என்னங்க பவித்ரன் ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்கீங்க போல.. என்ற குரல் கேட்டு திரும்பினேன்..
வாங்க சார் உங்களத்தான் எதிர்பார்த்தேன் .. எப்படி இருக்கீங்க...
எனக்கென்ன ஜம்னு இருக்கேன் வானலோகத்துல ரம்பா மேனகைனு தினம் ஒரு டான்ஸ் சோ தான்.. என்ன அங்கயும் கொஞ்சம் போராட்டம் ஆர்ப்பாட்டம் மண்ணாடுறாங்க.. இங்கயாவது ஆட்சி மாறும் அங்க அந்த ஆப்சனே இல்ல.
அப்புறம் சார் 2.0 பாத்தீங்களா.. எப்படி இருந்தது..
ஜெயமோகன் நல்ல எழுத்தாளர் அதுமில்லாம ஷங்கர் நல்ல இயக்குனர்.. நல்லாயிருக்கு..
என்னமோ சார் எனக்கு படத்துல நீங்கதான் மிஸ்ஸிங்..
நானெப்ப சினிமால நடிச்சேன்?..
அட அந்த டையலாக் அப்புறம் டீடைல்லாம் இருந்துருக்கும்னு சொன்னேன்..
அப்படினு இல்ல அந்த கதைக்கு அது தேவையும் படல அந்த இடத்துல நானே இருந்தாலும் எல்லாம் கொறைச்சிருப்பேன்.. ஆமா நீங்க கூட கதையெல்லாம் எழுதிருக்கீங்க போல..
அத ஏன் சார் கேக்குறீங்க எழுத ஆரம்பிக்கும் போது எல்லாம் நல்லாதான் போகுது அப்புறந்தான் எல்லாம் கசாமுசானு ஆய்டுது.. உங்க ஸ்டைல்ல எழுதலாம்னு பாத்தா எங்க.. ?..
அதான் ஏற்கனவே எழுதியிருக்கீங்களே..
எங்க சார் அதுலயும் அந்த டச் வரல.. சொல்லித்தர ஆளில்ல எல்லாம் பொசுக்குனு போய்ட்டீங்க.
இந்த ஸ்டைல் மட்டும் எப்படி கத்துக்கிட்டீங்க?..
எல்லாம் உங்கள படிச்சி படிச்சி பிடிச்சதுதான்...
அப்புறம் என்ன அப்படியே பாத்து கத்துக்க வேண்டியது தான..
அங்க தான் மாட்டிக்குறேன்.. நீங்களும் சிறுகதைக்கு சொல்லிட்டு கம்னு விட்டுட்டீங்க.. இப்பக் கூட ஒரு கான்செப்ட் இருக்கு ஆனா எழுததான் சரியா வரல மண்ணாடுறேன்.
அதுக்கு தான நானே வந்துருக்கேன்.. நீங்க நேரேட்டர மாத்தி மாத்தி எழுதுறீங்க.. கதைனு வந்தா கதை சொல்லி ஒருத்தரா தான் இருக்கனும்.. எங்க கான்செப்ட் சொல்லுங்க..
சொன்னேன்..
நல்லாயிருக்கு சில திருத்தம் மட்டும் இருக்கு..
அது மாத்திக்குறேன் வாத்தியாரே.. ஸ்டைல் வேணுமில்ல..
எப்பவும் போல டையலாக் சென்ட்ரிக் எழுதுங்க.. அதுல ஆள் தெரியறதுக்காக ஒரு கேரட்டருக்கும் ஒரு வேர்ட் பேட்டரன் பயன்படுத்துங்க.. வித்யாசமா ஏதோவொரு கேரக்டர் தூயதமிழ்ல பேசுறமாதிரி வெக்கலாம் உங்களுக்குதான் ஒத்துவருதே..
ஆமாம் வாத்தியாரே .. இதுக்குதான் இருந்து சொல்லிக்குடுக்கனும் கிறது..
அதுக்குத் தான வந்துருக்கேன்.. இனி என்ன மாதிரி எழுதவரனும்ங்கிற வங்கள போய் பாத்து வளர்க்க போறேன். வரட்டுமா?..
வாத்தியாரே போனது தான் போனீங்க உங்க எழுத்துக்கு வாரிசுயாருனு சொல்லிட்டு போயிருக்கலாமே. இருக்குறவன் எல்லாம் யூஸ் பன்றான் கடைசில உங்க நிலமை கார்பரேசன் பம்ப் மாதிரி ஆகிடுத்து..
வாரிசு எல்லாம் வேண்டாம் .. அவங்கவங்க தனித் தன்மையா இருந்தாலே போதும்.. என்று கிளம்ப நகர்ந்தவர்..
ஆமா கதைக்கு என்ன பேரு வெக்க போறீங்க.. என்றார்..
#ரங்குஸ்கிN.O
என்ன ரங்குஸ்கி நோவா..
ஆமாம் சார் நீங்கதான் இப்ப இல்லயே. .
ம் அதுவும் சரிதான்.. எழுதுங்க.. .
ஆமாம் சார் நீங்கதான் இப்ப இல்லயே. .
ம் அதுவும் சரிதான்.. எழுதுங்க.. .
Post a Comment