புத்தன் இதனை நினைத்திருப்பானோ. ?

ஆய நோயனைத்தும் பெற்று
அழுகிய பிணத்தின் வாசனையை
நுகர்ந்து வரும்விவஸ்தையற்ற காற்று

தேடிவந்த மனிதர்களை தழுவிடும்
தேவரடி யாய் அழுக்குகளால் சூழ்ந்த நதி.

உயிருள்ள உயிரற்ற என்று பிரிவினையில்லா
கழிவுகள் நிறைந்த குப்பை தொட்டி நிலம்

பிரியவோ பிரிந்திலையோ என்று ஏக்கும்
அறைகலவிக் காதலியாய் இயற்கை

வெளிப்பட்ட தன்பாலில்லா முலையத்தை தேனெனச்
சுவைக்கும் பேராசைகள்.

தாழிட்ட அல்குலின் அந்தத்தை
சுரங்கமெடுத்துச் சுரண்டும் பணத்தாசை வணிகம்.

எடுத்துத் சுரங்கத்தை கழிவுகளை கொண்டடைத்து
நிம்மதி பெருமூச்சுவிடும் விஞ்ஞானம்.

தாயென்றும் பாராமல் தன் ஆதிகருவினை அழகிச் சிதைய
ஆன ரசாயனகளாடும் நாசராசர்கள்

அடடே உலகம் எத்தனை உண்ணதமானது
புத்தன் இதனை நினைத்திருப்பானோ. ?

#ஏகாந்தத்தில்


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post