அன்பர்க் கடியான் அண்ணல் அடியனாய்
என்புருகு நற்றமிழை எம்மவர்க் களித்திட
சிந்திட வைத்தோனே வாதவூர் பெற்றோனே
வந்தனமிட்டு வேண்டினனுக் கருள்.
என்புருகு நற்றமிழை எம்மவர்க் களித்திட
சிந்திட வைத்தோனே வாதவூர் பெற்றோனே
வந்தனமிட்டு வேண்டினனுக் கருள்.
நாதமுள் பாட்டினால் நாதனை வாழ்த்தியே
வேதமுள் தேவன்தம் வேயினில் சேர்ந்தோனே
வாதவூர் அடியோனே வார்த்தைக் கரசனே
சேதமில் பக்தியை சேர்ப்பித்தேன் காண்.
வேதமுள் தேவன்தம் வேயினில் சேர்ந்தோனே
வாதவூர் அடியோனே வார்த்தைக் கரசனே
சேதமில் பக்தியை சேர்ப்பித்தேன் காண்.
சுந்தரத் தமிழினாற் சுந்தரனைப் பாடி
மந்திர வாசகம் மங்களத் தொண்டாற்றி
செந்தழல் வேயனை செந்தமி ழாக்கி
வெந்தழல் சேர்ந்தனை போற்றினேன் யான்
மந்திர வாசகம் மங்களத் தொண்டாற்றி
செந்தழல் வேயனை செந்தமி ழாக்கி
வெந்தழல் சேர்ந்தனை போற்றினேன் யான்
திருவாச கத்தை திரட்ட சிவனும்
உருமாறி யந்தன ருருவில் வரநின்
திருவாய் மொழிய திருமாணிக் கம்மே
அருள்வாய் எனவே போற்றினேன் யான்.
உருமாறி யந்தன ருருவில் வரநின்
திருவாய் மொழிய திருமாணிக் கம்மே
அருள்வாய் எனவே போற்றினேன் யான்.
அடியேன் எ்னையும் அடியாய் ஏற்றுப்
பொடிசூழ் பெருமான் பொற்பதம் காணப்
வடிவா யமர்ந்து வழியை தருவாய்
விடிவினை யான்சேர் விளக்க மளித்து
பொடிசூழ் பெருமான் பொற்பதம் காணப்
வடிவா யமர்ந்து வழியை தருவாய்
விடிவினை யான்சேர் விளக்க மளித்து
சிற்றம் பலத்தண்ணல் சிந்தையுறைச் செம்மலாம்
கொற்ற மிலாக்கோனாம் கொன்றை சூடனாம்
நெற்றியிற் கண்கொண்டான் நெற்றிமேல் பிறையோனைப்
பற்றவே வேண்டினன் பக்தனுக் கருள்.
கொற்ற மிலாக்கோனாம் கொன்றை சூடனாம்
நெற்றியிற் கண்கொண்டான் நெற்றிமேல் பிறையோனைப்
பற்றவே வேண்டினன் பக்தனுக் கருள்.
வந்தனை செய்தார்க்கு வந்தருள் செய்திடும்
நிந்தனை செய்தார்க்கும் நித்தியம் தந்திடும்
சிந்தனை செய்தார்க்கு சிந்தையில் வீற்றிடும்
மந்திர வாசகனை வேண்டினன் பணிந்து.
நிந்தனை செய்தார்க்கும் நித்தியம் தந்திடும்
சிந்தனை செய்தார்க்கு சிந்தையில் வீற்றிடும்
மந்திர வாசகனை வேண்டினன் பணிந்து.
சித்தர் வழிவந்த சின்னசிறு பிள்ளையென
பித்தன் யெனையும் பிதற்றல் பொறுத்திட்டு
சத்தம் கெடுத்து சதனம் கெடுத்திட்டு
அத்த னடிசேர மார்க்கம் அருள்
பித்தன் யெனையும் பிதற்றல் பொறுத்திட்டு
சத்தம் கெடுத்து சதனம் கெடுத்திட்டு
அத்த னடிசேர மார்க்கம் அருள்
சிவனென் சிந்தையிற் சிற்றம் பலமாய்
தவமுற் றிருந்திடின் தக்கதோர் சொல்லை
அவனிடத்து சொல்லி அவனருள் வேண்ட
தவறாத மார்க்கத்தை தந்திடுவீர் நீர்.
தவமுற் றிருந்திடின் தக்கதோர் சொல்லை
அவனிடத்து சொல்லி அவனருள் வேண்ட
தவறாத மார்க்கத்தை தந்திடுவீர் நீர்.
தங்கத் திருமேனிக் கொண்டப் பரமனின்
அங்கச் சுடரில் அபயம் அடைந்திட
சங்கத் தமிழ்செய் சமயத்தார் தாமும்
இங்கம் குளிர்ந்திட இங்கிறங்கி வந்து
அங்கச் சுடரில் அபயம் அடைந்திட
சங்கத் தமிழ்செய் சமயத்தார் தாமும்
இங்கம் குளிர்ந்திட இங்கிறங்கி வந்து
إرسال تعليق