கவிதை எனக்கொரு சித்து

முக்தியும் நல்கிடும் வரமெனக்கு - மூளை
முத்தியும் போகுமே பிறமகற்க்கு - நல்ல
வித்தைகள் கற்றவர் ஆயிரமே - தந்த
வித்தக வார்ப்புகள் கோடிகளே..

பத்திய மெதில்லா நன்மருந்து - செவிப்
புத்தியில் சேர்த்திடும் பெருவிருந்து - நல்ல
சத்தியம் சொன்னவர் வாழ்வினிலே - கண்ட
நித்தியம் பாடுவேன் பாவினிலே..

மெத்த படித்தவர் வாழ்ந்திடவார் - என்றன்
சொத்தை பாமரன் எங்குசெல்வான் - பள்ளி
கொட்டிடக் கேட்குது பணமழையை - பார்த்து
எட்டி பொருமுது பாழ்மனமே..

அந்த ஆசைமனதுக்கு யானிருக்கேன் - கற்ற
எந்தன் நேசஅறிவினை தான்தருவேன் - உயர்
ஞானமும் தத்துவம் பாடிடுவேன் - இசை
கீதத்தில் காதலை  கூறிடுவேன்.

சாதியம் தன்னையே எரித்திடுவேன் - வரும்
சாதனை யாளரை போற்றிடுவேன்.- எனை
ஏற்றிடலாம் இல்லை தூற்றிடலாம் - எந்தன்
ஏழ்பிறப்பும் இச்செயல் மாறாதே...

பாருக்குமே இது வித்தகமே - என்றும்
கவிதை எனக்கொரு சித்துகளே - என்றன்
வாழ்வுக்கொரு வேண்டல் இத்தகுவே - யாண்டும்
வாழ்வேயொரு பெரும் புத்தகமே...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم