சிவனும் நானும் - கேள்விபதில்..

ஆதியே அடியார்க் கடியான சோதிய
நீதியே கேட்குமெனை நின்னருள் தந்துபதில்
பாதியுமை கொண்டாய் பதமாய் சொல்லிட
ஓதியுன்னை கேட்கிறேன் ஓருண்மை சொல்வாயே...

கேள்தோழா கேள்விகள் ஞானம் வளர்க்கும்
ஆள்யான் ஆரவுரைப் பேன்பதில் தன்னையே
கேள்தோழா கேட்டுன் ஐயமதை தீர்ப்பாய்
நாள்நன்று தேவையில்லை நானருகி ருக்கையிலே...

தோல்விகள் வந்தடியார் தேய்வதேனோ நாதனே
கோல்தாங்கி நொண்டும் நோய்தரு மூப்பேனோ
கால்வருடும் கள்வர்கள் காலமாயிக் காலமேனோ
மேல்கீழ் தரமெனும் பேதமும் ஏனோ.

கண்ணனிடம் கேட்பதை கண்மூன்ற னிடம்கேட்டாய்
எண்ணமது காரணம் ஏற்றதாழ் விற்குதான்
உண்ணலின்மை காரணம் ஊன்திருடும் காலத்திற்கு
மண்ணதற்கு மூப்பும் முயற்சிக்கே தோல்வியுமே.

உண்மை தனைசொல் உம்பர்க் கரசே
கண்ணீர் தருசிசுக் கொலையும் நன்றோ
மண்ணில் எவருமே மன்னனாகின் எந்நிலையோ
எண்ணத்திற் காயுளுண்டோ தஞ்சை யோனே

எண்ணத்திற் காயுளுண்டு எண்ணுவோ ருள்ளவரை
மண்ணில் நிலையிருக்கா மானுட மன்னரெல்லாம்
கண்ணீ ருமதாகின் கொலைக் கண்டுழுதீரே
கண்ணீர் சிந்துவதால் கண்ணியம் ஆகுமோ..

சங்கரனே ருத்திரனே சந்தேகம் தீர்ப்பாய்
அங்கம் பொடிபூசி ஆத்திக மானவரை
மங்குபேசி மற்றொரு நாத்திகன் வளர்கிறான்
அங்குமென் னுன்சொயல் சொல்..

சந்திரனுக் கும்களங்கம் சற்றேயுண்டு தோழனே
எந்தையெனச் சொல்லியென்னை சந்தையிற் விற்போனை
மந்தையெனப் பாடிமன மானுடம் காண்போன்தான்
சிந்தைபடி செல்ல சிறிதும்  உதவேனோ...

இன்னுமொரு கேள்வி இதயத்து கேள்வனே
மின்னுமொரு நாளின் முக்கியம்தா னென்ன?
பொன்மேலுள் போகம் பொதிசுமை வாழ்வதும்
தன்னாடல் தன்பொருள் தானென்னவோ..

வன்மையும் மென்மையும் வந்துணர வாய்த்தது
என்னையும் உன்னையும்  ஏதென்று காணவே
பன்மயம் பண்பொடு பற்றும் இழந்திட
தன்மையும் தன்யாவும் தானிழக்க வாய்த்ததே...

அன்பா யளித்தபதில் அதற்கு ஈடாய்
நன்நா தனைக்கொண்டு நன்னை நற்றமிழாற்
நன்காய் பதம்பாடும் என்றன் மனமாசை
அன்பால் களிதரும் அப்பா பாடுகவே...

அய்யா அருளரசே மெய்யாய் விளங்குவோனே
வெய்யா வுயிர்சோதி வென்றா யடியோர்க்கு
மைய்யா வடிவுடை தையலொரு பங்கில்
எய்யா தருஞ்கருணை தைய்ய வருள்வோனே...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم