ஜீவாத்மா - பரமாத்மா: இவை இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
உயிருள்ள உடல் ஜீவாத்மா .. அதன் உச்சபட்சஆரம்பமும் முடிவும் பரமாத்மா..
இதற்கான சரியான உதாரணம் கடல்..
கடலின் ஒரு சில துளிகள் மழையாகி நதியாகி மீண்டும் கடலாகும்.. அது போல பரமாத்மாவிலிருந்து ஜீவாத்மா வருகிறது மீண்டும்்அங்கே செல்ல வேண்டும்.. எனினும் இடையில் சில அணைகள் வருகின்றன அவை அணைத்தபடி தடுக்கின்றன.
இதற்கான சரியான உதாரணம் கடல்..
கடலின் ஒரு சில துளிகள் மழையாகி நதியாகி மீண்டும் கடலாகும்.. அது போல பரமாத்மாவிலிருந்து ஜீவாத்மா வருகிறது மீண்டும்்அங்கே செல்ல வேண்டும்.. எனினும் இடையில் சில அணைகள் வருகின்றன அவை அணைத்தபடி தடுக்கின்றன.
உங்கள் "எழுதும் வழக்கம்" என்ன? எங்கே எழுதுகிறீர்கள்? எந்த சாதனத்தை விரும்புகிறீர்கள்?
பெரும்பாலும் கட்டுரைகள் எழுதுவது வழக்கம் நாளொன்றுக்கு இரண்டு மூன்றாவது எழுதிவிடுவது .. கவிதைகள் அதிகம் எழுதுகிறேன்.. கதைகள் பல சிறு சிறுபத்ிகளாக எழுதி வைப்பேன்…
எங்கெல்லாம் சில நேரம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எழுதுவது.. பெரும்பாலும் மொபைலில் வரும் ட்ராப்ட் செயலிகளில் எழுதுவேன்..
எங்கெல்லாம் சில நேரம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எழுதுவது.. பெரும்பாலும் மொபைலில் வரும் ட்ராப்ட் செயலிகளில் எழுதுவேன்..
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கடவுள் காப்பாரா?
உதாரணமாக ஒரு விசயம் சொல்கிறேன்..
தசாவதாரத்தில் முன்ஜென்ம கமலான ரங்கராஜ நம்பி அத்துனை கடவுள் நம்பிக்கை மேலானவராக இருப்பார்.. அவர் பெருமாளை நம்பி கடலில் வீசும்போதும் கடவுள் அவரை காப்பாற்றியிருக்க மாட்டார்..
அதே மறுஜென்மத்தில் வரும் கோவிந்த் கமலினை பலமுறை கடவுள் காப்பாற்றுவது போல காட்டப்படும்..
நமது சைவ சித்தாந்தம் ஒன்று சொல்கிறது.. கடவுள் நமது கர்மவினைகளை அனுபவிக்க மட்டுமே உதவுகிறார் மற்றைய தேவைகள் அவரது கணக்குப்படி அவசியமற்றவை..
அதனாலே ஆறுநாளில் கண்ணப்பரும் என்பது வயதாகியும் அப்பர் முக்தியடைய முடிந்தது..
தசாவதாரத்தில் முன்ஜென்ம கமலான ரங்கராஜ நம்பி அத்துனை கடவுள் நம்பிக்கை மேலானவராக இருப்பார்.. அவர் பெருமாளை நம்பி கடலில் வீசும்போதும் கடவுள் அவரை காப்பாற்றியிருக்க மாட்டார்..
அதே மறுஜென்மத்தில் வரும் கோவிந்த் கமலினை பலமுறை கடவுள் காப்பாற்றுவது போல காட்டப்படும்..
நமது சைவ சித்தாந்தம் ஒன்று சொல்கிறது.. கடவுள் நமது கர்மவினைகளை அனுபவிக்க மட்டுமே உதவுகிறார் மற்றைய தேவைகள் அவரது கணக்குப்படி அவசியமற்றவை..
அதனாலே ஆறுநாளில் கண்ணப்பரும் என்பது வயதாகியும் அப்பர் முக்தியடைய முடிந்தது..
ஒரு நாவலை எழுத விரும்பும், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியாதவர்களுக்கு சில நல்ல ஆலோசனைகள் என்ன?
நாவலின் கதை அமைப்பை சிறுசிறு வாக்கியங்களாக அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாக்கியங்களையும் விவரமாக எழுதுங்கள்.. பின்னர் அவற்றை சுருக்கி எழுதுங்கள் .. இவ்வாறு அனைத்து வாக்கியங்களும்எழுதியான பின்னர் அவற்றை சீராக படியமர்த்துங்கள்.. ஒரு அழகான நாவல் தயார்..
ஒவ்வொரு வாக்கியங்களையும் விவரமாக எழுதுங்கள்.. பின்னர் அவற்றை சுருக்கி எழுதுங்கள் .. இவ்வாறு அனைத்து வாக்கியங்களும்எழுதியான பின்னர் அவற்றை சீராக படியமர்த்துங்கள்.. ஒரு அழகான நாவல் தயார்..
எந்தெந்த கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும்.?..
திருமந்திரத்தில் ஒரு பாடலுண்டு
யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை என்று..
இறைவன் கடவுள் என்று கண்டால் உன்னால் இயன்றால் சிறு பச்சிலைகளை போட்டு வணங்கு என்பது இதன் கருத்தாகும்..
பெரும்பாலும் கடவுள் என்பவர் நாம் நம்முள்ளே கடக்க உதவுபவர்.. அதனால் நமது மனதிற்கு உகந்த வழிபாட்டினை செய்யலாம்.. நம் வழமையில் ஒன்று உண்டு .. செம்பு அல்லது கலசம் மஞ்சள்பிடி ஆகியவற்றை கடவுளாய் வணங்குவது..
இதன் அடிநாதமானது ஒருவர் மனதளவில் நான் ஒரு பெரும்பொருளால் படைக்கப் பட்டவன் என்கிற எண்ணம் எழுந்து அதனால் நான் என்ற அகந்தை ஒழியவே..
மற்றபடி சில வழிபாட்டு முறைகள் மருத்துவ குணமுடையன அவற்றை அதன் தேவையறிந்து செய்யலாம்.. உதாரணமாக லலிதாம்பிகை வழிபாட்டில். ஒரு தேவதைக்கு தயிர் வைத்து பூசித்து பிரசாதமாக உண்பர் அது தோல்நோய் கொண்டவர்க்கு குணந்தரக்கூடியது..
மேலும் அம்மை வந்த வீட்டில் ஒரு வழிபாடு உண்டு அருகிலிருக்கும் மாரியம்மனுக்கு நீரில் வேப்பிலையும் மஞ்சளும் கலந்து ஊற்றி ஊற்றிய நீரில் சிறிது கொண்டுவந்து நோயுற்றவர் மேல் பூசுவர். மஞ்சளும் வேப்பிலையும் கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்ததே.. இதன் பின்னணி மருத்துவ முறை மட்டுமே மறந்து போனது..
யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை என்று..
இறைவன் கடவுள் என்று கண்டால் உன்னால் இயன்றால் சிறு பச்சிலைகளை போட்டு வணங்கு என்பது இதன் கருத்தாகும்..
பெரும்பாலும் கடவுள் என்பவர் நாம் நம்முள்ளே கடக்க உதவுபவர்.. அதனால் நமது மனதிற்கு உகந்த வழிபாட்டினை செய்யலாம்.. நம் வழமையில் ஒன்று உண்டு .. செம்பு அல்லது கலசம் மஞ்சள்பிடி ஆகியவற்றை கடவுளாய் வணங்குவது..
இதன் அடிநாதமானது ஒருவர் மனதளவில் நான் ஒரு பெரும்பொருளால் படைக்கப் பட்டவன் என்கிற எண்ணம் எழுந்து அதனால் நான் என்ற அகந்தை ஒழியவே..
மற்றபடி சில வழிபாட்டு முறைகள் மருத்துவ குணமுடையன அவற்றை அதன் தேவையறிந்து செய்யலாம்.. உதாரணமாக லலிதாம்பிகை வழிபாட்டில். ஒரு தேவதைக்கு தயிர் வைத்து பூசித்து பிரசாதமாக உண்பர் அது தோல்நோய் கொண்டவர்க்கு குணந்தரக்கூடியது..
மேலும் அம்மை வந்த வீட்டில் ஒரு வழிபாடு உண்டு அருகிலிருக்கும் மாரியம்மனுக்கு நீரில் வேப்பிலையும் மஞ்சளும் கலந்து ஊற்றி ஊற்றிய நீரில் சிறிது கொண்டுவந்து நோயுற்றவர் மேல் பூசுவர். மஞ்சளும் வேப்பிலையும் கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்ததே.. இதன் பின்னணி மருத்துவ முறை மட்டுமே மறந்து போனது..
ஒருவரின் கோபம் எப்பொழுது நன்மை பயக்கும்?
ஒருவரின் தவறான முடிவினை தன் கோபத்தால் தடுக்கும் போது… இந்த வகை கோபங்கள் அதிகம்தந்தைகளிடம் காணப்படும்..
தன்கோபத்தை காட்டியே பலமுறை தந்தைகள் வென்றுள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.. இந்த முறை சரியானதா ? என்ற விவாதங்கள் எழலாம் ஆனால் அந்த சூழ்நிலையில் ஓர் கோபத்தால் நிகழவிருக்கும் தவறு தடுக்கப்பட்டது என்பது மட்டுமே சரியானு .. அந்த சூழல்களில் மட்டுமே கோபமானது நன்மையை பயக்கும்..
தன்கோபத்தை காட்டியே பலமுறை தந்தைகள் வென்றுள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.. இந்த முறை சரியானதா ? என்ற விவாதங்கள் எழலாம் ஆனால் அந்த சூழ்நிலையில் ஓர் கோபத்தால் நிகழவிருக்கும் தவறு தடுக்கப்பட்டது என்பது மட்டுமே சரியானு .. அந்த சூழல்களில் மட்டுமே கோபமானது நன்மையை பயக்கும்..
இலக்கியங்களின் வலிய மற்றும் நல்ல குணமுள்ள ஒருவனின் கோபம் நன்மை தரும் எனக் கூறப்படுகிறது.. கிருஷ்ணன் நல்லவன் மற்றும் வலியவன் அவனுடைய கோபமே கம்சனைக் கொன்று நன்மை தந்தது என்பது போல சொல்வர்..
சமயங்களில் ஓர் கூர்மையான அறிவுள்ளவன் துணையிருந்தால் பிறரின் கோபங்கள் நமக்கு நன்மையை தரும்.. உதாரணமாக ஆசிரியர் கோபத்தால் நண்பன் துணையாய் வந்து சொல்லி தருவான் பாடங்களை எளிமையாக்குவான் இவை போல.
சமயங்களில் ஓர் கூர்மையான அறிவுள்ளவன் துணையிருந்தால் பிறரின் கோபங்கள் நமக்கு நன்மையை தரும்.. உதாரணமாக ஆசிரியர் கோபத்தால் நண்பன் துணையாய் வந்து சொல்லி தருவான் பாடங்களை எளிமையாக்குவான் இவை போல.
கடவுள் எவ்வாறு அனைத்து இடத்திலும் எல்லாவற்றிலும் இருப்பார் ? அது எவ்வாறு சாத்தியம் ? ஏதேனும் சான்று உளதா ?
நல்ல கேள்வி .. கேட்டமைக்கு நன்றி..
இதற்கு இரண்டு உதாரணங்களை கொண்டு விடை சொல்ல விரும்புகிறேன் . ..
- நமது உடலில் உயிர் இருக்கும் இடம் என்று எதை சொல்வீர்கள்.. குறிப்பிட்டு சொல்ல முடியாதல்லவா.. இருந்தாலும் ஒரு பொருளுக்கு கொள்வோம். இப்போது தலையில் என்று வைத்துக்கொள்வோம்.. அச்சமயம் காலில் பலத்த அடி விழுகையில் உயிருக்கு வலிக்கிறதே எவ்வாறு?.. இதனை வேத மரபு வியாபகம் என்று சொல்லும் தமிழில் பரவிநிற்றல் என்று சொல்லலாம்.. இப்படி உயிர் உடல் முழுவதும் பரவிநிற்பது போல் கடவுளும் பிரபஞ்சம் முழுவதிலும் பரவிநிற்கிறார்..
- அடுத்தாக ஒரு உதாரணம் ஒரு நீண்ட செம்பு கம்பினை எடுத்து இருமுனையிலும் மின்விசையினை இணைத்து விடலாம்.. இப்போது மின்சாரம் ஆனது எந்த இடத்தில் இருக்கிறது.. ஒட்டுமொத்த கம்பியிலும் பரவி இருக்கிறதல்லவா அதுபோலே கடவுளும் பரவி இருக்கிறார்..
இதில் ஒன்றை இன்னும் விளக்க வேண்டும்.. இப்போது மேற்சொன்ன உதாரணங்களில் உடலை விட்டு காலை பிரித்துவிட்டால் காலுக்குள் உயிர் இருக்காது அல்லவா.. அதுபோலே மின்கம்பின் ஒரு முனையை துண்டித்தால் அந்தமுனைக்கு மேலாக எங்கும் மின்சாரம் இருப்பதில்லை.. இதேபோல் ஒரு பொருளை பிரபஞ்சத்துள் இருந்து பிரித்தாலும்்அதனுள் கடவுளது தன்மை இருக்காது..எனினும் பிரபஞ்சத்தை விட்டு ஒரு பொருளை விலக்க இயலாது என்பதால் அனைத்திலும் இறையின் அம்சம் இருக்கிறது.. காயத்தால் சீல்பிடித்த தசையும் உடலின் அங்கமாக இருக்கும் போது உயிரின் ஆட்சிக்குள் வசபடுகிறது அதனாலே வலியை உயிர் பெறுகிறது.. இந்த முறையே அழியும் பொருளிலும் கழிவு எச்சத்திலும் இறை தன்மை இருக்கின்றது..
அதனாலே பாரதியும் சொல்கின்றான்..
விண்மட்டும் தெய்வமன்று
மண்ணும் அஃதே.
மனித பரிணாம வளர்ச்சியில் ஆண் மற்றும் பெண் என இரு வேறு பாலினங்கள் பரிணமித்தது எப்படி?
ஒன்றை கவனியுங்கள் உயிரின் தொடக்கத்திலிருந்தே ஆண் பெண் பாலினங்கள் உண்டு.. மேலும் மனித பரிணாமம் என்பது ஒரு தினத்தில் நடந்தவை அல்ல.. பல் வருடங்களாக பரிணாமத்திற்கு முயற்சித்து அதன் தாக்கம் தாளாமல் பல மனித முன்னுயிர்கள் இறந்து.. பின்னர் அது பிறப்பிலேயே அமைந்து மாற்றத்திற்கு உட்பட உட்பட வந்த பரிமாணமிது. இதற்கு குறைந்தது 12 தலைமுறைகளாவது ஆகியிருக்கும் என்பது அறிவியலாளரின் கருத்து..
உதாரணமாக மரத்திற்கு மரம் தாவும் குரங்கு எழுந்து நிற்க முற்பட்டால் மரந்தாவும் போதான வளைவு கிடைக்காமல் கீழே விழுந்து இறந்திருக்கலாம்.. அவ்வாறு எத்தனை உயிர்கள் இறந்திருக்கும் என்று கணக்கிட முடியாது.. மெல்ல மெல்ல நடந்தேறிய மாற்றம் இது.
அதுபோலே பெண் குரங்கும் மாற்றத்திற்குட்பட வந்தவிளைவு தான் இந்த பாலின மாற்றம். என்றாலும் இயற்கையின் கணிதத்தில்பெண் ஆண் என்ற பிரிவினையும் அதன் மூலமான இனவிருத்தியும்.. ஒரு சிக்கலான செயலை தொடர் சங்கிலியை இலகுவாக்குகிறது. ..
வெகுளி என்பதன் சரியான அர்த்தம் என்ன?
கோபக்காரன் என்பதே.. வெகுண்டு எழுந்தான் என்பதை என்ன பொருளில் கொள்வீர்கள்.. அப்போது வெகுண்ட ஒருவன் வெகுளி என்பது தானே முறை
ஒவ்வொரு தெய்வத்திற்குமான வழிபாட்டு முறைகள் என்ன?
ஒவ்வொன்றுக்கு ஒரு விதமான வழிபாடுஉண்டு..
சிவன் லிங்க வடிவில் - அபிஷேகம்
உருவ வடிவில் என்றால் - ஆராதனை
சிவசக்தி வடிவில் என்றால் - படையல்
முருகன் ஒருவடிவில் - பால் நெய் வகைப் படையல்கள்
முருகன் ஆறுமுக வடிவில் - சைவ உணவு படையல்கள்.
கணபதி - 21 வகை உணவு படையல் முறை.
எனினும் இவை அனைத்தும் மனம் செம்மை அடையத்தான..
மனமது செம்மையடைந்தால் மந்திரங்கள் செபிக்க வேண்டா - சித்தர் வாக்கு ..
ஆத்ம ரகசியம் என்றால் என்ன?
ஆத்ம ரகசியம் என்றால்.. உடலில் வீற்றிருக்கும் உயிர் வேறு என்றறிந்து உள்ளே செல்கையில் ஆத்மா புலப்படும் அதனுள் தொடர்ந்து செல்கையில் பிரம்மம் தோன்றும் பின்னும் தொடர பரபிரம்மம் தென்படும் இந்த பரபிரம்ம தரிசனத்தையே ஆத்ம ரகசியம்.. என்கிறது மறைநூல்கள்.. எனினும்..
கர்ம வினைகளின் பட்டியலையும் ஆத்ம ரகசியம் என்று சொல்லபடுகின்றது.. மொத்த பிறவியின் கர்ம வினைகளின் தொகுப்பு - சங்கேத கர்மவினை
வந்த பிறவிக்கு கொண்டுவந்த வினை- ஆகாமிய கர்ம வினை
இப்பிறவியில் செய்வது - பிரகிருதி கர்மவினை..
இம்மூன்றையும் அறிதல் ஆத்ம ரகசியம் என்கிறது சைவ சித்தாந்தம்..
உப்பையும், வெள்ளை சர்க்கரையையும் முற்றிலும் தவிர்த்து விட்டால் நமது உடலில் என்ன விளைவுகள் ஏற்படும்?
உப்பை குறைக்கலாம் முற்றிலும் தவிர்த்தல் நல்லதல்ல.. நமது உடலின் ஒவ்வொரு செல்லும் தன்னை புதுப்பிக்க க்ளூகோஸ் தேவைபடுகிறது அதற்கான உப்பின் அளவில் நாம் சேர்ப்பது அவசியம்..
வெள்ளை சர்க்கரை என்பது குறிப்பிட்டு கேட்டதால் சொல்கிறேன்.. உண்மையில் கரும்பிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் சர்க்கரையில் பாதிப்பு என்பது மிகமிக குறைவு இன்று நாம் பயன்படுத்தும் சர்க்கரையானது சில வேதியல் தனிமங்களால்்அதிக இனிப்பூட்டபட்டது.. (லெமன் மற்றும் லெமன் சால்ட் போல) இது ஆபத்தானது தான் என்பதால்தவிர்த்தல் நலம் அதற்கு மாற்று வழிகளை பொருடகளை கையாளலாம்.
உருவத்தில் சிறிய உயிரினங்களைக் கொல்வது ஏன் பெரிதாக பொருட்படுத்த படுவதில்லை? அப்படியானால் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வெவ்வேறு மதிப்பு நிலைகளா?
வாலிசார் பாடல் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது..
பச்சக் கறி யாவும் பாவ கருவல்ல
நீயும் நானும் யாரு குத்தங் குறை சொல்ல..
என்ற வரிகள். இவை நடுநிலையானவன் சொல் போல் வரும்..
சிறிய உயிரினங்களை நாம் கொல்வதின்காரணம் ஒருவித கோழையின் வீரத்தனம் போன்றதே.. உண்மையில் அவை பலரால் பொருட்படுத்த படுவதில்லை அதற்கு பல காரணங்களை சொல்கிறோம்.. ஆனால் நாம் ஒன்றை அறிவதில்லை இயற்கை ஒரு வித்தியாசமான படைப்பாளி..
மற்றொன்று ஆம் உயிர்களுக்குள் பேதமுண்டு.. அவை ஆற்றல் சார்ந்த பேதங்கள்.. நீங்கள் கேட்ட கேள்வியில் ஔிந்திருப்பது பூச்சிகள் பல்லி ஓநான் தவளை பறவைகள் போன்ற எளிய உயிரனங்களான விலங்கியல் உயிரினங்கள்… ஆனால் செடி மூலிகை கீரை புல் போன்ற உயிரினங்களுக்கு மனிதயினம் ஏனேக துயரம் செய்திருக்கிறது.. அவற்றை நாம் கருத்தில் கொள்கிறோமா?..
மனிதன் தன் அறியாமையால் பலதவறுகளை செய்கிறான்.. ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்தில் அந்தமான நிகோபார் அருகில் ஒரு தீவில் தன் ராணுவ படைக்கு தளமாக பயன்படுத்த முயன்றது ஆனால் தட்பவெட்ப சூழ்நிலை சரியில்லாமையால்.. கைவிட்டது.. ஆனால் அப்போது சென்ற வீரர்கள் மூன்று நாயை அங்கே விட்டு வந்தனர்.. அந்த தீவில் வேறெஙகும் இல்லாத ஒரு பறவையினம் இருந்தது நமது சேவலும் பென்குவினும் கலந்தது போல் அவைகள் பறக்கும் இயல்பற்றவை காரணம்அவற்றிக்கு அஙகே பறக்கும் அவசியம் ஏற்படவில்லை.. இந்தநாய்கள் அந்த பறவைகளை வேட்டையாட ஆரம்பித்தன பின்னர் அந்த பறவையினமே அழிந்து போனது..
இதற்கு காரணத்தை சொல்கிறேன் கேளுங்கள்.. பறவைக்கும் பறக்க வேண்டிய அவசியமற்றது .. நாயை அங்கே விட்டது இது இரண்டுமே என்றுநினைக்கிறீர்கள்.. ஆம் ஆனால்மற்றொன்றும் உண்டு.. அந்த நாய்களை வேட்டையாடும் ஒரு உயிரினம் அங்கு இல்லாமல் போனது..
ஆக இயற்கை ஒரு கணக்கில் தான்இயங்குகிறது மனிதன் அந்த கணக்கை தன் முட்டாள் தனத்தால் கெடுக்கிறான்.. அதனை இயற்கை தாங்கி கொள்ளக் காரணம் அதன் கணக்கில் அத்யாவசியமான ஒருவன் மனிதன்.. அவனால் மரங்களை செடிகளை உருவாக்க முடியும் அழிக்கவும் முடியும்.. விலங்குகளை பண்மடங்கு இனபெருக்கம் செய்விக்க முடியும்.. அவற்றை ஒட்டுமொத்தமாக அழிக்கவும் முடியும்.. ஆகையால் இயற்கை மனிதனை சிறப்பான கணக்கில் வைத்திருக்கிறது.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவில்களுக்கு செல்லக் கூடாதென்பதன் காரணம் என்ன?
சற்று சிரமமான கேள்விதான்.. உண்மையில் அது பழங்காலத்தில் மட்டுமே வழக்கத்தில் இருக்க வேண்டியஒன்று என்பது என்கருத்து..
சில சங்கடங்களுக்கு மன்னிக்கவும்.. முன்பொரு காலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஓராடையில் இருப்பர் அது வீட்டார்க்கு ஒரு சமிக்ஞையாகவும் இன்னபிற வசதிக்காகவும் இருந்ததாக கேள்வி… உதாரணமாக பாஞ்சாலி சபதத்தில் பாரதி திரௌபதி ஓராடையில் இருந்ததாக உள்ளது.. அதிலும் அவள் வெியே வர இயலாது என்றே சொல்வாள்..
கோவில்களுக்கு செல்லும் போது அது பிறரை சங்கடத்துள் ஆழ்த்தும் என்பதால் வரக்கூடாது என்று அமைந்தது.. மேலும் அந்த காலத்தில் சிந்தனையானது உடல் மீதே இருப்பதால் கவனச் சிதைவு ஏற்படலாம் .. ஒருவரை பார்த்து ஒருவர் மொத்தமாக இறை சிந்தனை இல்லாது போகலாம் என்பதற்காக.. உதாரணமாக கோயிலில் தரிசனத்தின் போது ஒருவர் செல்போன் பேசுகிறார் என்றால் வந்தவரில் பலருக்கு கவனம் திரும்புகிறதல்லவா.. அதுபோல் எனறு கொள்ளலாம்
"கடவுள்" என்ற சொல்லையே மனிதன் உருவாக்கியிருக்கும் போது, மனிதனை உருவாக்கியவர் யார்?
இதற்கு ஒரு வரலாற்றை கையாள விரும்புகிறேன்..
ஒருமுறை ஒரு கப்பலில் பயணிக்கும் ஒருவர் உலகின் பல்வேறு நாடுகளை பற்றி அறிந்திருந்தார்.. ஒருமுறை ஒரு புயலில் சிக்கிய கப்பல் ஒருகரையில் சேர்ந்தது அன்று அவர் ஒரு நிலத்தை சேர்ந்து நெடுந்தூரம் கடந்தார் அன்று அவர் கண்டறிந்த நிலத்திற்கு அமேரிக்கா என்று பெயரிட்டார்.. ஒன்றை கவனியுங்கள் அவருக்கு முன்னமே அந்த நாடு நிலம் இருந்திருக்கிறது என்றாலும் இன்றும் அது அமேரிக்கா என்றே அழைக்கப்படுகிறது…
இப்படிதான் கடவுள் என்ற இடுகுறிப் பெயரும்.. தமிழில் காரணப் பெயர்களே அதிகம். ஆதலால். கடவுள் என்பதை ஆராய்ந்தால்.. உள்ளே கடக்கச் செய்பவர் என்று பொருள் வரும்..
நம்ம உடல் உறுப்புகளில், "ச்சே.. எப்படியான அமைப்பு? சான்ஸே இல்ல"ன்னு பார்த்து மலைத்துபோன உறுப்பு எது, என்ன.?
ச்சே சான்ஸே இல்லை என்கிற மாதிரியான உறுப்புகள் நம்மில் பல இருக்கின்றன..
- நமது உணவு சீரண மண்டலம் .. இதனை இன்றைய அறிவியலில் ஒரு இயந்திரமாக செய்ய வேண்டுமென்றால்.. அதன் அகலம் மட்டும் 4 கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.. அத்தகு ஆற்றல் வாய்ந்த இயந்திரத்தை வெறும் 1*2 ஜான்களில் அமைந்திருப்பது..
- நமது ஈரல் வகையறாக்கள் அதாவது நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் என்றெல்லாம்இருக்கிறதல்லவா.. அவை . அவை சுரக்கும் சுரபிகளாகவும் பிற சுரபிகளின் சுரப்புகளை வாங்கி தேக்கி ஆற்றலாக மாற்றும் கருவியாகவும் இருப்பது ..
- மூளைக்கு கீழுள்ள ஜெல் போன்ற அமைப்பு.. அது மூளைக்கு பாதுகாப்பு படலமாகவும்.. மூளை செயல்படும் போது ஏற்படும் அதிக வெப்பத்தை வாங்கிக் கொண்டு மூளையை பதமாக வைத்திருப்பதும். அந்த வெப்பத்தை சுவாசத்திலும் காய்ச்சலிலும் கடத்திவிடுவதும்.. ஆச்சரியமான படைப்புதான்
- நமது நோயெதிர்ப்பு மண்டலம் .. ஒவ்வொரு முறையும் நமது நோயெதிர்ப்பு மண்டலம் தன்னை தாக்கவரும் கிருமிகளை சில பிரதிகளை தன் மண்டலத்துக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் . அந்த சேமிப்பு கலத்தினுள்ளே அதற்கான நோய் எதிர்ப்பு அமைப்புகளையும் சேமித்து வைத்திருக்கும் அதனால் தான் ஒருமுறை அம்மை தாக்கி குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் அது வருவதில்லை.. வேடிக்கை என்னவென்றால் இங்கு சேமிக்க பட்ட கிருமிகள் வெளியிடும் சுரப்புகளை வைத்து மற்ற கிருமிகளை தீர்த்துக்கட்டும்..
- இதுவே ஆச்சரியத்திலும் ஆச்சரியம் உடலில் உயிரானது பிரிந்த பின்பு.. தன் உறுப்புகளை தானே அழித்துக்கொள்ளும் அமைப்பு .. ஈரல்கள் தன்னுள் வைத்துள்ள கிருமிகளால் தன்னை தானே அழித்துவிடும்.. தோல் தனது நீர்தன்மையை இழந்து அழிகிறது..
- ஆச்சிரியங்கள் தானே...
கல் உப்பை மகாலக்ஷ்மியின் அம்சமாக பாவிப்பதன் விளக்கம் என்ன?
பண்டைய காலத்தில் உப்பு விலைதரும் பொருள் என்பதால் லஷ்மியின் அம்சமாக இருந்தது.. மதங்களின் வழி பார்த்தால்.. லஷ்மி கடலரசி ஆக உப்பு அவள் சொத்தல்லவா..
உடல், மனம், அறிவு, ஆன்மா இவைகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன?
உடல் - உயிருறையும் கலம்
மனம் - பெரும் உணர்வினை தளம்
அறிவு - நினைவும் அனுபவமும் அதன் மூலம் கொண்ட உத்தியும்உறையும் இடம்
ஆன்மா - நான் என்னும் ஒன்று.
இதன் படி ஆன்மாவாகிய நான் உடலில் அமர்ந்து மனம் அறிவு என்ற கருவிகளால் இயக்குகிறேன்.. ஒரு வாகனத்தின் ப்ரேக் ஆக்சிலேட்டர் போல..
கங்கையில் குளித்தால் பாவம் போகுமா? தெளிவுபடுத்த முடியுமா?
கீதை சொல்லும் வசனத்தை சொல்கிறேன்..
பெருமைமிக்க பார்த்தனே கேள்.. ஒருவன் அனுதினமும் கங்கையில் மூழ்கி எழுவதால் எந்த பயனையும் பெறமாட்டான்.. ஆனால் செய்த பாவங்களை எண்ணி திருந்தி பிராயசித்தம் வேண்டி மூழ்கி எழுந்தால் கங்கை அவனுக்கு முக்தியை அளிக்கும் பார்த்தா..
மூழ்குவதை விட மனம் திருந்தி பிராயசித்தம் வேண்டுவதே நன்மை தருகிறது..
தெரிந்தோ தெரியாமலோ நம் மூளைக்கு நாம் இழைக்கும் தீங்கான விடயங்கள் என்ன?
தீங்கான விடயங்கள் என்றது நினைவுக்கு வருகிறது மூளை நம்மிடம் இருந்து எவ்வளவு அஞ்சி பாதுகாப்பாக இருக்கிறது தெரியுமா?..
1 நீங்கள் சட்டென தலை திருப்பினாலும் அது மூளையை பாதிப்பதே.. அது அந்த தாக்கத்திலிருந்து தன்னை காக்க அது ஒரு குஷன் போன்ற ஜெல்லை வைத்திருக்கிறது..
2 அதிகம் தூங்காமல் சாப்பிடாமல் இருப்பது.. அதாவது மூளைக்கு ஓவர்டைம் தருவது
3 புதிய செயல்களை செய்வது அதன் ஆற்றலை அதிகம் உண்கிறது
மூன்றாவது கண் என்பது எதைக் குறிக்கிறது?
ஈசனின் மூன்றாம் கண் அவனது ஞானத்தின் அடையாளம்.. அந்த ஞானமானது பிரபஞ்சத்தை ஆக்கும் அழிக்கும் ரகசியத்தை தெளிவாய் அறிந்திருக்கிறது.. அந்த ஞானமே அவனது ஒப்பற்ற ஆற்றலாகிறது.. அவன் நம்மவன். நம்தோழன்.. ஆக நமக்கும் மூன்றாம் கண் உண்டு அதுவும் ஞானமே…
முற்பிறப்பில் செய்த தர்ம அதர்மங்களின் விளைவாக சுக துக்கங்களை அனுபவிக்க மனிதன் பிறந்திருக்கிறான் என்றால் இப்பிறப்பில் கடவுள் ஏதற்காக தேவைப்படுகிறார்?
சிறப்பான கேள்வி இதற்கு நான் பகவத் கீதையை உதாரணமாக கொள்ள விரும்புகிறேன்..
அருச்சுனன். நம்போல் மானுடன்.. கண்ணன் அவனை சுக துக்கங்களை நோக்கி நகர்த்தும் சாரதி ஆகிறான் அவ்வாறே இறைவன் நமக்கு உதவுகிறான்.. ஆதலால் இப்பிறப்பு மட்டுமல்ல எப்பிறப்பிலும் அவன் தேவைப்படுகிறான்.. மேலும் இவை பொருட்டு இப்பிறப்பில் நாம் மேலும் வினைகள் சேர்க்காதிருக்க அவன் அவசியப் படுகிறான்.
ராமேஸ்வரம் கோவில் மூலவர் யார் சிவபெருமான் தானே, ஏன் ராமநாதசுவாமி கோவில் எனக் குறிப்பிடுகிறார்கள்? பர்வதவர்த்தனி என்பவர் லக்ஷ்மி தேவியா? பார்வதி தேவியா?
சற்றே இதை விளக்க வேண்டும் ராமேஸ்வரம் என்பதன் வரலாறு அனைவரும் அறிந்ததே..
நம் மன்னர்கள் பலரும் தாங்கள் எழுப்பிய ஆலயங்களுக்கு தங்கள் பெயரால் நகரமைப்பது வழக்கம்.. தஞ்சை கோயிலுக்கு. ராஐராஜேஸ்வரம் என்று பெயர்.. அதன் மூலவர்க்கு ராஜராஜனுடையார்.. என்று பெயர்.. இதுபோல ராம ஈஸ்வரம் - ராமேஸ்வரம் ஆனது… ராமன் தன் கரத்தால் அமைப்பு செய்த லிங்கம் என்பது அனைவரும் அறிந்ததே..
ராமனின் தலைவனான(நாதனாக) இருந்த சுவாமி.. ராமநாதசுவாமி.. உமையாள் மலைமகள் ஆலால்.. பர்வதவர்தனி.. என்றும் அழைக்க படுகிறார்.. பர்வதம் என்பது மலையை குறிக்கும் வடமொழி சொல்..
வர்தனி.. என்பது காக்கும் அரசி.. என்றாகும்.
இந்து மதத்தில் ஏன் தெய்வங்களுக்கு சாந்த வடிவங்கள், கோர வடிவங்கள் என பிரித்து வைக்கப்பட்டுள்ளது?
தெய்வங்கள் அத்துனையும் அருளும் வடிவமாக கொள்ளவேண்டும்.
சாந்த வடிவங்கள் அறிவை தருபவை (சிவலிங்கம், தட்சிணாமூர்த்தி, சயனப் பெருமாள் போன்றவர்கள்)
கோர வடிவங்கள் உடல் மற்றும் உள்ள பலத்தை அருள்பவை (காளி, பைரவர், நரசிம்மர், முருகன்)
இதன் பொருட்டே வழிபாடும் வகுக்கப்படுகிறது. சிவலிங்கம் தூய நிலையில் கொண்டாடப் படும்போது பைரவர் குருதிபூஜை செய்யப்படுவார். இதுவே சமய தத்துவம்.
HTML, CSS, மற்றும் JavaScript ஐ தவிர கற்றுக்கொள்வதற்கான சிறந்த மொழி எது?
தற்சமயத்தில்.. App developers
க்கு XML உதவுகிறது.. மேலும் php வலைதள உருவாக்கத் துறையில் நிறைய வாய்ப்பை தருகிறது.. மேலும்.. SAP /SWP இன்றைய கணினி துறையில் சிறந்த படிப்பாக பார்க்க படுகிறது..
ரோஹிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாதா?
அப்படியல்ல அதுவொரு மூடநம்பிக்கை சோதிடர்களே இந்த தவறை செய்கின்றனர்… ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் பிறந்ததால் அவ்வாறு கதைகட்டுகிறார்கள்.. ஆால் ரோகினி நட்சத்திரம் செவ்வாயின் சாபத்தில் வருவது.. ஆதலால் அவரது ரத்த சம்பந்தமானவர்கள் மிகவும் இறைநம்பிக்கை உடையவராக இருப்பர்… செவ்வாய் உடனடியாக எதையும் செய்தாக வேண்டும் என்று அடம்பிடிக்கும் கோள் ஆதலால் பிடிவாதம் இருக்கும்.. அவ்வளவே..
ஒரு புதினத்தைத் தொடங்குவதற்கு முன்பு எழுத்தாளர்கள் விரிவான விளக்கத்தை எழுதுகிறார்களா?
எழுதமாட்டார்கள்.. காரணம் புதினத்தின் சுவாரஸ்யம் குறையும் என்பதால். ஆனால் எழுதுவது ஒரு பழமையான முறை.. நூற்பயன் என்றும் பாயிரம் என்றும் மரபு நூலகளில் உண்டு.. இன்றும்எழுதலாம் நூலின் தேவைகளை புரிந்து தேர்ந்தெடுக்க ஏதுவாக இருக்கும்..
“ஆன்மீகம்” என்ற பதத்திற்கு சிறந்த ஒரு விளக்கத்தை எங்ஙனம் கூறலாம்? அது மதம் என்பதிலிருந்து எங்ஙனம் வேறுபடுகிறது?
நல்ல கேள்வி .. உங்கள் கேள்விக்கான விடையை உங்கள் சொல்லிலிருந்தே எடுக்கலாம்..
ஆன்மீகம் - ஆன்மா வின் மேலான ஏகத்தை உணர்வது.. அதாவது ஆன்மாவை அறிந்து அதன் பின்னாக ஆன்மாவின் மூலத்தை அறிந்து அங்கிருந்து மூலப்பொருளை அறிந்து அதை ஏகம் என்று உணர்வது ஆன்மீகம்..
மதங்கள் அதற்கான வழிகளே.. உதாரணமா இந்துமதத்தை விளக்குகிறேன்..
சிவன் சக்தி என்று முதலில் இரண்டாக அறிந்து பின்னர் சிவசக்தியாக லிங்கத்தை அறிந்து பின்னர் சிவனான ஔியினை அறிந்து உணர்வதே என்று கொள்வோம்..
அதாவது ஆன்மாவை சக்தி என்றும் ஆன்ம மூலத்தை சிவனென்றும் மூலப்பொருளாக லிங்கத்தையும் அறிந்து ஏகமான ஔியில் சேர்வது என்று உணரும் மார்க்கமாக இந்து மதத்தின் சைவ சமயம் விளங்குகிறது..
அளபெடை என்றால் என்ன? எதனை அளபெடைகள் உள்ளது?
எளிமையாக சொல்லப்போனால்
தெருவில் விற்கவருவோர் கூவி விற்பார்களே அதுவே உதாரணம்…
கீ…. ரையோ .. கீரை.. என்பர்
கத்திரிக்… கா.. வெண்டக்… கா என்பர்..
அந்த எழுத்தின் இயல்பான ஓசையை விட நீ்ட்டுவது அளபெடை .. அதாவது அளவு எடுத்து.. வருவது..
அது இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
இயற்கை அளபெடை..
இவற்றுள் பாடலின் இனிமைக்கு கூட்டுவது இன்னிசை அளபெடை இதில் உயிரெழுத்து நீட்டுதல்.. (ஆலாபனைப் போல) உயிரளபெடை என்றும் அதற்கீடான மெய் யேறி வருதல் ஒற்றளபெடை என்றும் அழைக்கபடுகிறது..
சொல்லின் நயத்துக்கு அதாவது கூவி விற்பது போல கூட்டுவது சொல்லிசை அளபெடை
செய்யுளின் அளவிற்கு கூட்டுவது செய்யுளிசை அளபெடை
இயற்கையாக நாம் பேசும் போதே நீட்டுவது…
மழை தெய்வமாக ஏன் வணங்கப்படவில்லை?
தமிழின் பொதுவும் சிறந்ததும் ஆன நூலான திருக்குறள்.. கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான்சிறப்பு என்று மழையை பற்றி பாடியுள்ளது..
மழைக்கான கடவுளாக இந்திரன் வழிபட படடார்..
மழை இரண்டாம் கடவுளாக வழிபடட்டது..
புதிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தில் பெரும்பாலும் என்ன தவறுகளை செய்கிறார்கள்?
வரியின் எளிமையை திரிப்பது..
கருத்தை மாற்றுக் கோணத்தில் சொல்லவிரும்பி பொருள் மாறுபடுமாறு அமைத்துவிடுவது..
உதாரணமாக..
கமலி வந்து கனிகள் எடுத்து கூடை நிறைத்து தெருவை கடக்க வசந்தன் எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தான்..
இந்த வரியை ஒரே வீச்சில் வாசிக்க இயலும் .. இது எளிமையாக புரியும். .. ஆனால் பாருங்கள்..
கூடை நிறைத்த கனிகள் எடுத்து வந்த கமலி வசந்தன் எதிரில் நடந்து வந்து கொண்டிருக்க தெருவை கடக்கிறாள்….
இதில் வரிசை மாறிட குழப்பம் வந்து வாசிக்க சிரமம் ஏற்படுகிறது .. மேலும்இதில் பொருள் மாறியிருக்கிறது பாருங்கள்…
எழுத்தாளர் கடமை கருத்தை சுருக்கமாக எளிமையாக அமைப்பதே..
إرسال تعليق