கடவுள் என்பது என்ன - அணுவியல்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும்.. ஒரு பொருத்த ஆய்வு.. ஆம் இதுரை மனம் மூளை உயிர் கணிதம் வேதியல் உயிரியல் இயற்பியல் என்று பார்த்து வந்திருக்கிறோம்...

இப்போது அணு.. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறது மறை.. அணுவும் அவ்வாறு தான் .. 

ஊனும் உயிரும் உலகும் யாவும் இறையொன்றே என்கிறது மறை .. அணுவும் அதுபோலதான்.. உடலும் அணுக்கள் தான் உலகம் யாவும் அணுக்கள் தான்..

அணு மிக சிறிய உருவிலான பிரம்மாண்டம்.. ஒரு அணுவை நவீன அறிவியல் பலவாறு சொல்கின்றன.. தமிழின் ஒரு செய்யுள் அணுவின் அளவை பற்றி பேசுகிறது..  பொதுவாக அணுவினை இப்படி பிரித்திருக்கிறது அறிவியல்

எலக்ட்ரான் , ந்யூட்ரான் , ப்ரோட்டான்... என்றும் அதனின்று பாசிட்ரான் .. என்று பலவாக பிரிக்கபடுகிறது..

எலக்ட்ரான் எதிர்விசை கொண்ட துகள். ப்ரோட்டான் நேர்விசைத் துகள்.. இதுபோல கடவுளும் இரண்டு விதம்.. படையல் ஏற்கும் ஒன்று பலியை கேட்கும் ஒன்று பிரிவுண்டு.. என்று குறிப்புகள் கிடைக்கின்றன.. ஈஸ்வர சைத்தன்யம் என்ற பிரயோகம் இருந்ததை முதற்குறிப்பாக கொள்ளலாம்..

கடவுளுக்கு நாம் சொல்லும் அனுமானங்களில் தலையாயது சக்தி... அணுவும் கிட்டத்தட்ட சக்தியின் பெட்டகம் தான் என்பதை இன்றைய அணுவுலைகளும் அணுகுண்டுகளும் அப்பட்டமாய் சொல்கின்றன..

அதனை ஒரு கருத்தாக எடுத்து பார்த்தால்.. நாம் பயன்படுத்தும் அல்லது நம்மிலிருந்து தோன்றும் காஸ்மிக் கதிர்களுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் உண்டு என்கிறது மறை.. இன்றைய அறிவியலும் அவ்வாறே நிறுவுகிறது..

கடவுளிலிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றியது என்கிறது மறைகள். இன்றுவரை ஒரு அணுவெடிப்பே நமது பிரபஞ்ச பிறப்பிற்கு காரணம் என்கிறது அறிவியல்..

இவைகளுக்கு மேலாக அணுவிற்குள் இருக்கும் வெற்றிடம் மற்றும் ந்யூட்ரான்..  கடவுளின் ஏதுமற்ற தன்மையை காட்டுகிறது.. அத்தொடு ந்யூட்ரான் கடவுளின் ரகசிய நிலையை விருப்பும் வெறுப்பும் அற்ற நிலையை ஒத்துப்போகிறது.. 

அத்தனையிலும் அணுவும் கடவுளும் ஒத்துப்போகிறபடியால்.. இவை இரண்டும் ஒன்றென்று சொல்லலாம்.. எனினும்.. இந்த அணுக்களை எல்லாம் இயக்குவது யார்?.. அவ்வாறு இயக்க தேவைப்படும் ஆற்றல் என்ன.?. அவ்வாற்றலை தரும் அணுக்கள் யாவை?

இது போன்ற கேள்விகள் இன்னும் நாம் தேடும் கடவுளை உயரத்திலேயே வைத்திருக்கின்றன..

(நெருங்கலாம்... )




إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم