இல்ல பவி.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..
சொல்லு என்ன விசயம்.. ?
இங்க வேண்டாம் வெளிய எங்கயாவது போலாமா?.
ம் சரிவா எதாவதொரு ப்ரூட் ஸ்டால் போகலாம்.. அடிக்கிற வெயிலுக்கு ஜீஸ் தான் சரிவரும்.
நெல்லைப்பர் பழச்சாறு பானகம் என்றிருந்த 50 ஆண்டு பழமை கொண்ட பழமுதிர்சோலை.. நவீன மாற்றத்திற்கேற்ப நெல்லைஸ் ப்ரூட் ப்ளாசா என்றானது.. ஏசி சோபா போன்ற இருக்கைகள் .. வண்ணவண்ண படங்க் நிறைந்த சுவர்கள்.. சிறு சிறு மின்விளக்குகள் என நகரத்து கடைக்கான அத்தனை முகாம்சமும் அமைந்த பழமுதிர்சோலை ..
காத்திருப்பாளன்.. வந்தான் வேண்டிய பானங்களை துண்டுச் சீட்டில் எழுதி கொண்டான்.. காத்திருப்பாளன் .. வாடிக்கையாளர் வருவதற்கு காத்திருப்பவன்.. வாடிக்கையாளர் உத்தரவை ஏற்க காத்திருப்பவன்... நல்ல வெய்டர்.
to read :
to download :
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
إرسال تعليق