..
என்கிட்ட பேச 4 டிடெக்டீவா பவித்ரன் ... இது யாரு உங்க அசிஸ்டெண்டா... என்ன என்னை நோட்டம் விட சொன்னாரா.உங்க பாஸ்? 3 சொடுக்கு அதான...
சரி விசயத்த சொல்லுங்க.. தாசர்நேசன்.. ஏன் இந்த கேஸ அசோக்கிட்ட கொடுத்தீங்க வாட் த ரீசன்?...
அட மதன் நீங்க தான அசோக்கோட லீடர்.. எப்படி என் முழுபேற புடிச்சீங்க..
நீங்க ஏன் அசோகிட்ட இந்த கேஸ குடுத்தீங்க.. மிஸ்டர் ராம்நாத். உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ணுறார்.. ..
நத்திங் பவித்ரன் அதுஒரு ஆபத்தான ஆராய்ச்சி அத நான் தடுக்க நினைச்சேன் . அவர நிறுத்த நெனச்சேன்..
ஓ அதான் அவர் பைல்ஸ் எல்லாம் திருடிட்டீங்களா?..
ஓ நோ.. என்னது பைல்ஸ் திருடுபோச்சா.. மை காட். ஏன் இவ்வளவு லேட்டா சொல்றீங்க..
ஏன் எடுத்த உங்களுக்கு தெரியாதா என்ன?
நோ.. டோன்ட் பி சில்லி நான் எடுக்கனும்னா எப்பவோ எடுத்துருக்கலாம்..
அதான் எடுத்துட்டீங்களே...
நான் எடுக்கலய்யா.. விசயம் வேற மாதிரி போய்டுச்சு.போல ...
மிகுந்த கோபத்துடன் இதே பொய்ய மறுபடியும் சொல்றதா இருந்தா என் முடிவு வேற மாதிரி இருக்கும் தாஸ்.. என்று சீறியபடி வெளியே வந்தேன்..
எப்படி கவனிக்காம போனேன்.. என் கையாலாகாத தனம்.. ஏமாந்தேனே..
பின்னே வந்தார்கள் மதன் அசோக் நிரஞ்சன் உடன் தாஸ்தாம்ஸூம்..
அண்ணா ஏன் இவ்வளவு கோபம்.. அவன் காதில் சிலவற்றை செய்ய சொன்னேன்..
ரகசியங்கள் இப்போதெல்லாம்... ரகசியங்களாக இருப்பதில்லை..
Post a Comment