வினோத மரணங்கள் -2

இதுபோன்ற அதிதீவிர வழக்குகளை எல்லாம் விசாரிக்க . ப்ரஸ் வாசனைக்கு வராத கேஸ்களுக்கு என்றே ஒரு சிறைச்சாலை ஒன்று உண்டு.. வெள்ளையர்கள் காலத்தில் கட்டபட்டு ரகசியமாக இருப்பது.. காவலர்கள் சிங்கனை இரவோடு இரவாக அந்த வலசையூர் சிறைச்சாலைக்கு மாற்றிவிட்டனர்..

வலசையூர் என்பது அரசின் அதிகார வர்கங்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு கிராமம் அங்கு அரசாங்கத்தின் ஏகபட்ட ரகசியங்கள் மறைந்திருக்கின்றன அந்த ரகசியங்கள் அந்த கிராமத்தை தலைநகராக கொண்டு ஆண்ட ஜெமினின் கோட்டைக்குள் இருக்கின்றன. இன்றுவரை இது செய்தி ஊடகங்கள் நுழைய முடியாத இடமாகவே இருக்கிறது..

மறுநாள் விசாரணை தொடங்குவதாக இருந்தது ஆனால் விசாரிக்க வரவேண்டிய கார்த்திகேயன் வரவில்லை. சரி ஏதாவது வேலையாக இருக்குமென காவலர்கள் இருந்த போது மதியமானது. காவல் ஆணையர் ரங்கராஜன் வந்திருந்தார்.. விசாரணை எந்தளவில் போகிறது என்று பார்க்க வந்தவர் கார்த்திகேயன் வராததை கேட்டு யோசித்தார். நேற்று இரவே கார்த்திகேயனை தானே அனுப்பி வைத்தும் இன்னும் வரவில்லை என்பது அவருக்கு ஆச்சிரயமாகியது ...

இருதினங்களாக ரங்கராஜன் சிங்கன் வழக்கையும் கார்த்திகேயன் தொலைந்து போனதையும் தானே தேடிவர . மூன்றாம் நாளான இன்று வலசையூர் வருகிற ஊர் எல்லையில் கார்த்திகேயன் வந்த சுமோ மட்டும் இருந்தது.. இருதினங்களாக இல்லாமல் இன்று எப்படி வந்தது என்று தேடிய ரங்கராஜன் சுமோவின் உட்புறங்களை ஆராய்ந்ததில் கார்த்திகேயன் யூனிபார்மும். டிக்கியில் நான்கு பை நிறைய 64 பாட்டில்களும் இருந்தன..

ரங்கராஜன் சற்று கலவரமானார்  . சிங்கன் தான் காரணம் என்று நினைத்தால் அவனில்லாமலே இது நடக்கிறதே என்று பயந்தார். ஆக இது ஒரு கூட்டமே இருக்க வேண்டும் அந்த கூட்டம் தான் கார்த்திகேயனை கடத்தியிருக்க வேண்டும் என்ற யூகத்திற்கு வந்தார்..

மறுநாள் சுமோவின் ட்ரைவர் காவலரின் சடலம் அதே இடத்தில் கிடைக்க இன்னும் அதிர்ந்தார். .. ட்ரைவரின் சடலம் தன் இடதுக்கை கழுத்தின் வலதுபுறம் செருகி  இடதுபுறம் வெளிவந்திருந்தது.. ஒரு அச்சாணி போல இந்த செருகல் இருந்தது.. ரங்கராஜன் தன் வாழ்வில் இப்படி ஒரு மரணத்தை கண்டதில்லை. பிரேத பரிசோதனை அந்த ட்ரைவர் காவலரின் இடதுகையில் எந்த உடைப்பும் ஏற்படவில்லை என்றது அவருக்கு இன்னும் குழப்பத்தை தந்தது .

உறக்கத்தில் கூட இந்த காவலர் உடல் அவர் கனவில் வந்து துன்புறுத்தியது.. அதனால் அவரால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.. கார்த்திகேயன் பற்றிய கவலையும் அவரை தொற்றிக் கொள்ள இதனை யாரிடமாவது கைமாற்ற நினைத்தவர்...

பல சிந்தனைகளுக்கு பின் இதனை ஒரு தனி டிடெக்டீவ் இடம் தர முடிவுசெய்தார்.. அப்படி அவர் செய்த முடிவுதான் பிரபுவை இங்கு வர வைத்தது.. அவனுக்கு சிங்கனை பற்றிய வழக்கும் கார்த்திகேயனை மீட்பதும் பணியாக நியமிக்கபட்டது..

பிரபு சற்று துடிப்பான இளைஞன் கொஞ்சம் விளையாட்டானவனும் கூட ஆனால் அதீத கவனிப்பு திறனும் சிந்தனை திறனும் இருந்தது. அவன் கேஸில் தலையிட  எந்த தடைகளும் இருக்கக்கூடாது என்று கேட்டதன் மூலம் அவனின் அனுபவத்தை ரங்கராஜன் அளந்தறிந்தார்..

இனி பிரபுவின் கைகளில் பிரச்சனையை கொடுத்துவிட்டு ரங்கராஜன் திரும்பினார்..

பிரபுவும் தன் பங்கிற்கு வழக்கின் வரையறைகளை நன்கு படித்து அறிந்தான் .
முதல்கட்டமாக சென்ட்ரல் ரயில்வே காவல்துறை இவனை எப்படி கைது செய்தது என்று விசாரிக்க சென்னை சென்றிருந்தான்.
.

சென்ற பிரபுவும் 6 நாட்களாகியும் திரும்பவில்லை என்ற செய்தி ரங்கராஜனை அடைய அவர் நிலைகுழைந்து போனார் யார் உள்ளே வந்தாலும் காணாமல் போகிறார்களே என்று வருந்தினார்.. சரி இதற்கு அரசின் சில அனுமதியொடு ஒரு தனிப்படை அமைக்க எண்ணினார்.. ஆனால் அரசோ சிபிசிஐடி யிடம் தர சொன்னது. எப்படியோ பேசி தானே நடத்துவதாக வந்துவிட்டார்..

இனி செய்வதறியாது திகைத்தவர்.. ஒரு பார்டியில் வஜ்ரவேலை சந்தித்தார்..அவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் கேஸ் என்னிடம் கைமாறியது.. நான் நானேதான்  ..

#தொடரும்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم