வாய்பாடு = விளம் காய் மா மா காய் மா தேமா
1)
மாதொடு மதிகங்கை சூடி கடல்சூழ் ஆலகாலம் உண்ட நன்றன்
காதொடு கண்டமதில் நாகம் அணிந்து மறைநான்கும் பாடும் தேவன்
பாதொடு புலவர்தம் நாவில் நின்று புகழாரம் பாடும் எங்கள்
சீதொடு பித்தமழிக் கும்எந் தைப்பொன் மேனியோனை போற்றல் நன்றே..
2)
காதலால் கண்ணீரும் கண்டு நின்றால் ஆவலால்தன் பாசம் தந்து
வேதநூல் சொல்லிடாத வேயன் தானும் வேண்டியவை தந்து காப்பான்
பூதமாய் புறமாகி அகத்துள் பூவாய் பூத்திடுவான் சிந்தைத் தேனாய்
நாதமாய் நின்றிடுவான் நித்தம் நல்லருள் நாயகன்தான் வாழ்வின் காப்பே...
3)
எண்ணரும் விளையாடல் செய்தான் எங்கள் எண்ணிலாத புகழுள் ஈசன்
கண்தரும் வேளையில்தன் அருளை தந்து கண்ணப்பர் தனக்கு ஒப்பாய்
பெண்தரும் மாங்கனியை பெற்று தாயாய் பெண்மையினை போற்றி நின்றான்
பெண்ணொரு பங்கெனவே அகிலம் அறிய மாதொருபா கானான் தானே.
4)
பித்தராய் பின்தொடர்ந்த பக்தர் பலர்க்காய் பரமனவன் பட்ட துன்பம்
சித்தரும் நோர்க்காரே சிந்தை நிறைந்த சிற்றம்பலத் தோனும் வந்து
அத்தனென சொன்னதோரு பக்தர் தனக்காய் பிஞ்ஞன்றன் பிரம்பால் பெற்றான்
முத்துறை பாண்டியன்தன் தடியின் அடியும் முந்தைவினை தீர்க்க வந்தே..
5)
சாம்பலை பூசியலை கின்ற எங்கள் சாம்பலிடு காட்டின் சோதி
ஆம்பலை சூடும்பெண் ணைச்சேர்த் தடியார் ஆண்டவனை நாளும் பாடி
தாம்பலர் ஆகுதிறன் பெற்ற சித்தர் கோடியிலே தாமொருவ னாக ஆடி
சோம்பலை தீர்க்குமிறை துள்ளி ஆடும் அடியவர் மனதில் தானே..
6)
கொன்றையும் ஞாழலொடு நாகம் மணியும் கொண்டணிந்த சிவனை ஈசை
ஒன்றிய மனதொடுநாள் தோறும் போற்றி ஒம்பும்நல் தவமும் போற்றி
நன்றென வணங்கியோரும் நாதன் தாளை நல்லிடமாய் கருதி சேர்ந்த
தன்னிலா தடியார்தான் கோடிக் கோடி கணக்கிலாத அவர்தம் அன்பே.
7)
தன்னருள் தந்திடவே அடியார்க் கடியாய் தன்னடியை காட்டி காக்கும்
முன்னரும் பாவங்கள் முழுதாய் போக்கி முன்னவன்தான் முன்பு யார்க்கும்
முன்னவன் தான்நமது குறைகள் நீக்கி முத்தனைய வீடு வாழ்வை
என்னவன் தான்நமக்கு எடுத்து தருளை காட்டிநமாய் உயர்ந்தி டவே...
8)
நாயனாய் நமக்கெல்லாம் நம்மை புரிந்து நாதனாக நம்மில் வீற்று
தாயனை யதன்னன்பை தந்து அருளி தாயுமான தந்தை எந்தை
ஆயக லையனைத்தும் அறிந்த ஆயோன் ஆதியாகி அறிவுச் சோதி
சேயாகி சிந்தையிலே சித்தம் வைத்து சேவடிக்கே சேர்ப்பான் ஏற்றே..
9)
உம்பரின் துயரினையே உண்டு காத்த உம்பர்கோன் எங்கள் நம்பி
அம்பலத் தோனவனும் அடியார் அன்புக் கடியாகி அத்தன் சித்தன்
தம்பலத் திறங்கியவன் அன்பிற் கடங்கி திங்களொளிர் முக்கண் வெய்யன்
தம்பதங் காணுமாறு அன்பு காட்டி கருணைசெய்யும் கடவுள் தானே..
10)
எந்தை அவனும்தான் யாவும். தந்தை எம்பிரானே யாவும் தானே
விந்தை அவனும்தான் விந்தை எல்லாம் வென்றுவிட்ட விந்தை விந்தாய்
சிந்தை நிறைந்திடவே சிவம்தான் சிந்தை சீவனதன் கந்தை எந்தை
முந்தை தனக்கெல்லாம் முந்தை அந்தம் ஆதியாகி சோதி யாமே..
#எழுசீர்_கழிநெடிலடி_ஆசிரியவிருத்தம் #சிவம்
إرسال تعليق